இந்தியாவிற்கு இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்க சாஃப்ட்பேங்க் மாசயோஷி சன் அறிவிப்பு!

0

சாஃப்ட்பேங்க் செயல் அதிகாரி மாசயோஷி சன் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பிறகு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சோலார் அலையன்ஸ் உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவித்தார். 

சாஃப்ட்பேங்க், பாரதி எண்டர்பிரைஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி ஆகியவற்றின் ஜாயிண்ட் வென்ச்சரான எஸ்பிஜி க்ளீண்டெக் இந்தியாவில் வளர்ந்துவரும் போக்கான சுற்றுச்சூழலுக்கு பலனளிக்கும் வகையிலான பொருளாதாரத்தில் (clean economy) செயல்பட்டு வருகிறது.

25 ஆண்டுகளுக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்திற்குப் பிறகு சாஃப்ட்பேங்க் சூரிய சக்தி திட்டங்களில் இருந்து இலவச மின்சாரம் வழங்கும் என கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இரண்டாவது ரீஇன்வெஸ்ட் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

சூரிய சக்தி திட்டத்தின் வாழ்க்கை சுழற்சியானது 80 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றார். 

முதல் ஐந்தாண்டுகளில் திறன் குறைந்த பிறகு அதன் மீதமிருக்கும் திட்ட காலத்தில் 85 சதவீதத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என ’தி ஹிந்து பிசினஸ் லைன்’ தெரிவிக்கிறது.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ISA) உறுப்பினர்கள் உலகம் முழுவதும் பரந்துவிரிந்து அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களும் அதன் சேவையை பெற தகுதியுள்ளவர்களாக்குவதில் கவனம் செலுத்தும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 70 நாடுகளுடன் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டுனீஷியா, நேபால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இணைய உதவும்.

”நிலமும் சூரியஒளியும் இருக்கும்வரை நான் உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவேன்,” என்றார்.

இந்தியாவில் சூரியஒளி மின்சாரத்தின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 2.44 ரூபாயாக இருப்பதால் உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் சூரியஒளி மின் உற்பத்திக்கான செலவு இந்தியாவில் மிகவும் குறைவு என சமீபத்தில் Livemint குறிப்பிடுகிறது.

சுமார் 42 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களில் முதலீடு செய்ய சாதகமான இடமாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அடுத்த நான்காண்டுகளில் பசுமை ஆற்றல் துறையில் 70 முதல் 80 மில்லியன் டாலர் வணிக வாய்ப்புள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL