தன்னார்வ அமைப்புகளுக்கு உதவக்கூடிய மென்பொருளை உருவாக்கி உதவும் த்வனி!

“பெரும்பாலான களப்பணியாளர்களின் நேரம் தரவு சார்ந்த வேலைகளுக்கே போய்விடுகிறது. எனவே தான் தரவு சார்ந்த வேலைகளை எளிமைப்படுத்த ஐசிடி மென்பொருள் தீர்வினை வடிவமைத்திருக்கிறார்கள்.

0

ஸ்வப்னில் அகர்வால் மற்றும் சுனந்தன் மதன் ஆகிய இருவரும் ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் படித்துக்கொண்டே கீழ்மட்ட அமைப்புகளின் பணிகளை கணினிமயப்படுத்தும் சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். தங்கள் படிப்பு முடியும் தறுவாயில் அகா கான் கிராமப்புற ஆதரவுத்திட்டத்தை அணுகினார்கள்.அவர்கள் மூலமாக தென் குஜராத்தில் உள்ள 150 கிராமங்களில் பணியாற்றினார்கள். “பெரும்பாலான களப்பணியாளர்களின் நேரம் தரவு(data) சார்ந்த வேலைகளுக்கே போய்விடுகிறது. அவர்கள் யாருக்காக வேலை பார்க்கிறார்களோ அவர்களோடு பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.” என்கிறார் ஸ்வப்னில். எனவே தான் தரவு சார்ந்த வேலைகளை எளிமைப்படுத்த ஐசிடி (ICT) எனப்படும் தகவல் தொழில்நுட்ப பறிமாற்றத்திற்கான புது மென்பொருள் தீர்வை வடிவமைத்திருக்கிறார்கள்.

கிராமப்புற மேம்பாட்டுக்காக உழைக்கும் தன்னார்வ அமைப்புகள் மிகக்குறைந்த அளவிலேயே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஸ்வப்னில் கவனித்தார். இது அவருக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது.”சில நேரம் அவர்களுக்கு திறமையான ஆட்கள் கிடைப்பதில்லை. அது அவர்கள் பணியாற்றும் இடத்தை பொருத்ததாக கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் பணி மிகப்பெரியது. "நகரத்தில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் எல்லாம் ட்ராப்பாக்ஸ் (dropbox), கூகிள் ட்ரைவ் என்று வளர்ந்துவிட்டார்கள். ஆனால் இவர்களோ எல்லாவற்றுக்கும் பேப்பரையே பயன்படுத்துகிறார்கள்” என்கிறார். இப்போது தன்னார்வ அமைப்புகளுக்காகவே பிரத்யேகமாக பல தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. “சிறு அமைப்புகள் இதையெல்லாம் பயன்படுத்துவதில்லை என தெரிந்துகொண்டோம். இதற்காகவே பேப்பர் வீணடிப்பை தடுக்கவும், தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை சுத்தீகரிப்பதற்கும், தற்காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் எங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கினோம்” என்கிறார்.

”இது எங்களால் செய்ய முடிந்த பெரிய விஷயம்” என்கிறார். காரணம் இது போன்ற சிறு சிறு பணிகளுக்கு இவர்களுக்கு வரும் வருமானம் போதாது என்பதே. “நாங்கள் இருவரும் ஒரு வேலைக்கு சென்று பகுதிநேரமாக இதை செய்யலாமா என யோசித்தோம்” என்கிறார். சுனந்தன், தன்னார்வ அமைப்பு வேலையை பார்க்க, ஸ்வப்னிலோ வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். ”மூன்று மாதங்கள் இப்படி செய்தது எங்கள் இருவருக்கும் திருப்தியளிக்கவில்லை” எனவே இருவரும் சேர்ந்து த்வனி கிராமப்புற தகவல் அமைப்பு (Dhwani Rural Information System) என்ற நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கினார்கள். இதுவும் பகுதிநேர அமைப்பாக தான் துவங்கினார்கள். எனினும் வேறு ஒரு நிலையான வேலை தேவை என நம்பினார்கள். “ஆனால் அதுவும் சரி வரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு த்வனியில் மட்டுமே கவனம் செலுத்தச்சொல்லி எல்லோரும் அறிவுரை அளித்தார்கள்”.

சில மாதங்கள் கழித்து துபாயில் இருந்து திரும்பிய ஸ்வப்னில், சுனந்தனோடு சேர்ந்து பல தன்னார்வ அமைப்புகள், சமூக தாக்கம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து சமூகத்தின் தேவைகளை புரியவைத்தார்கள். ”நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை உணர வைத்தோம். அதற்கான தேவை இருந்தது” என்கிறார்.

ஸ்வப்னில் அகர்வால் மற்றும் சுனந்தன் மதன், த்வனி கிராமப்புற தகவல் அமைப்பின் நிறுவனர்கள்
ஸ்வப்னில் அகர்வால் மற்றும் சுனந்தன் மதன், த்வனி கிராமப்புற தகவல் அமைப்பின் நிறுவனர்கள்

ஒருவருடத்திற்கு பிறகு த்வனியிடம் பத்து வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். "நாங்கள் புதிதாக ஒன்றையும் கண்டுபிடிக்க விரும்பவில்லை” எனும் அவர் ”அக்கவுண்டிங் மென்பொருள் மற்றும் டேடாபேஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இருப்பவர்களை இணைத்து நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய மென்பொருளை உருவாக்கினோம். இவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்ள நிறைய நேரம் செலவிட்டோம். ஓடிகே(OTK) அல்லது க்ளவுட் டெலிபோனி என எதாவது ஒன்றிற்கான தேவையாக இருக்கலாம்.” என்கிறார். இதன் ஒரு பகுதியாக இதற்கான தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்றிருக்கார்கள்.

"மென்பொருள் நிறுவனங்கள் பலவும் இது போன்ற அமைப்புகளுக்கு உதவுவதில்லை. எல்லோருமே பணத்தை அடிப்படையாகக்கொண்டே இயங்குகிறார்கள். நாங்கள் செய்யும் எல்லாமே பணம் சார்ந்ததல்ல,சேவை சார்ந்தது.” என்கிறார். இதிலும் வருமானம் இருக்கிறது. ஆனால் அது போதாது. "எங்கள் தொழில்நுட்பம் சில சாதாரண பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தரவை சேகரிப்பது, தரவை ஆய்வு செய்வது,சில புத்திசாலித்தனமான வேலைகளும் ஐவிஆர் தொழில்நுட்பமும் அடங்கியது”. ஒரே ஒரு கடினமான பிரச்சினை தீர்க்க முடியாததாக இருக்கிறது. அது சர்வே அதாவது ஆய்வு மேற்கொள்ள, இன்னும் காகிதத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என்பதே. இதையும் மாற்ற விரும்புகிறார்கள். ஏற்கனவே சந்தையில் சில ஐசிடி தொழில்நுட்பம் கிடைக்கிறது, சில நிறுவங்களின் தேவைக்கேற்ப அதையே பரிந்துரைக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக ஸ்வப்னில் சொல்வது தரப்படுத்துதல் தான். இவர்களின் மென்பொருள், பெரும்பாலான நேரங்கள் தரவு சார்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் அது முதலீட்டார்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், சமூகத்தோடு நேரடியாக உரையாட சந்தர்ப்பம் தருவதில்லை. எங்களின் நோக்கம், களப்பணியாளர்களை, அறிக்கைக்காக இயந்திரத்தை போல வேலை செய்வதிலிருந்து விடுபடுத்தி, அதிக நேரம் மக்களிடம் பணியாற்ற ஈடுபடுத்த வேண்டும் என்பதே ஆகும். ”இது தான் எங்கள் இலக்கு” என்கிறார். அதே போல இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துபவர்களுக்கும் எளிமையாக இருக்க வேண்டும் எனவும் யோசித்திருக்கிறார்கள். “எங்கள் தொழில்நுட்பம் மாநில மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதன் மூலம் ஓரளவு படித்தவர்களும் எங்கள் மென்பொருளை பயன்படுத்த முடியும்” என்கிறார்.

இவர்களின் தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதிலும்,பொறுப்புக்கூறலிலும் மிக முக்கிய பங்காற்றுகிறது.”முதலீட்டாளர்களை சரிகட்ட கூட்டு உடன்படிக்கை எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த ஒரு இடம் தான் பிரச்சினையான ஒன்றாக இருக்கிறது” என்கிறார் ஸ்வப்னில். ஸ்வப்னிலை பொருத்தவரை பெருமுதலீட்டாளர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்கிறார். ஆனால் சிறு நிறுவனங்கள் எக்சல்ஷீட்டே எல்லாம் செய்துவிடும் என்று இயல்பாகவே நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அரசாங்கத்தோடு தொடர்புடைய எல்லாமே பந்து உருட்டும் விளையாட்டாக இருக்கிறது. "முதலில் அது அதிகாரத்துவம், மற்றொன்று மேலாண்மை சார்ந்த பிரச்சினை. வெளிப்படைத்தன்மை சார்ந்து நாங்கள் கவனம் செலுத்தும்போது பணிபுரிபவர்கள் நாங்கள் அவர்களை கண்காணிக்கிறோம் என புரிந்துகொள்கிறார்கள்.” இவர்களின் தாய்-சேய் கண்காணிப்பு தொழில்நுட்பம், மத்திய பிரதேச அரசால் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது ஒரு உதாரணம்.”அந்த சமயம் ஒரு ஐபிஎஸ் அதிகாரி அழுத்தம் கொடுத்தார். அவர் மாற்றப்பட்ட உடன் வந்த புது அதிகாரி இதில் ஆர்வம் காட்டினார்” என்கிறார்.

த்வனி ஆர்.ஐ.எஸ் குழு (இடமிருந்து வலம்) ம்ருதுல் தர்வட்கர்,தொழில்நுட்ப தலைமை,சுனந்தன் மதன்,இணை நிறுவனர்,ஸ்வப்னில் அகர்வால்,இணை நிறுவனர்,பத்மா ரெட்டி,தொழில் முன்னேற்றம்
த்வனி ஆர்.ஐ.எஸ் குழு (இடமிருந்து வலம்) ம்ருதுல் தர்வட்கர்,தொழில்நுட்ப தலைமை,சுனந்தன் மதன்,இணை நிறுவனர்,ஸ்வப்னில் அகர்வால்,இணை நிறுவனர்,பத்மா ரெட்டி,தொழில் முன்னேற்றம்

“சில சமயம் அவர்களின் வேலையை மறுவரையறை செய்வதிலேயே நேரம் சரியாக இருக்கிறது. எனவே அவர்களோடு நிறைய நேரம் செலவிடுகிறோம். ஆனால் அதற்கேற்ப நாங்கள் வசூலிக்க முடியாது. ஆனால் எங்களுக்கு இதுவே போதும். காரணம் இதை நாங்கள் செய்யாவிட்டால் வேறு யாருமே செய்யப்போவதில்லை” என்கிறார்.

”நாங்கள் எங்களை வளரும் தொழிற்பண்பட்டவர்கள் என்றே அழைத்துக்கொள்கிறோம், ஏனென்றால் நாங்கள் வெறும் ஐசிடி தொழில்நுட்பம் மட்டுமே வழங்குவதில்லை. பெரும்பாலான ஐடி நிறுவங்கள் மென்பொருள் மேம்பாடு பற்றி எதுவுமே தெரியாதவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. அவர்கள் கிராமப்புற யதார்த்தத்தை புரிந்துகொள்வதில்லை. நாங்கள் அழுத்தமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு உண்மையாக என்ன தேவை என்பதை புரிந்துகொள்ளவே அவர்களோடு நேரம் செலவிடுகிறோம்” என்பதாக முடித்துக்கொள்கிறார்.