பலவித சவால்களை தாண்டி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ள ‘BookMyShow' வெற்றிக் கதை! 

1

”பெரும்பாலான நிறுவனங்கள் செரிமானமில்லாமல் அவதிப்பட்டுதான் இறக்கிறதே தவிர பசியினால் அல்ல” என்கிறார் 'புக்மைஷோ' 'BookmyShow' நிறுவனத்தின் இணைநிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஹேம்ரஜனி. 

அவர் ஒரு சிறந்த வியாபாரி என்றும் முழுமையான விளம்பர வல்லுனர் என்பதும் அவருடனான ஒரே ஒரு உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பெருமையாக தன்னை சுயமாக வெளிப்படுத்திக்கொள்ளும் சிந்தியான இவர், சிக்கனத்தை நம்புபவர். அதையே நிறுவனத்தின் நடவடிக்கைகளிலும் பின்பற்றினார். வணிகமாதிரிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட காலகட்டத்தில், புக்மைஷோவின் வெற்றிக்கு சிக்கனம்தான் காரணமாக காட்டப்படுகிறது. 

”நாங்கள் செய்வதை மிகவும் சிறப்பாக செய்வோம்,” என்கிறார் ஆஷிஷ். 
BookMyShow நிறுவன குழு
BookMyShow நிறுவன குழு

புக்மைஷோ வளர்ச்சியின் உச்சத்தை அடைந்ததற்கும் தனியுரிமையுடன் இருப்பதற்கும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றி வருவதை ஒத்துக் கொள்ளவேண்டும். திரைப்படத்திற்கான டிக்கெட் புக்செய்யும் தொழிலில் பேடிஎம் போன்றவை நுழைந்திருந்தாலும், புக்மைஷோ பலவற்றை கடந்தேவந்துள்ளது. ஆஷிஷ் கூறுகையில், 

”நாங்கள் கிரிக்கெட் விளையாட்டைப்போல அல்லாமல் கால்பந்து விளையாட்டைப் போல பணிபுரிகிறோம். ஒவ்வொரு தனிநபரின் மதிப்பெண்களை சேர்த்து மொத்த மதிப்பெண்களாக நாங்கள் உருவாக்குவதில்லை. கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போல கோலை நோக்கி ஒரு குழுவாக செயல்படுவோம். எங்கள் குழுவில் மிகச் சிறப்பானவர்கள் உள்ளனர். நாங்கள் ஸ்டார்ட்-அப் உலகின் ஃபுட்பால் க்ளப் ஆஃப் பார்சிலோனா எனப்படும் FCB. அவர்கள் சிறப்பானவர்கள் என்பதால்தான் சாம்பியன் லீக்கை வென்றார்கள்.”

எண்ணிக்கை அடிப்படையிலான வளர்ச்சி 

உண்மையில் வளர்ச்சி என்பது எண்ணிக்கை வாயிலாகவே பார்க்கப்படுகிறது. 2015-16- ல் ஒரு மாதத்திற்கு 7.8 மில்லியனுக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. இந்த வருட வருவாய் 130 கோடியிலிருந்து 246 கோடியாக உயர்ந்துள்ளது. ஆஷிஷ், பர்க்‌ஷித்தர், ராஜேஷ் பல்பாண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டு இன்று 17 வருடங்களைக் கடந்த நிலையில் நுகர்வோர் இணைய உலகில் புக்மைஷோ பல்வேறு காலநிலைகளைக் கடந்து வந்துள்ளது.

புக்மைஷோ நான்கு வெவ்வேறு பகுதிகளில் 370 பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும்,1,500 ஊழியர்களைக் கொண்டுள்ளது. 

”நாட்டின் முதல் மூன்று இ-காமர்ஸ் ப்ராண்டுகளில் நாங்கள் ஒருவர். நாங்கள் 100 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களுடன் 12-15 லட்சம் டிக்கெட்டுகளை ஒரு மாதத்தில் விற்கிறோம். மூன்று லட்ச பேஜ் பார்வைகளுடன் கடந்த வருட GMV 2,500 கோடியாகும்.” என்கிறார் ஆஷிஷ்.

இணைய உலகில் பணிபுரிவது

90 களின் இறுதியிலும் 2000-ம் வருடத்தின் தொடக்கத்திலும் GPS, சாட்டிலைட் மற்றும் செல்ஃபோன் தொடர்புமுறை, காமிராக்கள் அல்லது ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லை. ஒவ்வொரு முறை வாடிக்கையாளரிடம் கொண்டுசேர்க்க முடியாமல் போகும் புகார் வரும்பொழுதும், குழுவினர் அது குறித்த விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

க்ரெடிக் கார்டோ அல்லது வேறு எந்தவித கட்டணம் செலுத்தும் முறையோ இல்லை. குழுவிற்கு ஒரு வலைதளம் இருந்தாலும் 95 சதவீத புக்கிங் சேவை மையங்களிலிருந்துதான் வரும். ஆன்லைன் டிக்கெட் வசதிக்கான எந்தவித சுற்றுச்சூழலும் பயன்பாட்டில் இல்லை. 

பன்முகத் தன்மையில் பணிபுரிவது

தற்போது இந்தியாவின் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் 65 சதவீத செல்வத்தை ஆக்கிரமிக்கின்றனர். அடித்தட்டு வர்க்கமான 40 சதவீத மக்கள் 5 சதவீத செல்வத்தையே ஆக்கிரமிக்கின்றனர். மெட்ரோவைப் பொறுத்தவரை சொத்துக்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒருவர் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக செலுத்தும் பணம் அதே நபருடைய நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொருவரின் இரண்டு மாத சம்பளமாகும். இதுகுறித்து ஆஷிஷ் கூறுகையில்,

”அலை அடிக்கும்போது சரியான நேரத்தில் அத்துடன் பயணித்து செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். தொழில் எனும் வாழ்க்கைச் சக்கரத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். நாம் சரியான நேரத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறவேண்டும். நேரம்தான் மிக முக்கிய அம்சமாகும். அதைத் தவறவிட்டால் பணத்தை இழக்க நேரிடும். அலையால் தாக்கப்படும் பல இ-காமர்ஸ் போன்று வெகு சீக்கிரம் அதிகத் தொகையை இழந்துவிடவும் கூடாது. அதே சமயம் கோடாக் (Kodak) போன்றும் செயல்படக்கூடாது,” என்கிறார்.

இடது: ஆஷிஷ்  ஹேம்ரஜானி
இடது: ஆஷிஷ்  ஹேம்ரஜானி

வருமானத்தை காட்டு

வாடிக்கையாளர்களின் தேவையையும் எதிர்பார்ப்பையும் மற்றவர்களைவிட இவர்கள் சிறப்பாக புரிந்துகொண்டதுதான் பயணத்தை தொடர்வதற்கு உதவியது என்று நம்புவதாக தெரிவித்தார் ஆஷிஷ். மேலும், 

”அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம்தான் தீர்வு என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பணம் ஒரு சில பிரச்சனைகளை சரிசெய்யலாம். ஆனால் அதுவே எல்லாம் என்று நினைக்கக்கூடாது. உண்மையில் அதிகப்படியான பணம் புதுமையான சிந்தனைகளை கட்டுப்படுத்திவிடும். எல்லாவற்றையும் வரவாகவும், தள்ளுபடியாகவும், கட்டணத்திற்கான போட்டியாகவும் பார்ப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல.”

வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை நேரடியாக தெளிவாக உங்களிடம் சொல்லமாட்டார்கள். அவர்களுடனான உரையாடலின் ஒவ்வொரு வார்த்தைகளுகிடையே ஒளிந்திருப்பதை கூர்ந்து நோக்குவதன் மூலமாகவும் அவர்களின் நடத்தை முறைகளை புரிந்துகொள்வதன் மூலமாகவே அவர்களின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும் என்றார் ஆஷிஷ்.

புக்மைஷோவிற்கான மார்கெட்டிங் செலவு மிகவும் குறைவானது. இன்றளவும் செலவு விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுகிறோம். எப்படிப்பட்ட விமானத்தை தேர்வுசெய்வது, ஹோட்டலின் வகை மற்றும் இதர நிர்வாக செலவுகளை அதிக கவனத்துடன் மேற்கொள்வோம். மின்சாரம் மற்றும் ஸ்டேஷனரி செலவுகளில் சிக்கனமாக இருக்கிறோம். இது ஒரு நல்ல பழக்கம். இதுபோன்ற செலவுகளுக்கு பதிலாக மனிதவளத்தில் அதிகம் செலவிடுகிறோம்.” என்கிறார் ஆஷிஷ்.

ஒவ்வொரு ஊழியருக்கும், அவரது குடும்பத்தினரான கணவன்/மனைவிக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் மருத்துவ செலவுகளில் நிறுவனம் பங்களிக்கிறது. இந்தத் தொகை ஒரு ஊழியரின் CTC-யைவிட அதிகமானதாகும். ஆபிஸ்பாய், பியூன் மற்றும் வெளியிலிருந்து ஒப்பந்தத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் போன்றவர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கப்படுகிறது.

டாட்காமின் ஏற்றம் மற்றும் இறக்கம் குறித்த தட்பவெப்ப நிலையை புரிந்து கொண்டதில் கிடைத்த பயிற்சி காரணமாக அவர்கள் சிக்கனமாக பணிபுரிகின்றனர்.

கடினமானசூழ்நிலை

வாழ்க்கை என்பது குறைவான தூரத்திற்கு வேகமாக ஓடும் ஓட்டமல்ல. அது ஒரு மாரத்தான் போன்றது. நீங்கள் சந்திக்கும் தற்போதைய சவால்களால் மட்டும் நிறைந்ததல்ல.

”2001-ல் ந்யூஸ்கார்ப் எங்களை இணைத்துக்கொண்டது. 2002-ல் டாட்காம் வீழ்ச்சியால் கடுமையால் பாதிக்கப்பட்டது. 150 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஆறாக மாறியது. 2500 சதுரஅடி கொண்ட அலுவலகம் 138 சதுரஅடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக்கு மாற்றப்பட்டது. வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியநேரம் அதுதான்,” 

என்கிறார்ஆஷிஷ். வீழ்ச்சியின்போது 150 ஊழியர்களில் 144 ஊழியர்களை வெளியேற்ற நேர்ந்தது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. பணிநீக்கம் செய்யப்பட்டாலும் ஒரு கணிசமான தொகையை அளித்து வேறு பணியில் சேர்வதற்கான சிபாரிசு நடவடிக்கைகள் உடனடி சவாலாக அமைந்தது.

கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய காலகட்டமாக அது அமைந்தது. விற்பனை சரிவாக இருந்தது. ஆனால் 2007-ல் 50 சதவீத பரிவர்த்தனைகள் வலைதளம் மூலமாக வந்ததனால் புக்மைஷோவின் நிலைமை தலைகீழாக மாறியது. 2012-ல் மொபைல் செயலிகளின் வளர்ச்சி தொடங்கியபோது, புக்மைஷோ மொபைல் செயலி படிப்பதற்கான தளமாக அமைந்தது. இன்று 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் நிறுவனத்தின் செயலி மூலமாகவும் மொபைல் வலைதளம் மூலமாகவுமேநடக்கிறது.

”சின்னச் சின்ன தடங்கல்கள் குறுகிய காலத்திற்கு ஏற்பட்டாலும், நீண்டகால நோக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும். வெள்ளிக்கிழமை மாலை எப்படிப்பட்ட சிறந்த மனநிலையில் இருப்பீர்களோ அதே மனநிலையுடன் திங்கட்கிழமை காலையும் எழவேண்டும்,” 

என்கிறார்ஆஷிஷ். அந்த நேரத்தில்தான் குழுவினர் ஒரு விஷயத்தை உணர்ந்தனர். எதையும் இலவசமாக கொடுத்தால் அதற்கான மதிப்பு தெரியாது. டிக்கெட்டிங்கிற்கான மென்பொருளை சினிமாக்களுக்கு கொடுக்க நினைத்தபோது யாரும் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. ஆனால் அவர்கள் அதற்கான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியதும், அவர்களது ஆர்டர் புத்தகம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நிரம்பியுள்ளது.

புக்மைஷோ ஊழியர்கள்
புக்மைஷோ ஊழியர்கள்

மக்கள் வசதியையும் மதிப்பையும்தான் விரும்புவார்களே தவிர தள்ளுபடியையும் இலவசங்களையும் விரும்புவதில்லை. தொழிலில் விசுவாசத்தை உருவாக்காமல் இருப்பதற்கு எளிதான வழி தள்ளுபடியும் இலவசங்களும்தான்.

”ஊழியர்களை பணிநீக்கம் செய்வது எவ்வளவு கடினமான விஷயமோ ஊழியர்களை திரும்பப் பெறுவதும் அதேபோல கடினமான விஷயமாக இருப்பதை தெரிந்துகொண்டோம். இதுதான் நாங்கள் கற்ற மிகப்பெரிய பாடம். 2008-ன் நெருக்கடியின்போது நாங்கள் வழங்கவேண்டிய சம்பளத்தின் அளவை 30 சதவீதம் குறைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. உடன் பணிபுரியும் ஊழியரை இழப்பதற்கு பதிலாக அவர்களின் சம்பள பணத்திலிருந்து 10,20 அல்லது 30 சதவீதம் என சம்பள குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சம்பளகுறைப்பை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்” என்றார் ஆஷிஷ்.

ஆறுமாதத்தில், சந்தையின் நிலவரம் சீரடையும்போது குழு ஒரு ஊழியரைக்கூட இழக்கவில்லை. மஹாராஷ்டிர அரசாங்கத்துடன் வசதிக்கான கட்டணத்திற்காக குழுவினர் கடுமையான போராட்டத்தை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களது நிகர வருவாயில் 20 சதவீதம் கேள்விக்குறியானாலும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கினர்.

கலாச்சாரத்தை உருவாக்குவது

வாடிக்கையாளரின் மீதான முழு கவனத்தை மனதில் கொண்டதால் புக்மைஷோவிற்கான பிரத்யேக வாடிக்கையாளர் சேவை உள்ளது. நெட் ப்ரொமோட்டர் சோர்ஸை நிறுவனம் ஒரு புனித புத்தகமாகவே கருதுகிறது. பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக நடத்தப்படுவார்கள். வெவ்வேறு விதமான வெகுமதிகள் அளிக்கப்படும். ஏனெனில் ஒவ்வொருவரின் தேவையும் மற்றவரின் தேவையிலிருந்து மாறுபடும். தொடர்ந்து கருத்துக்கள் சுழற்சியில் இருந்துகொண்டே இருக்கும்.

”வாடிக்கையாளருக்குதான் முதலிடம்’ எனும் அணுகுமுறையை ஒரு நிறுவனத்தின் கலாச்சார மரபணுவில் உருவாக்கிவிட்டால் அது தானாகவே நடைமுறைப் படுத்தப்பட்டுவிடும். 18 வருடங்களாக நாங்கள் இதை உருவாக்கியுள்ளோம். அதைச் சுற்றியே எங்களது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” என்கிறார்ஆஷிஷ்

ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தை 19 வருடங்களாக உருவாக்குவது எளிதான விஷயமல்ல. வளர்ச்சியையும் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளையும் நிர்வகிப்பது ஒரு நிறுவனத்திற்கு மிகவும் கடினமான செயல் என்பதை நம்புகிறார் ஆஷிஷ். குழு வளர்ச்சியடையும்போதே கலாச்சாரத்தை கண்டறிந்து உருவாக்கவேண்டும் என்கிறார் ஆஷிஷ்.

கலாச்சாரத்தில் படைப்பாற்றல் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை புக்மைஷோ நிலை நிறுத்துகிறது. முயற்சிகள் HR குழுவிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலிருந்தும் ஊக்குவிக்கப்படுகிறது. ”வெளிப்படையாக இருக்கும் பழக்கத்தையும் யோசனைகளை அனைவருடனும் விவாதிக்கும் பழக்கத்தையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போது தோல்வி குறித்த பயமே இல்லை.” என்கிறார்ஆஷிஷ்.

ஒரு நிறுவனமும் மக்களும் வளர வளர துறைகள் தனித்தனியாக செயல்படும் முறையே பின்பற்றப்படும். இந்த முறையைத் தகர்த்தெறிய இந்தக் குழு அவர்கள் பணிபுரியும் பகுதியை முற்றிலும் வெளிப்படையாக மாற்றினர். பின்-அப் போர்டுகள், வொயிட்போர்ட், ஃப்ளாட்நெட்வொர்க்ஸ், கோடிங் செய்வதற்கான டூல்ஸ் போன்றவைகளும் பதிவு செய்யப்படுகிறது. 

நீண்ட கால கனவுகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைத்து சிந்திக்கவும், புதுமைகளை புகுத்தவும், சிறந்த யோசனைகளுடன் முன்னேறவும் இந்த கலாச்சாரம் ஊக்குவிக்கிறது. 

”படைப்பாற்றலுடனும் புதுமையான சிந்தனையுடனும் இதைச் செய்ய ஒன்றரை வருடங்கள் ஆனது.” என்றார். 

இன்று ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக ’புக்மைஷோ’ மாறிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.