பணிக்கு செல்வோர்க்கு திட்டமிட்ட டயட் மீல்ஸ் வழங்கும் 'ஃபிட்கோ '

0

எங்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஏதாவது ஒரு உடல் வலிமை சார்ந்த செயல்பாட்டிலோ அல்லது விளையாட்டிலோ ஈடுபட்டிருந்தார்கள். இதை சிலர் போட்டிக்குரிய நோக்கத்தில் செய்துகொண்டிருந்தார்கள். சிலர் பூங்காக்களில் வேடிக்கையாக செய்தார்கள். நாங்கள் வேலையில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியபோது எல்லா உடல்சார்ந்த நடவடிக்கைகளும் நின்றுபோய்விட்டன.

இதே நிலைதான் பிட்ஸ் பிலானியின் முன்னாள் மாணவர்களான அனுபம் கார்க், அங்கித் அகர்வால் மற்றும் நரேந்திரன் ஆகியோருக்கு ஏற்பட்டு, அங்கு தங்களை கண்டுகொண்டார்கள். ஓலா, மைவாஷ் மற்றும் கேப்ஜெமி்னி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் மூவரும் எந்த நேரமும் கம்ப்யூட்டர் திரையை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். பெரும்பாலான நேரங்களில் அதிக நேர வேலையும் ஆரோக்கியமற்ற உணவும் கிடைத்தன.

இவர்களைப் போல வேலை வேலை எனஅலையும் நண்பர்களும் எடை கூடுவதையும் நோய்க்கு அருகில் இருப்பதையும் உணர்ந்தார்கள். கடந்த ஆண்டிலேயே அனுபம், டயட் பிளான் எடுத்து உடலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எனினும், ஒவ்வொரு நாளும் பொருட்களை பட்டியலிடுவதும் ஆறு மதிய உணவுகளை சமைப்பதும் நேரத்தைக் கொல்லும் சமாச்சாரமாகவும் அலுப்பாகவும் இருந்தது.

எண்ணத்தை உருவாக்கிய எண்கள்

சரிவிகித உணவின் தேவை பிரச்சினைக்கு தீர்வுகாண அவர் நினைத்தபோது, அந்த அட்டவணையை தேவைப்படுவோர் முறையாக பின்பற்றவேண்டும் என்றும் கருதினார். அப்போதுதான் 'ஃபிட்கோ' பிறந்தது. வாழ்க்கை நடைமுறையால் ஏற்படும் கோளாறுகளை வேலையில் இருப்போர் தீர்த்துக்கொள்வதற்கான வெவ்வேறு வகையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அளித்து, அதுவும் அவர்களது வீடுகளுக்கேக் கொண்டுபோய் சேர்க்கப்படிகிறது.

மூன்று பேரும் செய்த சிறு ஆய்வில், பெங்களூருவில் பத்து பேரில் நான்கு பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 70 சதவீதிம் பேர் அதிக எடையால் பாதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்தார்கள். “நகரின் மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் நான்கு பேரில் மூன்றுபேர் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதெல்லாம் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படுபவை” என்கிறார் 27 வயதான அனுபம்.

இதுபற்றி சில மருத்துவர்கள், புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களை மூன்று பேரும் சந்தித்துப் பேசினார்கள். நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை அளிப்பதில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பதை உணர்ந்தார்கள். மருத்துவர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியுடன் சத்தான உணவுக்கான திட்டத்தை எளிதில் பயன்படுத்துவது மாதிரி வடிவமைத்தார்கள். பல்வேறு வகையான சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப சத்தான உணவுகளை திட்டமிடுவதில் கட்டுப்படுத்துவதில் ஊட்டச்சத்து அறிவியல் உதவியாக இருந்தது என்கிறார் அனுபம்.

பல திட்டங்களின் செயல்பாடு

மனஅழுத்த மேலாண்மைத் திட்டம் சரிவிகித உணவை அளிக்கிறது. அது மூளை செல்களை அமைதிப்படுத்துகிறது. கார்டிசால் மற்றும் அட்ரினலின் அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறார் அனுபம். மேலும், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் திட்டம் வழங்கும் வைட்டமின் மிகுந்த உணவுகள் உடலின் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது. அதனால் நோய் தொற்றும் வாய்ப்புகளும் குறைகின்றன.

“நாங்கள் வெவ்வேறு வகையான நுகர்வோர்களுக்குத் தேவைகளை முன்வைத்து ஒரு வரைபடத்தை உருவாக்க முயற்சி செய்துவருகிறோம். உடற்பயிற்சிக்கூடங்கள், ஃபிட்னஸ் ஸ்டுடியோஸ், வேறுபட்ட வசதிகளுடன் பணியாற்றும் மருத்துவர்கள், டயலக்டோலாஜிஸ்டிக்ஸ், பரந்துவிரிந்த தளங்களில் பணியாற்றுவோர் என பல்வேறு சூழல்களில் இருந்து வரும் பங்கேற்பாளர்களிடம் பேசி அதை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று கனவுத் திட்டத்தை விவரிக்கிறார் அனுபம். இதைச் சார்ந்து நுக்ரவோர்களுக்கு இரண்டு வகையான சலுகைகளை வழங்குகிறது.

பொதுத்திட்டம் கிடைப்பதற்கான நேரடி சந்தா முறை: நாள் ஒன்றுக்கு 299 ரூபாய் கட்டணம். அதில் உடல் வலிமை கூட்டுதல், எடை மேலாண்மை, மனஅழுத்த மேலாண்மை, எதிர்ப்புசக்தியை அதிகரித்தல் மற்றும் கொழுப்புச் சத்து குறைவான உணவுகள் அடங்கியிருக்கும்.

சிறப்பு ஆலோசனைச் சார்ந்த திட்டம்: சில சிக்கலான பிரச்சினைகளுக்கு நெருக்கமான கவனிப்பும் மேலும் தனிப்பட்ட கண்காணிப்பும் தேவைப்படும். ஆன்லைனில் சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய உடல்நலனின் அடிப்படையில் திட்டமிட்ட உணவுக்கான பட்டியலையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்தக் குழு பல்வேறு வகைப்பட்ட நுகர்வோர்களின் தேவைகள் சார்ந்து செயல்படவும், எல்லா உணவுத் தேவைகளுக்குமான ஒரே தீர்வைத் தருவதற்கும் திட்டமிட்டு வருகிறார்கள். தேவைகளுக்கு ஏற்ப பொதுமக்களுக்கான எக்ஸ்கியூட்டிவ் சாப்பாட்டையும் ஃபிட்கோ வழங்குகிறது.

ஃபிட்கோ சமையல் அறையில் அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களாலும் உணவு தயார் செய்யப்படுகிறது. நுகர்வோர்களுக்கு சரியான நேரத்தில் உணவை விநியோகிக்கும் வேலையும், தரத்தை சோதிப்பதும் பெரும் சவாலாக இருக்கிறது.

எதிர்காலத் திட்டங்கள்

பெங்களூருவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 2 ஆயிரம் நுகர்வோர்களுக்கு 5 ஆயிரம் எக்ஸ்கியூட்டிவ் மற்றும் சரிவிகித உணவை வழங்கியுள்ளதாக அனுபம் தெரிவிக்கிறார். ஐம்பது சதவிகிதம் பேர் மீண்டும் வருகிறார்கள். தற்போது வருமானம் சில லட்சங்களைத் தொட்டிருக்கிறது. இப்போதுதான் ஃபிட்கோ நடைபழகுகிறது.

விநியோகத்தில் வருமானத்தைப் பகிர்ந்தளிக்கும் சந்தை மாதிரிக்காக ஃபிட்கோ உழைத்துவருகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் இணையத்தில் ரிஜிஸ்டர் செய்து சேவையை விரிவுபடுத்தலாம். எக்ஸ்கியூட்டிவ் உணவை தேவைக்கு ஏற்ப வழங்கினாலும், சரிவிகித உணவை ஒரு நாளைக்கு முன்பே சொல்லிவிடவேண்டும்.

தற்போது கோரமங்களா, எச்எஸ்ஆர் லேஅவுட், பிடிஎம் லேஅவுட், பெல்லாந்தூர், சர்ஜாபூர் சாலை, எம்லூர், பொம்மனஹள்ளி மற்றும மரத்தாஹள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு தற்போது உணவு விநியோகம் செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் பெங்களூரு முழுவதும் விநியோகத்தை விரிவுபடுத்துவதை இலக்காக வைத்திருக்கிறார்கள். நுகர்வோர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனமும் செலுத்தும் எண்ணமும் வைத்திருக்கிறார்கள்.

யுவர்ஸ்டோரி கருத்து

தற்போதைய சுகாதாரம் மற்றும் உணவு தொழில்நுட்ப தளங்களை ஒருங்கிணைப்பதாக ஃபிட்கோவின் எண்ணம் இருக்கிறது. மேலும் பல ஆர்டர்களைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்துவதற்கும் கூடுதலாக கவனம் செலுத்திவருகிறது.

பெரும்பாலான உணவு மற்றும் சுகாதாரத் தளங்கள் பெங்களூரு போன்ற முதல் கட்ட நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன. தொடக்கநிலை நிறுவனங்கள் வளரும்போது அவை வேறு நகரங்களுக்கும் நகரமுடியும். உணவு விநியோகத்தில் வாடிக்கையாளர் தேவை அறிந்து விநியோகம் செய்வதில் வலிமையான அனுபவம் தேவையாக இருக்கிறது.

ஆக்கம்: SINDHU KASHYAP | தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இதுபோன்ற ஆரோக்கிய உணவுத் துறையில் தொழில்முனை நிறுவனங்கள் பற்றிய கட்டுரைகள்:

மும்பைவாசிகளை காலையில் தட்டி எழுப்பும் 'ஜூசிஃபிக்ஸ்'

இயற்கை வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் 'நேச்சுரலி யுவர்ஸ்'