வீட்டில் இருந்து சுயதொழில் புரியும் பெண்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் ‘சுயசக்தி விருதுகள்’ அறிவிப்பு!

0

இப்போதுள்ள வாழ்க்கை சூழலில் வேலைக்கு செல்வதில் ஆயிரம் சிரமங்கள் இருப்பதால் பல பெண்கள் வேலையை விடும் முடிவை எடுக்கின்றனர். அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஒரு தொழில் தொடங்குவதன் மூலம் தங்கள் கனவுகளை தொடர நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்களை பொருளாதார ரீதியாகவும் பிறரை சார்ந்திராமல் சுயகாலில் நிற்கவும் அவர்களின் தொழில் உதவுகிறது. 

வீட்டிலிருந்து கொண்டே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் பெண்கள் ‘ஹோம்ப்ரூனர்’ (Homepreneur) என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய சூழலில் பல காரணங்களால் வெளியே சென்று பணிபுரிய முடியாத பெண்கள், வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த விஷயத்தை தொழிலாக செய்து வருமானம் ஈட்டி அதில் வெற்றியும் காணத்தொடங்கி விட்டனர். 

வீட்டில் இருந்து கொண்டு அமைதியாக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இப்பெண்களை பாராட்டி, அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும் வகையிலும், ‘ப்ராண்ட் அவதார்’ எனும் நிறுவனம் ’சுயசக்தி விருதுகள்’ என்ற மிகப்பெரிய சமூக நிகழ்வை நடத்த உள்ளனர். ’ஹோம்ப்ரூனர்’-களாக பல துறைகளில் இருக்கும் பெண்களை கவுரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். ப்ராண்ட் அவதாருடன் ‘நேடிவ்லீட் பவுண்டேஷன்’ என்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்கும் அமைப்பும் இந்நிகழ்வில் கைக்கோர்த்துள்ளது. 

‘சுயசக்தி விருதுகள்’; விவசாயம், கலை, மற்றும் பாரம்பரியம் போன்ற துறைகளில் தொழில் புரிந்து வெற்றிகரமாக திகழும் பெண்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும். தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு, அவரின் தொழிலுக்கு தேவையான வழிகாட்டுதல்களை நேடிவ்லீட் பவுண்டேஷன் வழங்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.  

​'சுயசக்தி விருதுகள்' Homepreneur Awards

தமிழகத்தில் உள்ள வீட்டில் இருந்து சுயதொழில் புரியும் சாதனைப் பெண்மணிகளை கவுரவிக்கும் சுயசக்தி விருதுகள் விழாவை வரும் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த ப்ராண்ட் அவதார் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விருதுகளுக்கு தகுதியான பெண்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் உங்களுக்கு தெரிந்த சுயதொழில் புரியும் பெண்களின் விவரத்தையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியும். 

'சுயசக்தி' விருதுகள் பற்றிய முழு விவரங்கள் : SuyaSakthi.com

வீட்டில் இருந்து சுயதொழில் புரியும் பெண்கள் விண்ணப்பிக்கும் படிவம் 

உங்களுக்கு தெரிந்த சுயதொழில் புரியும் பெண்களை நியமிக்கும் படிவம்

நடுவர் குழு :

விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் விவரித்தை பரிசீலித்து, தொழிலில் அவர்களின் நிலை மற்றும் வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு நடுவர் குழு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள். 

டாக்டர் மரியஜீனா ஜான்சன்- துணை வேந்தர், சத்யபாமா பல்கலைக்கழகம், வீணா குமாரவேல் - இணை நிறுவனர், நேச்சுரல்ஸ் சலூன், பூர்ணிமா ராமசாமி- தேசிய விருது பெற்ற வடிவமைப்பாளர், தொழிலதிபர் ரோஹிணி மணியன் - குளோபல் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடட், திவ்யதர்ஷினி - நிகழ்ச்சி தொகுப்பாளர், அருணா சுப்ரமணியம்- அறங்காவலர், பூமிகா ட்ரஸ்ட், டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் - நிறுவனர்,தலைவர் அவதார் கரியர் கிரியேட்டர்ஸ், ஹேமா ருக்மணி - தலைமை நிர்வாக அதிகாரி , தேனாண்டாள் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் நளினா ராமலஷ்மி- பேரண்ட் சர்கிள் நிறுவனர் ஆகியோர் தேர்வுக் குழுவில் இருக்கின்றனர். 

இந்த விருது விழா, மிகப் பிரம்மாண்ட வெற்றி விழாவாக பங்குதாரர்களின் முழுமையான ஆதரவோடும், விருது பற்றிய பல வகையான ஊடக, வாய்மொழி மூலமாகவும், பல சாதனைகளை வீட்டிலிருந்து சுயதொழில் செய்து வரலாறு படைக்கும் பெண் சக்திகளை வெளிசத்துக்கு கொண்டுவரும் என்று திடமாக நம்புகிறது. 

சுயசக்தி விருதுகள் நிகழ்ச்சியின் முதல் வெற்றிக்கான சாட்சியாய், பல ஸ்பான்சர்கள் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்க முன் வந்துள்ளனர். நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா, சுயசக்தி விருதுகளின் டைட்டில் ஸ்பான்சராக சேர்ந்துள்ளனர். நேச்சுரல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சி.கே.குமாரவேல், பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தனது முற்போக்கு சிந்தனைகளுக்கும், பெண்களை தொழில்முனைவராக்குவதிலும் முன்னோடி ஆவார்.  

சுயசக்தி விருதுகள் நிகழ்ச்சியின் அடுத்த முக்கிய ஸ்பான்சராக சத்யபாமா நிறுவனத்தினர் இணைந்துள்ளனர். அதன் இணை துணைவேந்தர் திருமதி.மரியா ஜீனா ஜான்சன், பெண் தொழிலதிபர்களில் முக்கியமாக கருதப்படுபவர். மேலும் பெண் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் ஊக்கசக்தியாகவும் இருப்பவர்.

இந்நிகழ்ச்சிக்கான கோ-ஸ்பான்சராக ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனமும், அசோசியேட் ஸ்பான்சராக லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் தைரோகேர் நிறுவனம் இணைந்துள்ளது. 

யுவர்ஸ்டோரி தமிழ் இந்நிகழ்வின் டிஜிட்டல் பார்ட்னராக இணைந்துள்ளது. 

ப்ராண்ட் அவதார்

சுயசக்தி விருதுகள் எனும் இந்த சமூக நிகழ்ச்சி, ப்ராண்ட் அவதார் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹேமசந்திரனின் வழிகாட்டுதலின் படி திட்டமிட்டப்பட்டு வழிநடத்தப்படுகிறது. இவர் சென்னையில் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவர்களில் ஒருவராகவும் இளம் வயதிலேயே பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தவராக அறியப்படுபவர்.

ப்ராண்ட் அவதார் மூலம் ஹேமசந்திரன், பல முக்கிய நிகழ்வுகளை நடத்தி பலரது கவனத்தை ஈர்த்தவர். அண்மையில் அவர் நடத்திய, ’ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு’ விருதுகள் விழாவில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய வெற்றியாளர்களை கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 

சுயசக்தி விருதுகள் முக்கிய தேதிகள்;

 ஜூன் 3,2017 : முதல் நடுவர் குழு கூட்டம் / குழுவினரிடையே இணையதளம் வெளிபீடு

 ஜூன் 20-2017 : விருதுகளுக்கான பதிவுகள்  ஆரம்பம்

 ஜூலை 19 -2017 : பதிவு/ விண்ணப்பம் இறுதி நாள்

 ஆகஸ்ட் 6,2017 : சுயசக்தி விருது விழா –லேடி ஆண்டாள் ஆடிட்டோரியம், சேத்துப்பட்டு