வெற்றிகரமான வர்த்தகத்தின் 8 முக்கிய அம்சங்கள்! 

0

அமெரிக்க கனவு எப்போதுமே உங்களை செல்வ வளத்தை தேடி முன்னேற வைக்கும். இதுவே, தினந்தோறும் விழித்தெழச்செய்து, அதே வேலையை இரண்டு நாள் தவிர வாரம் முழுவதும் பார்க்க வைக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை கூட பெரிய அளவில் வளம் காண வைக்காது. வர்த்தகம் வாயிலாக மட்டுமே பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் தினசரி வேலை போல் அல்லாமல் வர்த்தகத்திற்கு அதிக முயற்சி, அதிக பணம், அதிக நேரம் தேவை. இருப்பினும் இது சாத்தியமே. வெற்றிகரமான வர்த்தகத்திற்கு உதவக்கூடிய இந்த முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளுங்கள்.

1. ஐடியா

எதிர்கால வர்த்தகத்திற்கான தனித்தன்மை வாய்ந்த ஐடியாவை இன்று கண்டறிவது எளிதல்ல. பெரும்பாலான ஐடியாக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு விட்டன. பல நிறுவனங்கள் இந்த வழியில் தான் வருவாய் ஈட்டுகின்றன. மேலும் ரஷ்யாவில் வர்த்தகம் என்பது பெரும்பாலும் சாதாரண மறுவிற்பனையை சார்ந்திருக்கிறது மற்றும் இது ஒரு சங்கிலியாக இருக்கிறது. வர்த்தகம் என்பதே வாங்கி விற்கப்படும் பார்முலாவாக இருக்கிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி சிறிய நிறுவனங்களுக்கு விற்கும் சில நிறுவனங்கள் இருக்கின்றன. சிறிய நிறுவனங்கள் இன்னும் சிறிய நிறுவனங்களை தேடி அவற்றுடன் விற்பனை செய்கின்றன. இப்படி தான் நிகழ்கிறது.

பெரும்பாலானவர்கள் புதிய, சுவாரஸ்யமான ஐடியாக்களை உருவாக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றாலும் அவற்றில் சில தான் வெற்றி பெறக்கூடியவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்கரான ஜான் ஆரிங் என்பவர் வெற்றிகரமான வர்த்தகராக உருவாவதற்கு முன், தனது எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதற்கான ஒரு டஜன் வர்த்தகங்களை மூடிவிட்டார். இருப்பினும் விரைவிலேயே அவர் மிகப்பெரிய புகைப்பட தளமான ஷட்டர்ஸ்டாக்கை உருவாக்கி உலகின் செல்வந்தர்களில் ஒருவரானார்.

இணையத்தில் எல்லோரும் அறிந்த ஒரு கண்டுபிடிப்பாளரும் இருக்கிறார். ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜக்கர்பர்க் தான் அது. அவருடைய மூல ஐடியா, மக்களை நெருக்கமாக கொண்டு வந்து, அவர்களுடன் தகவல் தொடர்பை சாத்தியமாக்குவதாக இருந்தது. முக்கியமான ஒன்றை உருவாக்குவதே வர்த்தகத்தில் முக்கியம் என்கிறார் மார்க் ஜக்கர்பர்க்.

”எனக்கு என்ன தேவை என விரும்பினோனோ அதை தான் உருவாக்கினேன்,” என்கிறார் அவர்.

அதே போல தான், ஜான் ஆரிங், தனது பணிக்கு தரமான புகைப்படங்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்க முடியாத நிலையில் புகைப்பட தளமான ஷட்டர்ஸ்டாக்கை துவக்கினார்.

இவை எல்லாவற்றையும் விட ஒரு ஐடியா எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது இன்னும் முக்கியமானது. தனக்கான நிதியை தொழில்முனைவோர் வாரிசுரிமையில் பெற்றாரோ அல்லது சொந்தமாக ஈட்டிய பணமோ எதுவாக இருந்தாலும் அதை அவர் ரிஸ்க் எடுக்கிறார். ஒரு ஐடியாவை நினைவாக்குவது என்பது மிகவும் கடினமானது. அவர்கள் அனைத்து முயற்சி, கவனம் ஆகியவற்றை ஈர்த்து வருவாய் ஈட்டிய ஐடியா மற்ற ஐடியாக்களை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைகிறது. அது மில்லியன் டாலர் ஐடியாவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஐடியாக்கள் அதிகம் இருந்தால் அவை லாபகரமாகவும் இருக்கும்.

2. வர்த்தக திட்டம்

எந்த வெற்றிகரமான வர்த்தகத்தின் முக்கிய அம்சமாக வர்த்தக திட்டம் விளங்குகிறது. சேவை அல்லது தயாரிப்புக்கான விற்பனை சந்தை இது அலசி ஆராய்ந்து, இந்த சந்தைகளில் நிறுவனத்தின் நிலையை தீர்மானித்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்து, நிதி உதவி, தொழிலாளர்கள், பொருட்கள், பணடங்கள் ஆகியவற்றின் தேவையை கண்டறிந்து, ரிஸ்க் மற்றும் போட்டியை கணிக்கவும் உதவுகிறது. இது எதிர்கால வர்த்தகர் கட்டாயமாக பின்பற்றுவதற்கான வழிகாட்டியாகும்.

3. விடாமுயற்சி, அதிர்ஷ்டம், உள்ளுணர்வு

இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று விலை நிற்கக் கூடியவை. ஒருவர் இடைவிடாமல் கடினமாக உழைத்தும் அதிர்ஷ்டம் மற்றும் உள்ளுணர்வு இல்லாமல் வெற்றி பெறாமல் போகலாம். ஜக்கர்பர்க் கூட, ஃபேஸ்புக் ஒரு அதிர்ஷ்டமான ஆனால் சுவாரஸ்யமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

4. பொறுப்பு

எந்த ஒரு வர்த்தகம் அல்லது தொழிலும் மிகப்பெரிய பொறுப்பாகும். ஒவ்வொரு வர்த்தகரும், தீவிரமான சில நேரங்களில் ஆபத்தான முடிவு எடுக்க வேண்டியிருக்கும். இது நிறுவனத்திற்கு நல்லதாகவும், தீங்கானதாகவும் அமையலாம். எனவே தான் சில பொறுப்புகளை மட்டும் கொண்டுள்ள தொழிலாளராக இருப்பது சிறந்தது. பலரும் தோல்வி அடைய இது ஒரு முக்கியக் காரணம்.

5. போட்டி

நிறுவனம் செழித்து விளங்கினால் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. உங்கள் தவறுகளை சாதகமாக்கிக் கொள்ள போட்டியாளர்கள் காத்திருப்பார்கள். போட்டி இல்லாத துறையே கிடையாது. எனவே தான் வர்த்தகத்தில், போட்டியாளர்களின் அசைவுகள், உத்திகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பது அவசியம். இதன் மூலம் சாதக பாதகங்களை அலசி சிறந்த உத்தியை தீர்மானிக்கலாம்.

6. வளங்கள்

எல்லா வர்த்தகத்திற்கும், மூலப்பொருட்கள், தொழிலாளர்கள், அறிவு, நேரம், நிதி ஆகிய வளங்கள் தேவை. குறிப்பாக நிதி உதவி மிகவும் அவசியம். இன்று வர்த்தகம் துவங்க அதிக நிதி தேவைப்படலாம். ஆனால் ஸ்டாட்ர்ட் அப் இணையதளங்களில் இந்த பிரச்சனை இல்லை. இங்கு புதிய ஐடியாக்களுக்கு நிதி உதவி அளிக்கலாம். செலவந்தர்களாக முதலீட்டாளர்களையும் ஈர்க்கலாம்.

7. செயல்கள்

80 சதவீத மக்களை போல முதல் முயற்சிக்கு பிறகு விட்டுவிடாமல், 20% வெற்றியாளர்கள் தங்கள் வெற்றிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இது வாழ்நாளின் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம் என்பதை உணர வேண்டும். இதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். தொடர்ந்து முயற்சி செய்ய முறையான ஊக்கம் தேவை. வர்த்தகம் என்பது நீண்ட கால திட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

8. நிறுவன மதிப்பு

வெற்றிகரமான வர்த்தகத்தின் மற்றொரு முக்கிய அம்சம் நிறுவனத்தின் நன்மதிப்பாகும். இது போட்டித்தன்மையை அதிகமாக்கி, வர்த்தகர்கள் மற்றும் பங்குதாரர்கள் கவனத்தை ஈர்த்து, பொருட்கள், நிதி மற்றும் தகவல் ஆதாரங்களை அணுக வைக்கிறது. நிறுவன மதிப்பு இயல்பாகவும், திட்டமிட்டும் வளர்த்தெடுக்கப்படலாம். ஒரு நிறுவனத்திற்கு தானாக உருவாகும் மதிப்பு கொஞ்சம் ஆபத்தானது என வல்லுனர்கள் கருதுகின்றனர். பொதுவாக ஒரு நிறுவனம் வழங்கும் சேவை அல்லது தயார்ப்பு சார்ந்தும், நிறுவனம் வாடிக்கையாளர்களை நடத்தும்விதம் சார்ந்தும் மதிப்பு அமையும்.

வர்த்தக மனிதராக இருப்பது என்பது ஒரு தலைவராக இருந்த மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து வழிகாட்ட வேண்டும். அவர்கல் இதயத்தில் பொறியை உருவாக்க வேண்டும். எனவே தான், ஒரு வர்த்தக மனிதர் தனது அறிவு மற்றும் திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். விளையாட்டிலும் ஆர்வம் தேவை. ஏனெனில் மனதில் உற்சாகம் இல்லை எனில் உடல் வேலை பளுவால் களைத்துவிடும். புதியவற்றை கற்றுத்தரும் சுவையான புத்தகங்களை வாசிக்கலாம். இது மன அமைதிக்கும் உதவும். ஓய்வு இல்லை எனில் மன அழுத்தம் அதிகமாகி பணியில் உற்சாகம் குறையும்.

(ஆங்கில கட்டுரையாளர்: மெலிசா மார்செட். இது வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி சமூக பதிவாகும். இதன் உள்ளடக்கம், புகைப்படங்கள் அதன் ஆசிரியருக்கு உரியவை. இதில் உள்ளவை ஏதேனும் காப்புரிமை மீறல் என கருதினால் எங்களுக்கு எழுதவும்.)

தமிழில்: சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL