சுகாதாரமான, தரமான இறைச்சி விற்பனை சந்தையில் இயங்கும் சென்னையைச் சேர்ந்த ‘TenderCuts’ 

சென்னையைச் சேர்ந்த ’TenderCuts’ தனது வலுவான தொழில் நுட்பத்தைக் கொண்டு மாமிசம் மற்றும் கடல்சார் உணவுப் பிரியர்களுக்கு சுகாதாரமான தரமான உணவை வழங்குகிறது!

0

2015-ம் ஆண்டு துவக்கத்தில் நிஷாந்த் சந்திரன், இந்திய வணிகர்கள் கட்டணம் செலுத்த இ-சேவையளிக்கும் EBS-லிருந்து வெளியேறி ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த PoS டெர்மினல் சந்தை Ingenico-வில் இணைந்தார். இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைத்தார். அந்தப் பயணத்தின்போது அன்கே உள்ளூர் மாமிச சந்தைகளைக் கண்டார். அவை அற்புதமாக இருந்தது.

TenderCuts நிறுவனர் நிஷான்ந்த் சந்திரா (இடது) உடன் செஃப் தாமு
TenderCuts நிறுவனர் நிஷான்ந்த் சந்திரா (இடது) உடன் செஃப் தாமு

சந்தையில் பங்களிப்பு

2016 இந்திய உணவு அறிக்கையின்படி இந்திய மாமிச சந்தையின் அளவு மிகப்பெரிய அளவான 2 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுவதாகவும் 2020-ல் இந்த அளவு மும்மடங்காகப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. எனினும் இந்தச் சந்தையில் 90 சதவீதம் ஒழுங்குப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இதை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஸ்டார்ட் அப்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இந்தப் பகுதியில் செயல்படுவதில் வியப்பேதுமில்லை. Licious 10 மில்லியன் டாலர் மதிப்பில் B சுற்று நிதியை உயர்த்தியுள்ளது. FreshToHome இந்தத் துறையில் செயல்படும் மற்றொரு ஸ்டார்ட் அப்பாகும். மேலும் பிக்பாஸ்கெட்டின் மாமிச பிரிவையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஃப்ரெஷ் மாமிசத்திற்கான தேவை மக்களிடையே உள்ளது. அடுத்ததாக பாரம்பரிய முறையில் விற்பனையாளர்களை மையமாகக் கொண்டிருக்கும் சந்தையில் தரமான மாமிசம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் இந்தியாவில் ஆன்லைன் மாமிச விற்பனை சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ப்ரோட்டீன் எடுத்துக்கொள்வது அதிகமானதாலும் குளிரூட்டப்பட்ட மாமிசத்திற்கு பதிலாக ஃப்ரெஷ் மாமிசத்தையே மக்கள் விரும்புவதாலும் பாரம்பரிய மாமிச சந்தைகள் சுகாதாரமற்று செயல்படுவதாலும் இப்படிப்பட்ட வணிகங்கள் முளைத்துள்ளன. ஆஃப்லைனை விட இவற்றில் விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் தலையீடு சிறப்பாக உள்ளது.

தரத்தில் கவனம் செலுத்துதல்

சில்லைறைக் கடைகள் வாயிலாக டெண்டெர்கட்ஸ் விற்பனை செய்கிறது. மேலும் வலைதளம் மற்றும் கால் செண்டர்கள் மூலம் நேரடி ஆர்டர்களைப் பெறுகிறது. விரைவில் மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தளம் ஃப்ரெஷ்ஷாகவும் சுகாதாரமாவும் பதப்படுத்தப்பட்டு, ரசாயனங்கள் அல்லது பாதுகாப்புப் பொருட்கள் எதையும் சேர்க்காமல், RO சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்ட மாமிசம் அல்லது கடல்சார் உணவை விற்பனை செய்கிறது. கோல்ட் செயின் (Cold chain) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாமிசத்தை ஃப்ரெஷ்ஷாக பாதுகாக்கிறது.

உள்ளூர் சமூகத்தினரிடமிருந்து மாமிசங்கள் பெறப்பட்டு பயிற்சிபெற்ற நிபுணர்களால் அவர்களது நவீன தானியங்கி வசதிகொண்ட இடத்தில் RO சுத்திகரிக்கப்பட்ட நீரினால் சுத்தம் செய்யபப்பட்டுகிறது. 90 நிமிடங்களில் வாடிக்கையாளர்களின் வீட்டில் விநியோகம் செய்யப்படும் என்று இவர்களது குழு உறுதியளிக்கிறது.

குழுவை அமைத்தல்

திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்ட பின் நிஷாந்த் தனது நண்பர்கள், உடன் பணிபுரிவோர் வாயிலாகவும் பரிந்துரைகள் வாயிலாகவும் குழுவை உருவாக்கினார். லாஜிஸ்டிக்ஸ், மார்கெட்டிங், உணவு பாதுகாப்பு, பணியிலமர்த்துதல் என பல்வேறு பின்னணிகளில் D.E.ஷா, SAP, பூமா, சுகுணா, மெட்ப்ளஸ், சப்வே போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்ட ஒன்பது பேர் அடங்கியது டெண்டர்கட்ஸ் முக்கியக் குழு.

மேலும் டாக்டர் பசுபதி உணவு பாதுகாப்பு ஆலோசகராக ஆலோசனை வழங்கி டெண்டர்கட்ஸை வாரம்தோறும் ஆடிட் செய்கிறார். Parikshan என்கிற இவரது நிறுவனம் மூலம் ஜிஆர்டி ஹோட்டல்ஸ், மெரியாட் மற்றும் ரெயின் ட்ரீ ஹோட்டல் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். 

TenderCuts குழு
TenderCuts குழு

பிரபல செஃப் தாமு ‘டெண்டர்கட்ஸ்’ நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு அதை பிரபலப்படுத்தியும் வருகிறார்.

வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டம்

கடந்த வருடம் ஜனவரி மாதம் சென்னையில் ஒரு ஸ்டோரை அறிமுகப்படுத்தி இக்குழுவினர் சோதனை முயற்சியில் இறங்கினர். செப்டம்பர் மாதம் முதல் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவடைந்து வருகின்றனர். 25,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

“விரைவில் B2B வருவாய் மாதிரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சில்லறை வர்த்தகங்கள் மூலமாக விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இஷா ஹோம்ஸ் எம்டி சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஏஞ்சல் நிதியுதவி பெற்றுள்ளோம். இவர் 4.6 கோடியை முதலீடு செய்துள்ளார்.” என்றார் நிஷாந்த்.

டெண்டர்கட்ஸின் பின்னனியில் செயல்படும் தொழில்நுட்ப அமைப்பு சுறுசுறுப்பாகவும் பேரண்ட்-சைல்ட் SKU ரிலேஷன்ஷிப்பை கண்காணிக்கக்கூடிய வலுவான சரக்கு மேலாண்மை முறையுடனும் செயல்படுகிறது. விரயங்களைக் குறைக்க உதவி செய்வதுடன் விரைவான விநியோகத்தை உறுதிசெய்கிறது.

”அதிக பயனுள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விரயத்தைக் குறைக்கும் விதத்தில் மாமிசங்கள் கட் செய்யப்படுகிறது. கணிக்கும் வழிமுறைகளைகளின் உதவியுடன் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் விதத்தை முன்கூட்டியே கணிப்பதால் எங்களது ப்ராடக்ட் கிடைக்கப்பெறாமல் போகும் நிலையையும் விரயமாவதையும் குறைக்கமுடிகிறது. வகைப்படுத்துதல் மற்றும் தொகுத்தல் வழிமுறைகள் முறையாக இருப்பதால் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு ஒவ்வொரு ஓட்டுநருக்கான ஆர்டகளின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. இதனால் விநியோகத்திற்கான செலவும் குறைகிறது.” என்றார் நிஷாந்த்.

தரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வெள்ளாடு/செம்மறிஆடு பண்ணைக்கான விநியோக சங்கிலியில் தங்களை இணைத்துக்கொள்ளும் பணியிலும் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது. கடல்சார் உணவுகளுக்கான விநியோக சங்கிலியைப் பலப்படுத்த மீன்பிடிப்படகுகளுடன் நேரடியாக இணைந்துள்ளது. ஒட்டுமொத்த செயல்முறைகளும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு தடையற்று செயல்படுகிறது. இறுதியாக நிஷாந்த்,

”தற்போது வெள்ளாடு/செம்மறிஆடு பண்ணைக்காக விநியோக சங்கிலியில் எங்களை இணைத்துக்கொள்வதிலும், கடல்சார் உணவுகளின் விநியோக சங்கிலியைப் பலப்படுத்துவதிலும், அடுத்த வருடத்திற்குள் மற்ற நகரங்களில் விரிவடைவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த மூன்றாண்டுகளில் 100 கோடி ரூபாயை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்காக மிகப்பெரிய பிரச்சாரங்களை வானொலி, செய்தித்தாள், அவுட் ஆஃப் ஹோம் விளம்பரங்கள் (OOH), சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப ரீதியில் மேலும் வலுவடைந்து வாடிக்கையாளர்களுடன் தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார்.

இணையதள முகவரி: TenderCuts

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்