ஹரியானாவில் பேருந்து நடத்துனராக நியமிக்கப்பட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண்மணி!

0

ஹரியானா சாலை போக்குவரத்துக் கழகத்தின் (ஹரியானா ரோட்வேஸ்) வேலை நிறுத்தத்தால் பல்வேறு பாதிப்பும் ஏற்பட்டிருந்தாலும் 32 வயதான ஷர்மிளாவின் வாழ்க்கையில் இந்த போராட்டம் ஒரு வகையில் நம்பிக்கை அளித்துள்ளது.

இரு குழந்தைகளுக்கு தாயான இந்த மாற்றுத்திறனாளி பேருந்து நடத்துனராக பணியில் இணைந்துள்ளார். இவர் முதல் பெண் நடத்துனர் ஆவார்.

இந்த மாநிலம் இதுவரை இவ்வளவு நாட்கள் நீடித்த வேலை நிறுத்தத்தை சந்தித்ததில்லை. இதன் காரணமாக அரசாங்கம் புதிய ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் நியமிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பேருந்து நடத்துனராக நியமிக்கப்பட்ட இரு பெண்களில் ரிவாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளாவும் ஒருவர். மற்றொரு நடத்துனரான நிர்மலா ராணி சிர்சா-எல்லனாபாத் பாதையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி க்விண்ட் உடனான உரையாடலில் ஷர்மிளா கூறுகையில்,

”எனக்கும் என் கணவருக்கும் வேலை இல்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்து எட்டு முதல் பத்தாண்டுகளாகவே நான் வேலை தேடி வருகிறேன். இந்த வேலை வாய்ப்பு குறித்து கேள்விப்பட்டதும் விண்ணப்பித்தேன். எனக்கு பணி கிடைத்தது,” என்றார்.

ஷர்மிளாவின் ஒரு காலில் 40 சதவீதம் குறைபாடு உள்ளதாகவும் அதை நினைத்து மனம் தளரவில்லை என்றும் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில்,

”நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்களிடம் இருந்து அதிக ஆதரவும் மரியாதையும் கிடைக்கிறது. நான் ஈடுபட்டுள்ள பணியை நினைத்து மகிழ்கிறேன். நான் ஹரியானாவின் முதல் பெண் ஓட்டுநர். பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் முறை குறித்த பெரும்பாலான விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்,” என்றார்.

ஹரியானாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக தனியார் உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கம் 700 பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஹரியானா ரோட்வேஸ் ஊழியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் காராணமாக தினமும் 4,100 பேருந்துகளில் பயணிக்கும் சுமார் 12 லட்சம் பயணிகளுக்கு சேவையளித்து வந்த 19,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL