பட்டதாரிகளை நிறுவனங்களுக்கு ஏற்றவர்களாக மாற்ற உதவும் க்ளோபல்க்யான்!

முன்னாள் டாடா க்ரூப் நிர்வாகிகள் மேலாளர்களுக்கு தேவையான திறன்களை வழங்குவதற்கான பயிற்சிகளை வடிவமைத்துள்ளனர்

1

இந்தியாவிலுள்ள அதிகளவிலான பட்டதாரிகள் அதிக வளங்களுடன் உள்ளனர். இருந்தும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பொறியியல் பட்டதாரிகள் முறையான திறன்கள் இல்லாததால் வேலையில்லாமல் இருப்பதுடன் பணியிலமர்த்தும் நிலையிலும் இல்லை என்று லிங்க்ட்இன் ஆய்வு தெரிவிக்கிறது.

பட்டதாரிகளை பணியிலமர்த்துபவர்களாக மாற்றுவதும் அவ்வாறே நிலைத்திருக்கச் செய்வதும் மிகப்பெரிய சவால்.

கார்ப்பரேட் தேவைகளை மேலாண்மை கல்வி சந்தை பூர்த்தி செய்வதில்லை என்பதை உணர்ந்தார் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தலைமை உத்தி அதிகாரி ஸ்ரீநிவாஸ் அடேபள்ளி.


துவக்கம்

மேலாண்மை திறன்களை மேம்படுத்தும் நிறுவனமான க்ளோபல்க்யான் (GlobalGyan) அகாடமி ஆஃப் மேனேஜ்மெண்ட் எஜுகேஷன் (க்ளோபல்க்யான் அல்லது GAME) என்கிற அகாடமியை அமைத்தார். நிறுவனங்களில் காணப்படும் மேலாண்மை திறனில் இருக்கும் இடைவெளியை நிரப்ப உதவுகிறது இந்த அகாடமி.

பி2பி மாதிரியில் பணியாற்றும் க்ளோபல்க்யான் ஐடி, டெலிகாம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அவ்வாறு இணைந்து அங்குள்ள மேலாளர்களுக்குத் தேவைப்படும் திறன்களை பெறத் தேவையான பிரத்யேக கோர்ஸ்களை உருவாக்குகிறது. ஒரு சில டாடா க்ரூப்கள், கோத்ரெஜ் மற்றும் பஜாஜ் ஃபினான்ஸ் போன்றோர் அவர்களது க்ளையண்ட்கள் என்று குறிப்பிட்டனர் இவர்களது குழுவினர்.

டாடா க்ரூப்பிலிருந்து ராஜினாமா செய்த பிறகு மேலாண்மை கல்விப் பகுதியில் இருக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்தார் ஸ்ரீநிவாஸ். ஃப்ரீலான்ஸ் ஆலோசனை மாதிரி, வடிவமைப்பு மற்றும் உத்தி சார்ந்த வொர்க்ஷாப்களை வழங்குதல். நிதி மற்றும் வணிக தொடர்பு போன்றவற்றை துவங்கினார்.

”மற்ற பகுதிகளிலுள்ள நிபுணத்துவத்தையும் இணைத்தால் க்ளையண்டுகளுக்கு மேலும் மதிப்பை கூட்ட முடியும் என்பதை விரைவில் உணர்ந்தேன். எனவே அதிக சிக்கலான ப்ரோக்ராம்களை வழங்குவதற்காக என்னைப் போன்ற மற்றவர்களுடன் இணைந்துகொண்டேன். ஒருவர் மற்றவருக்கு பரிந்துரைத்ததன் மூலம் ஒரு சிறப்பான க்ளையண்ட் பேஸை உருவாக்கினேன். ஒரே க்ளையண்ட் மீண்டும் வாய்ப்பளித்த விகிதம் அதிகமாக இருந்தது.”

எனினும் ஆலோசனை சேவை வழங்கும் மாதிரியில் அதிகளவு வளர்ச்சியடைவது என்பது கடினம் என்பதை உணர்ந்தார் ஸ்ரீநிவாஸ்.

நிறுவனத்திற்கான விதை

க்ளோபல்க்யான் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டது. சமீர் கன்சே என்பவர் டாடா க்ரூப்பில் 10 வருடங்கள் ஸ்ரீநீவாஸுடன் பணியாற்றினார். ஸ்ரீநிவாஸ் சமீரை அணுகினார். அவர் அப்போது எம்ஐடியில் எக்சிக்யூடிவ் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். இவர் கல்வி சந்தையில் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் குறித்து முதலில் சிந்தித்தார்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீநிவாஸ் ஐஎஸ்பி, ஹைதராபாத்தில் நடைபெற்ற மாஸ்டர் டீச்சிங் ப்ரோக்ராம் ஒன்றில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற ஒரு பயிற்சியின்போது நிர்வாக மதிப்பீடுகளை MMORG-ஆக (மாசிவ்லி மல்டிப்ளேயர் ஆன்லைன் ரோல்ப்ளேயிங் கேம்) உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

”உற்சாக மிகுதியுடன் சமீருக்கு தகவல் அனுப்பினேன். இது சிறப்பான யோசனையாக இருப்பினும் முதலில் நாம் ஒரு அடிப்படை வணிகத்தை உருவாக்கவேண்டும் என்று எச்சரித்தார். அப்படித்தான் எங்களுடைய பணி துவங்கியது. ஒரு வருடத்திற்குப் பின் மதிப்பீட்டுச் செயலியை உருவாக்கத் துவங்கினோம்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.

”தயாரிப்பு மேலாளர், தொழில்நுட்ப தலைவர், மற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் டெவலப்பர்ஸ் என தற்போது 8 பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறோம். விரைவில் இந்த எண்ணிக்கை பத்தாக உயரும்.” என விவரித்தார்

க்ளோபல்க்யான் நிறுவனத்தின்கீழ் சேவைகளை வழங்கவும் டிஜிட்டல் டெலிவரி வாயிலாக வளர்ச்சியடையவும் நிபுணர்கள் அடங்கிய நெட்வொர்க்கை உருவாக்குவதில் குழுவினர் கவனம் செலுத்தினர்.

எவ்வாறு செயல்படுகிறது?

கேமிங்கை பரிசோதனைக்கான ஒரு சாதனமாக குழு பயன்படுத்துகிறது. பங்கேற்பவர்கள் தொடர் கேம்களை தினமும் சில நிமிடங்கள் விளையாடுவார்கள். இதனால் அவர்கள் எதைக் கற்றுக்கொண்டார்கள் என்பதும் எவ்வளவு சிறப்பாகக் கற்றுக்கொண்டார்கள் என்பதும் சோதிக்கப்படும். துவக்கத்தில் மேலாளர் பெற்ற ஸ்கோரையும் கற்றலுக்குப் பிறகான ஸ்கோரையும் கண்காணிப்பதன்மூலம் கற்றலின் திறனை பாரபட்சமின்றி இந்நிறுவனம் வழங்குகிறது.

க்ளோபல்க்யான் VALYOU என்கிற தளத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் செயல்பாட்டு நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் திறன்கள் ஆகியவற்றை மட்டும் மதிப்பிடவே உருவாக்கப்பட்டது. எனினும் செயலியையும் பாடத்தொகுப்பையும் மேம்படுத்தியதால் நடத்தை திறன் மற்றும் ஆளுமை பண்புகளை கண்டறியவும் பயன்படுத்தலாம் என்பதை குழு உணர்ந்தது.

அதை மனதில்கொண்டு ஒரு விண்ணப்பதாரரின் நடத்தையை மேலாளரின் பரிந்துரையைக் கொண்டு மதிப்பிடுவதற்கு பதிலாக நேரடியாக அவர்களது நடத்தையை படம்பிடிக்கும் விதத்தில் அமையும் கேம்களையும் செயல் மாதிரிகளையும் குழுவினர் வடிவமைத்தனர்.

”மதிப்பீட்டிற்கான தளம் தயார்நிலையில் இருந்தபோது இதன் மூலம் வேறு பல பயன்பாடுகள் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அதாவது பணியிலமர்த்துதல் மற்றும் பதவிஉயர்விற்கு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான டூலாக உதவுவதை உணர்ந்தோம். மேலும் செயல்திறன் மேலாண்மைக்கான சரிபார்க்கும் டூலாகவோ அல்லது அளவுகோலாக விளங்கும் டூலாகவோ உதவுவதையும் உணர்ந்தோம்.

க்ளையண்ட் அடிப்படையிலும் ப்ரோக்ராம் தேவைகளின் அடிப்படையிலும் பன்னிரண்டிற்கும் அதிகமான பார்ட்னர்களுடன் க்ளோபல்க்யான் குழு பணிபுரிகிறது என்றார் ஸ்ரீநிவாஸ்.

”முழு நிதியாண்டை 2017-ம் ஆண்டு இந்நிறுவனம் நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பத்து மிகப்பெரிய கார்ப்பரேட்களைச் சேர்ந்த 300 மேலாளர்களுடன் பணிபுரிந்துள்ளோம். மிக முக்கியமாக எங்களது வருவாயில் 12 சதவீதம் டிஜிட்டல் வாயிலாக பெறப்பட்டதாகும். இந்த வருடம் வருவாயை இரட்டிப்பாக்கவும் டிஜிட்டல் டெலிவரியின் பங்கை 20-25 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம்.”

குறிப்பிட்ட பணியின் அடிப்படையில் ஒரு ப்ரோக்ராமைச் சார்ந்தோ அல்லது ஒரு பங்கேற்பாளரைச் சார்ந்தோ குழுவினர் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். ரத்தன் டாடா, பேராசிரியர் ஜக்தீஷ் சேத். டாடா சன்ஸ் முன்னாள் ED ஆர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் க்ளோபல்க்யானின் ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் உள்ளனர். மற்ற பேராசிரியர்களும் கார்ப்பரேட் நிபுணர்களும் வழிகாட்டுகின்றனர்.

சந்தை மற்றும் எதிர்காலம்

Simplilearn, UpGrad, சுயநிதியில் செயல்படும் Great Learning போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப்கள் திறன் மேம்பாடு என்கிற இந்தப் பகுதியில் செயல்படுகின்றனர். மேலும் AI பகுதியில் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டி இருப்பதால் புதிய கற்றலுக்கான வலுவான தேவை உள்ளது.

மேலாண்மை கல்வி சந்தை மிகப்பெரியதாகவும் பல்வேறு பகுதிகளாகவும் பிரிந்துள்ளது. எனவே போட்டி குறித்த கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பான தயாரிப்பையும் மதிப்பையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்