காலணியில் கிடைக்கும் ஆத்மதிருப்தி: 'கிரீன்சோல்' வித்தியாச முயற்சி!

0

நான் ஷ்ரியன்ஸ் பண்டாரி. மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் மேலாண்மை (BMS) பட்டப்படிப்பு மூன்றாமாண்டு மாணவன். எனது நண்பன் ரமேஷ் தாமி தேசிய அளவிலான ஒரு தடகள வீரர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தஅவனுக்கு முறையான கல்வி தகுதி எதுவும் இல்லை. நாங்கள்தான் "கிரீன் சோல்" (GreenSole) நிறுவனர்கள். கிரீன்சோல், மறுசுழற்சி காலணிகளை சந்தைப்படுத்துவது மட்டுமல்லாம்ல்,செருப்பு வாங்க முடியாத லட்சக்கணக்கான மக்களுக்கு அதைக் கொண்டு சேர்க்ககூடிய ஒரு தொழில் நிறுவனம்.

கிரீன்சோல் ஆரம்பிக்கப்பட்டது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் 35 கோடி ஜோடி விளையாட்டு காலணிகள் (ஸ்போர்ட்ஸ் ஷூ’க்கள்), காலாவதி ஆகித் தூக்கி எறியப்படுகின்றன. அதே சமயத்தில் 100 கோடியே 20 லட்சம் இந்திய மக்கள் காலில் அணிய செருப்பு இல்லாத நிலையில் இருக்கின்றனர்.

இந்த யோசனை எப்படி ஆரம்பித்தது?

ரமேஷும் நானும் தடகள வீரர்கள். நாங்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் நான்கு ஷூக்களையாவது அளவுக்கு மீறிப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகிறோம். நாங்கள் அந்த ஷூக்களை சாதாரண செருப்புகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தோம். இந்த அற்புதமான வேலையைப் பெரிய அளவில் செய்தால் அது லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படுமே என்று யோசித்தபோது தோன்றியது தான் கிரீன்சோல் நிறுவனம்.

இது வரை கிரீன்சோலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு?

எங்களது இந்தப் புதுமையான யோசனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 50 ஜோடி செருப்புகள் விற்பனை மற்றும் மும்பையில் செருப்பில்லாதவர்களுக்கு 100 ஜோடி செருப்புகள் நன்கொடை என்று மெதுவாக ஆரம்பித்தோம். இரண்டு இண்டஸ்ட்ரியல் டிசைன் காப்புரிமையை(D262161 & D262162) நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பு இந்த டிசைன்களில் தான் வெளியிடப்படுகிறது.

எங்களது பயணத்தில், திரு.உதய் வன்காவாலா, (மும்பை பிரந்தியத்திற்கான NEN Consultant) திரு.யதுவேந்திர மாத்தூர், (EXIM Bank Indiaன் தலைவர்) திரு.ஆசாத் ஆர். ரஹ்மானி, (BNHSன் இயக்குனர், பல்வேறு திட்டங்களில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர்) மேஜர் ஜெனரல் கேவிஎஸ். லாலோத்ரா (அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியின் முன்னாள் முதல்வர்) போன்ற நல்ல மனிதர்கள் எங்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்தனர்.

ஒரு சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ரிடியா தேசிய பி ப்ளான் (Ridea National B-plan) போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றது போன்ற ஒருசில அங்கீகாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற ஆசியாவின் மிகப்பெரிய பி பிளான் போட்டியில் யுரேகாவின் டெக்னாலாஜி மற்றும் ஸஸ்டெயினபிலிடிக்கான விருதை வென்றோம். இந்த ஆண்டின் டாடா நிறுவன பர்ஸ்ட் டாட்டின் (Tata First Dot) பட்டியலில் முதல் 25 நிறுவனங்களில் இடத்தைப் பிடித்தோம். அகமதாபாத்தில் உள்ள ஈ.டி.ஐ.ஐ ன்(EDII) இந்தியாவின் புதுமை செய்தோர் பட்டியலில் முதல் 30 நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். இது மட்டுமல்ல. கடந்த ஆண்டில் ஜெய்ஹிந்த் கல்லூரி மற்றும் NENல் நடைபெற்ற பி பிளான் போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை. எங்களது வழியில் நிறையத் தடைகள் இருந்தன. எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் எங்களது முயற்சிக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எங்களது இந்த தீவிரமான முயற்சியை பற்றி புரிய வைப்பது பெரும் சவாலாக இருந்தது.

