26/11 மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதலில் 157 பேரைக் காப்பாற்றிய அமெரிக்க ஹீரோ!  

0

2008இல் மும்பையில், லக்ஷர் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்திய 12 தாக்குதலில் 166 மக்கள் கொலை செய்யப்பட்டனர்; 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த 26/11 தாக்குதல், இந்தியாவின் சமீப கால வரலாற்றின் மிக மோசமான இருட்காலங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த மாதிரியான கடினமான நேரங்களில்தான், உண்மையான ஹீரோக்கள் வெளிவருவார்கள். மும்பை தாஜ் ஹோட்டலை முற்றுகையிட்ட போது, 157 மக்களைக் காப்பாற்றிய அமெரிக்காவின் கடற்படை வீரர் 'கேப்டன் ரவி தரணிதர்கா' எனும் ஹீரோவின் கதை தான் இது.

இந்தியா டைம்ஸ் நாளிதழின்படி, பத்தாண்டிற்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் தன் உறவினர்களுடன் விடுமுறை நாட்களைச் செலவழிக்க கேப்டன் ரவி தரணிதர்கா மும்பைக்கு வந்திருந்தார். மும்பை தாக்குதல் நடந்த அந்த நாளில், இவரும் இவரது குடும்பத்தினர்களும் தாஜ் ஹோட்டலின் 20 -வது மாடியில் சௌக் எனும் லெபனான் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

 படம் : இந்தியா டைம்ஸ்
 படம் : இந்தியா டைம்ஸ்

அப்போது ஹோட்டலில் சிக்கிக்கொண்டு இருந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் கேத்தி ஸ்காட்-கிளார்க் மற்றும் அட்ரியன் லேவி தந்த தகவலின்படி, தொலைபேசியில் தாக்குதல் விஷயத்தை கேட்டவுடன், கேப்டன் ரவி தரணிதர்காவும், தென் ஆப்பிரிக்காவின் 6 முன்னாள் படை வீரர்களும் ஒன்று சேர்ந்து, தாக்குதலை எதிர்த்துப் போராட களமிறங்கினர்.

அவர்களில் இரண்டு தென் ஆப்பிரிக்கா படை வீரர்கள், தாக்குதல் சூழ்நிலையை மக்களுக்கு எடுத்துரைத்தனர்; கேப்டன் ரவி தரணிதர்காவும் மற்றொரு படை வீரரும், பொதுமக்கள் தங்க, பாதுக்காப்பாக இடம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அந்த மாடிக்கு தீவிரவாதிகள் வர முடியாதவாறு, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த படிக்கட்டுகளை, மேஜைகள் மற்றும் நாற்காலிகள் கொண்டு அடைத்தனர். பொதுமக்களை அந்த பாதுக்காப்பான ஹாலிற்கு, சமையல் அறை வழியே அழைத்து செல்லும்போது, கிடைக்கும் கத்திகள், இறைச்சி வெட்டு கத்திகள், ராடுகள் போன்றவற்றை ஆயுதங்களாக சேகரித்துக் கொண்டனர், என்று பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் "தி சியேஜ்: 68 ஹார்ஸ் இன்சைட் தி தாஜ் ஹோட்டல்" எனும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின், 157 பேர்கள் தங்க வைக்கப்பட்ட ஹாலை இருளாக்கி, கனமான பொருட்கள் கொண்டு கதவுகளை இந்த வீரர்கள் அடைத்தனர். மக்களை அமைதியாக இருக்கமாறு கேட்டு கொண்டனர். அந்த அறையின் அவசர வழியையும் அடைத்து விட்டு, உடனடியாக வெளியேறும் அவசியம் வந்தால் மட்டும், அடைப்பை நீக்குமாறு ஹோட்டல் பணியாளரிடம் கேட்டுக்கொண்டனர்.

அப்பொழுது உடனே இரண்டு குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. தாஜ் ஹோட்டலின் கோபுரங்களில் தீவீரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிகள் வைத்தது தெரிந்தவுடன், தாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் தயாராக இருந்தனர். இரவு இரண்டு மணியளவில், தாஜ் ஹோட்டலின் நடு கோபுரத்தில் தீவீரவாதிகள் 10 கிலோ ஆர்.டி.எக்ஸையும், ஆறாவது மாடியில் தீயையும் வைத்து விட்டனர். இந்த தீ மேல் மாடிகளுக்கு பரவத் தொடங்கியதால், இவர்கள் தப்பிக்க இருந்த ஒரே வழி அடையவும், மின்சாரம் செயலிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாகும், சிக்கலான சூழலில் மாட்டிக் கொண்டனர். அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்தனர்.

வழியில் தடை இல்லாததை, தென் ஆப்பிரிக்கா படை வீரர்கள் உறுதி செய்துகொண்டனர். பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற, கேப்டன் தரணிதர்கா உதவி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது 84 வயதான ஒரு பாட்டியால் 20 அடியிலிருந்து அந்த படிக்கட்டில் இறங்க முடியவில்லை. என்னை இங்கேயே விட்டுவிட்டு நீங்கள் தப்பியுங்கள் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், கேப்டன் அவரையும் காப்பாற்ற வேண்டும் என்று, ஒரு வைட்டரின் உதவி கொண்டு, அந்த பாட்டியை தன் கைகளில் தூக்கி கொண்டு படியிறங்கினார்.

அந்த படிக்கட்டுகள் குறுகியிருந்தது. தென் ஆப்பிரிக்கர்களும், தாஜ் பாதுகாவலர்களும் மக்களை பொறுமையாக படியில் இறங்குமாறு அறிவுரைத்து கூட்டிச் சென்றனர். குழந்தைகள், பெண்கள், பாதுகாவலர்களும், இந்த படை வீரர்களை பின்தொடர்ந்து சென்றனர். கேப்டன் தரணிதர்காவுடன் சிலர் கடைசியாக இறங்கி வந்தனர். ஒவ்வொரு தடத்தையும் கவனத்துடன் பயந்து கொண்டு கடந்தனர். ஒவ்வொரு மாடியில் இருந்த அவசர வழியின் கண்ணாடி வழியாக, அந்த மாடியின் வரண்டாவில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, நகர்ந்தனர். அந்த 157 பேர்களையும் மெதுவாகவும் சீராகவும், ஆபத்தில் இருந்து தப்பிக்க இந்த வீரர்கள் உதவியுள்ளனர். 

கட்டுரை: Think Change India

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்