ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க சிமெண்ட், இரும்பு தயாரிக்க முயற்சிக்கும் 'குளோரோ எர்த்'

0

“நான் மரப்பலகை தயாரிப்பேன்” என்று ஓர் ஆண்டுக்கு முன்பு கூறியவர் குளோரோ எர்த் நிறுவனர் டேவிட் ஜேம்ஸ். இன்று அவர் அதில் இரும்பையும் சிமெண்டையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். விவசாய மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருள்களில் இருந்து கட்டடம் கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருள்களை "குளோரோஎர்த்" (Chloroearth) தயாரித்தது.

தங்களுடைய நிறுவனம் பிஸினஸ் மாடலை வைத்துக்கொண்டு வெறுமனே நிலையான தயாரிப்புகளை மட்டும் உருவாக்க திட்டமிடவில்லை. ஆனால் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் வேளாண் தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார் டேவிட்.

பசுமை வீடுகளில் வேர்ல்டு லீடராக மாறுவதில் குளோரோ எர்த் இன்று கவனம் குவித்திருக்கிறது. எனவே, மரப்பலகை தயாரிப்பதில் மட்டும் கவனம் கொள்ளவில்லை. அதற்கு மாற்றாக மரப்பலகையுடன் சேர்த்து மற்ற இரண்டு பொருள்களை தயாரிப்பதை இலக்கு வைத்திருப்பதாகச் சொல்கிறார் டேவிட். கடந்த ஆண்டு டேவிட்டை சந்தித்த நண்பர் ஒருவர், குளோரோஎர்த் நிறுவனத்தின் நிலையான பொருள்களைப் பயன்படுத்தி 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அணுகினார்.

அரசுடன் வர்த்தகம்

பி2பி நிறுவனமாக இருந்ததை, அதாவது வர்த்தகம் டு வர்த்தகம் என்ற நிலையில் இருந்து பி2ஜி எனப்படும் அரசுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்ற வேலை செய்யவேண்டும் என முடிவுசெய்தார் டேவிட். இப்போது இந்த நிறுவனம் மிகவும் வலிமையான அளவில் அரசுகளுடன் இணைந்து, அவர்களுடைய பொருட்களை அதிவேகமாக நாடு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது.

“சிமெண்ட் தண்ணீரை மட்டும் அதிக அளவில் பயன்படுத்தவில்லை. மாறாக அது பசுமை வீடுகள் வாயு மாசுக்களை உருவாக்குகிறது. அதற்கு மாற்றாக ஒரு பொருளை பயன்படுத்தும்போது, விஷத்தன்மை குறைந்து கட்டமைப்பு ஒருமை கிடைக்கிறது. அத்துடன் செலவும் குறைகிறது” என்கிறார் டேவிட். அவர் சொல்வதைப்போலவே, இன்று அதே பொருள்கள் வானாளவிய கட்டடங்கள் கட்டப் பயன்படுகின்றன. அவை எதிர்மறையாக இருக்கின்றன.

தீ மற்றும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய ஜியோ பாலிமர்ஸ் நிலையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்தைத்தான் டேவிட் விவரிக்கிறார். இதில் பெரும்பாலான பொருள்கள் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும். அதற்கு இரும்பை உதாரணம் காட்டுகிறார் டேவிட். அதற்குப் பதிலாக எளிதாகக் கிடைக்கும் வளத்தை இந்தியாவில் பயன்படுத்தலாம் என்கிறார்.

கட்டுமான களத்தின் தொழில்துறை சூழலியலைப் புரிந்து செயல்படும் குழுவினரின் அனுபவத்துடன் இந்தக் குழு செயல்படுகிறது. இந்தியாவுடன் சேர்த்து உலக சந்தையை எட்டிப் பிடிக்கவேண்டும் என்பதே குளோரோ எர்த் நிறுவனத்தின் நோக்கம்.

“ஜியோபாலிமரைக் கொண்டு நாங்கள் கட்டும் கட்டடங்களுக்கு 35 ஆண்டுகால அனுபவம் உள்ள நண்பர் தலைமைதாங்குகிறார்” என்று குறிப்பிடுகிறார் டேவிட்.

ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்குதல்

குளோரோ எர்த் ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க விரும்புகிறது. அடுத்த 60 அல்லது 90 நாட்களில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான இலக்கை வைத்திருக்கிறது. அவை நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் ஒன்று முதல் மூன்று மாடி கட்டங்கள் கட்டுவது. வானாளவிய கட்டடங்களைக் கட்டுவது தங்களுடைய இலக்கல்ல என்று விளக்குகிறார் டேவிட்.

வைஃபை, இன்டர்நெட் வசதிகள் இருக்கும்போது, ஒருவருக்கு நகர்ப்புறத்தில் வாழவேண்டிய தேவை ஏற்படாது என்று நம்புகிறார் டேவிட். “இன்று நகரங்கள் மக்கள் நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. அவை தூய்மையாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது” என்கிறார் அவர். ஒருவரால் சொகுசான நகர வாழ்வின் அனைத்து வசதிகளுடன் கிராமத்தில் வாழமுடியும். அதுவும் பாதி செலவில் என்று கூறுகிறார்.

“அடிப்படை வசதிகளைக் கொண்டு, அது தரும் பயன்களை மீறாமல் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதல், நகரங்களைத் தடுத்தல், மற்றும் வெறுமனே கட்டடங்களை தவிர்ப்பதால் மட்டும் அந்த பிரச்சினையைத் தவிர்க்கமுடியாது” என்கிறார் அவர்.

ஒரு தயக்கமான சந்தை

இந்தியாவில் துணிச்சலான முதலீடுகளுக்கு பற்றாக்குறை உள்ளது என்று நினைக்கிறார் டேவிட். பெரும்பாலான நிதி முதலீட்டு நிறுவனங்கள் வேறுபட்ட பொருளாதாரத்தை மேற்குலகில் பின்பற்றுகின்றன. இந்தியாவில் உள்ளுறையான தேவை புரிந்துகொள்ளப்படவில்லை. இன்டர்வென்ஷன் முதலீடு (intervention capital) என்பதும் இல்லாமல் இருக்கிறது என்று கோடிட்டுக்காட்டுகிறார் டேவிட். “இன்டர்வென்சன் முதலீட்டை உண்மையில் புரிந்துகொள்ளாத எந்த துணிகர முதலீட்டாளர்களையும் நான் இன்னும் கடந்துவரவில்லை” என்கிறார். ஒரு பெரிய சர்வதேச முதலீடு இவரது எண்ணத்தை ஆதரித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி க்ளியரன்ஸ் வழங்க எதிர்பார்க்கப்பட்டதைவிட நீண்ட நாள்களை எடுத்துக்கொண்டது.

சந்தை வெளி

சுற்றுச்சூழல் (eco-friendly) சார்ந்த வீடுகளுக்கு அதிக தேவை இருப்பதாக தனியார் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் நடத்திய பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதி அமைச்சக அறிக்கையின்படி, 18.78 மில்லியன் வீடுகள் நகர்ப்புறங்களில் அமைவதற்கான இடப்பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 2011 கணக்குப்படி பசுமை வீடுகள் கட்டுவதற்கான 800 மில்லியன் சதுர அடி பரப்பு இந்தியாவில் காணப்பட்டது. அதில் 40 சதவிகிதம் குடியிருப்புப் பகுதி.

இந்த ஆண்டில், புனேயில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் (Pimpri Chinchwad) முனிசிபல் கார்ப்பரேஷன்தான் நாட்டிலேயே பசுமை வீடுகள் கட்டிய முதல் பஞ்சாயத்தாக இருக்கிறது.

இந்தியாவில் பசுமை வீடுகளுக்கான சந்தை ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், சர்வதேச அளவில் பசுமை வீடுகள் மற்றும் வீடு கட்டுமான சந்தை 69 மில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவில் 20 சதவிகித புதிய கட்டுமானங்கள் பசுமை கட்டடங்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இணையதள முகவரி: Chloroearth