’மாஸ் மஹாராஜ்’ ரவி தேஜா சாதரண பின்னணியில் இருந்து சூப்பர் ஹீரோ ஆனது எப்படி?

0

தெலுங்கு திரைப்பட உலகில் மாஸ் நடிகராக பலரால் விரும்பப்படும் ரவி தேஜா அவ்வளவு எளிதாக இந்த நட்சத்திர அந்தஸ்தத்தை அடையவில்லை. ’மாஸ் மஹராஜ்’ என்று அன்புடன் தெலுங்கு மக்களால் அழைக்கப்படும் இவரின் வெற்றிக்கு பின்னால் தொடர் போராட்டங்களும், அதை அவர் உற்சாகத்தோடு கையாண்டு வந்து கதையும் இருக்கிறது. 

பட உதவி: IndiaForums
பட உதவி: IndiaForums

ஆந்திர பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா என்ற கிராமத்தில் பிறந்த ரவி தேஜா, இன்று தென்னிந்திய திரையுலகில் கொடி கட்டி பறப்பதற்கு அவரது கடும் உழைப்பும், தன்னடக்கமுமே காரணம். தெலுங்கு படங்களை தாண்டி ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்தவர் ரவி தேஜா. 

திரையை தெறிக்கவிடும் ரவி தேஜா

சிறு வயது முதலே சினிமா மீது காதல் கொண்ட ரவி தேஜா, அமிதாப் பச்சனை தன் முன்மாதிரியாக இன்றும் கொண்டிருக்கிறார். குழந்தையாக இருந்தபோதே அமிதாபை போல நடித்து காட்டி பார்வையாளர்களை அசத்துவாராம். ஒரு முறை அமிதாப் பட சீனை அப்படியே நடித்து காட்ட, வீட்டிற்கு தீ வைத்துள்ளார் ரவி தேஜா. அதிர்ஷ்டவசமாக அவரும் அவரது சகோதரர்களும் உயிர் தப்பியுள்ளனர். 

திரைப்படங்கள் மீதுள்ள அதீத ஆர்வத்தால், 11 வயதில் வீட்டை விட்டு ஓடி போன ரவி, பாலிவுட் திரையுலகில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் பெரும்பாலான இடங்களில் மறுக்கப்பட்டதால் வீடு திரும்பினார். 

சாதரன மருந்தாளரின் மகனாக பிறந்த ரவி தேஜாவின் குடும்பதாருக்கு சினிமா தொடர்பு ஏதும் இல்லை. அவரின் அப்பா வட இந்தியாவில் பல இடங்களில் பணிபுரிந்ததால் பள்ளிப்படிப்பை டெல்லி, ஜெய்பூர், மும்பை, போபால் ஊர்களில் படித்துள்ளார். விஜயவாடாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திரைப்பட வாய்ப்பு தேடி சென்னை வந்தார் ரவி தேஜா. 

சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் அவருக்கு திருப்தி கிடைக்கவில்லை. சில இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க வாய்ப்பும் கிடைத்தது.

கிருஷ்ண வம்சி என்ற பிரபல தெலுங்கு இயக்குனருடன் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது, அவரின் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ரவி தேஜா. இதன் மூலம் அவரின் திறன் வெளியுலகிற்கு தெரியவந்தது. நடிப்பில் தன்னம்பிக்கை வரத்தொடங்கியதை அடுத்து அவர் மற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். 

1999-ல் ஸ்ரீனு வைட்லா இயக்கிய நீகோசம் என்ற தெலுங்கு படத்தில் முன்னணி நடிகராக புக் ஆனார் ரவி. அதற்கு விருதும் பெற்ற அவரின் திரைப்பயணம் அதிலிருந்து மேலே செல்ல தொடங்கியது. 

ரவி தேஜா நடித்து பூரி ஜகன்னாத் இயக்கிய ‘இட்லு ச்ரவனி சுப்ரமணியன்’ படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இதுவே அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை படமாகியது. ’அவ்வுனு வல்லிதாரு இஷ்டபட்டாரு’, ‘இடியட்’, என்று தொடர் வெற்றிகளை கொடுத்த ரவி தேஜா, ஹேட்ரிக் கொடுத்து பலரின் மனம் கவர்ந்த ஹீரோ ஆனார்.

‘சண்டிகாடு லோக்கல்’ என்று அவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் அவர் நடித்த சண்டி என்ற ரோல் ஆந்திர இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலாமாக உள்ள பெயராகிவிட்டது. 

தற்போது ரவி தேஜா படங்களை தயாரிக்கவும் தொடங்கி அதிலும் ஹிட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவரின் கடும் உழைப்பும், சினிமா மீது கொண்டிருந்த காதலால் அவர் அடைந்த இடமும் இளைஞர்கள் பலரை கவர்ந்து ஊக்கமளித்துள்ளது. மனதளவில் ஒன்றை சாதிக்கவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முயற்சி, உழைப்பை கொடுத்தால் எந்த உயரத்தையும் அடையமுடியும் என்பது ரவி தேஜா மூலம் தெளிவாகிறது. 

(இக்கட்டுரை Kenfolios தளத்தில் வெளியாகிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.)

Related Stories

Stories by YS TEAM TAMIL