எங்களது அடுத்த திட்டம்?

எங்களது பணியை நிறையப் பேர் விரும்புவதைப் பார்க்கும் போது அற்புதமாகவும், ஊக்கமளிப்பதாகவும் உணர முடிகிறது. இதை எங்கள் வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொள்வோம். நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பணியின் நோக்கத்தில் உள்ள மகத்தான தன்மை, தேவை உள்ளவர்களுக்கு காலணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எங்களது லட்சியத்தை நோக்கி எங்களை உந்தித் தள்ளுகிறது. இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் பணியாகவும் உருவாகிறது. சந்தையைப் பொருத்தவரையில், பழைய ஸ்போர்ட்ஸ் ஷூக்களை செருப்புகளாக மாற்றி முதலில் இந்தியவில் சந்தைப் படுத்தவும் பின்னர் உலகின் பிற நாடுகளுக்கு அதை கொண்டு செல்லவும் விரும்புகிறோம்.

உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நாளொன்றுக்கு 150 ரூபாய்க்கும்(2.50 டாலர்) குறைவான வருமானம் உடையவர்களாக இருக்கின்றனர் என்பது ஜீரணிக்க முடியாத தகவல். காலணி அணியாமல் வெறும் கால்களுடன் அலைவதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை நோய்கள் பல தாக்குகிறது, சிலர் இறந்தும் போகிறார்கள் என்ற தகவல் படிப்பதற்கே கடினமாக உள்ளது. தற்போது நாங்கள் காட்டாபூல்ட் (Catapooolt) மூலம் வெகுஜன மக்களிடம் நன்கொடை திரட்டும் (crowdfunding) இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களது முயற்சிக்கு ஆதரவு சக்திகளைத் நாடிச் சென்று கொண்டிருக்கிறோம்.

சமூகத்தின் பெருந்தன்மையான ஆதரவுடன் ஸ்போர்ட்ஸ் ஷூவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது, மறுசுழற்சி செய்யப்பட்ட காலணிகளை சந்தைப்படுத்தல், இல்லாதவர்களுக்கு காலணி வழங்கல் ஆகியவற்றின் மூலம் நாங்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தொலைநோக்குத் திட்டத்தில் இருக்கிறோம். புதிய செருப்பு, ஷூக்களை தயார் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலைப் பேணும் கார்பன் ஃபுட் பிரின்ட்டைப் உருவாக்குகிறோம் (save carbon footprint). நன்கொடையாளர்களை ஊக்குவிப்பதற்காக கிரீன்சோலுக்குச் சொந்தமான - ஒரு ஜோடி செருப்பு அல்லது அதற்கும் மேற்பட்டவற்றை வழங்குவது மற்றும் “ஆரவல்லி மலைகளின் பறவைகள்” (birds of aravallis) எனும் எனது புத்தகத்தை பரிசாக அளிப்பது என்று பல யுக்திகளை கையாளுகிறோம். இந்திய கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வதற்கு மிகப்பெரும் அளவிலான நன்கொடையாளர்களை சாத்தியப்படுத்துவதற்கு, இந்த வெகுமதிகளை நாங்கள் வழங்குகிறோம். ஆரவல்லி கிராம மக்களுக்கு 40 ஜோடி கிரீன்சோல் செருப்புகளை தர இருக்கிறோம்.

இந்த திட்டம் உண்மையில் மனநிறைவளிக்கக் கூடியது. நமக்கே உரிய எளிதான வழியில் நாம் இணைந்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். எங்கள் கதை பலருக்கும் ஊக்கத்தை அளித்து, சமூகத்துக்கு செய்ய கூடிய பணிகளை சவாலாக எடுத்து கொண்டு சேவை செய்ய உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன் 

மூலக்கட்டுரையாளர் ஆங்கிலத்தில் : கிரீன் சோலின் நிறுவனர்களில் ஒருவரான ஷ்ரியன்ஸ் பண்டாரி.