கணவன் தன் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே பணிபுரிய முடியுமா?

0

’இந்தியப் பெண்கள் பணத்தை வேறுபட்ட விதத்தில் கையாள்கின்றனர்’ என்கிறார் ’மிண்ட் மணி’ கன்சல்டிங் எடிட்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவர் மோனிகா ஹாலன்.

இந்தியப் பெண்கள் தங்களது முதலீட்டையும் இருப்புநிலை கணக்கையும் ஏன் முறையாக வைத்திருக்கவேண்டும் என்பது குறித்து பேசுகிறார். சமீபத்தில் #LetsTalkMoney என்கிற புத்தகத்தை வெளியிட்டார். இது தனிநபர் நிதி திட்டமிடலுக்கான வழிகாட்டியாக விளங்குகிறது.

இந்த வீடியோ கட்டுரை மோனிகா ஹாலன் உடனான #HerMoney தொடரின் ஒரு பகுதியாகும். இது இந்தியப் பெண்களைப் பற்றியும் அவர்கள் பணத்தை கையாளும் விதம் குறித்தும் ஆராய்கிறது. இந்தப் பகுதியில் இந்திய கணவன்மார்கள் எவ்வாறு தங்களது மனைவிகளுடன் வீட்டிலேயே பணிபுரியலாம் என்பது குறித்து அலசுகிறது.

யுவர்ஸ்டோரி : கணவர் எவ்வாறு குடும்பத்தில் பங்களிக்கமுடியும்?

மோனிகா ஹாலன் : ஆண்களைக்காட்டிலும் பெண்கள் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் சிறப்பாகக் கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள். வீட்டு வேலைகளிலோ அல்லது குழந்தை பராமரிப்பிலோ ஆண்கள் பங்களிப்பு இருக்கக்கூடாது என்பதை இது உணர்த்தவில்லை.

ஆண்கள் ஏராளமான விதத்தில் பங்களிக்கலாம். அம்மாவிற்கு குழந்தையுடன் உறுதியான பிணைப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் குழந்தையுடன் செலவிடும் முதல் ஐந்து ஆண்டு காலம் மிகவும் அற்புதமானதாகும். இது குழந்தையின் உணர்வுரீதியான ஆரோக்கியத்திற்கு உதவும். எனினும் குழந்தை வளர்ப்பில் கணவன் பங்களிக்ககூடாது என்பது பொருளல்ல. கணவன் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் மனைவி தனக்கான நேரத்தை செலவிடமுடியும். பணிக்குச் செல்லும் அம்மாவாக இருந்தால் அவரது கணவர் குழந்தை பராமரிப்பில் செலவிடும் மூன்று முதல் ஐந்து மணி நேரத்தை அவர்கள் தங்களுக்காக பிரத்யேகமாக செலவிடலாம்.

யுவர்ஸ்டோரி : உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏழு ஆண்டுகளில் பணியில் இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள். இது உங்களது வீட்டின் நிதிநிலையையும் உங்களது வாழ்க்கைமுறையையும் பாதிக்கவில்லையா?

மோனிகா ஹாலன் : எங்களுக்கு பணத்தேவை இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய மகளுக்கு ஒரு வயதாகியிருந்தது. அவளுடன் நேரம் செலவிடமுடியவில்லை என வருந்தினேன். அதே சமயம் பணியிலும் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எனவே குழப்பமாக இருந்தது. வீட்டில் குழந்தையின் அருகில் இருப்பது அவசியம் என நினைத்தேன்.

அந்த சமயத்தில்தான் வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்தோம். எங்களது குடும்பச் சூழலும் மாறியது. என்னுடைய கணவரைக்காட்டிலும் நான் அதிகம் சம்பாதித்தேன். அடுத்தகட்ட நடவடிக்கையை நினைத்து வியந்தோம். என் கணவர் அவரது வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பதாகக் கூறினார். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது உங்களால் சுதந்திரமாகவும் அதே சமயம் நியாயமாகவும் முடிவெடுக்கமுடியும்.

இருப்பினும் என்னுடைய மகள் அப்பாவைக் காட்டிலும் அம்மா அருகில் இருப்பதையே விரும்பினார். அப்போதுதான் நான் பணியில் இருந்து இடைவெளி எடுப்பது குறித்து யோசித்தேன்.

இப்படிப்பட்ட விஷயங்களை திறந்த மனநிலையுடன் அணுகும்போது நீங்கள் கவனமாக தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் பணியிலிருந்து இடைவெளி எடுக்கும் அந்த காலகட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம். அதிகம் கற்கலாம், அதிகம் படிக்கலாம், வாழ்க்கையில் வேறுபட்ட விஷயங்களில் ஈடுபடலாம். என்னுடைய தீர்மானத்தால் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு பணியை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினேன்.

குழந்தையுடன் நேரம் செலவிட நான் எடுத்துக்கொண்ட இடைவெளிதான் என்னுடைய தற்போதைய நிலையை எட்ட உதவியது. நீங்கள் உங்களது வழக்கமான பணியிலிருந்து சற்றே நிதானித்தால் உங்களது செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்யமுடியும். நான் நிதி தொடர்பாக படித்தேன். தனிநபர் நிதி சார்ந்து ஆழமாக தெரிந்துகொண்டேன். சிறு பணிகளை ஆராயத் துவங்கினேன். நிதித்துறையில் மக்களுக்கு பயிற்சியளித்தேன். இரண்டு நபர்களின் வருவாயுடன் இயங்கி வந்த குடும்பம் ஒரு வருவாயாக மாறும்போது, அது எளிதாக இருக்காது. எனவே கூடுதலாக சிறிதளவு சம்பாதிக்க பல்வேறு பணிகளில் ஈடுபட நேரும்.

என்னுடைய மகளுக்கு சுமார் ஏழறை வயதானபோது அவர், “எல்லா அம்மாக்களும் வேலைக்கு செல்கின்றனர். என்னுடன் இருக்க ஒரு அக்காவை நியமித்துவிட்டு நீங்களும் பணிக்குச் செல்லுங்கள்,” என்றார். அதன் பிறகு நான் பணிக்குச் செல்லத் துவங்கினேன்.

கட்டுரை : தேவிகா சிட்னிஸ் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL