’சரியான சந்தையை முதலில் புரிந்து கொள்ளுங்கள்’- VMAX இணை நிறுவனர் தீபக் குரானா! 

1

இன்று எல்லா தொழில்முனைவோரின் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வியே, எந்த மாதிரியான ஒரு ஆப்’பை உருவாக்கவேண்டும், அதில் வருமான எப்படி ஈட்டமுடியும் என்பதுதான்? யுவர்ஸ்டோரியின் மொபைல்ஸ்பார்க்சில் இதை பற்றி விளக்கிப் பேசிய விமாக்ஸ் சிஇஒ மற்றும் இணை நிறுவனர் தீபக் குரானா, இந்தியாவில் உள்ள மொபைல் சந்தை முற்றிலும் வேறுபட்டது என்றார். 

“ஒரு தொழில்முனைவராக கடந்த ஆறு மாதங்களாக நான் பல்வேறு விதமான தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப்’ஸ், மற்றும் மக்களை சந்தித்து வருகிறேன். இவர்கள் அனைவரும் ஒரே விதமான பிரச்சனையை சந்திப்பதை தெரிந்து கொண்டேன். இது இந்திய வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள உதவியது.” 

மொபைல் மற்றும் தொழில்நுட்பம் அதிவேகமாக மாறிவருகிறது. இன்று இருப்பது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இருக்கப்போவதில்லை. இந்திய சந்தை மற்றும் வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள முதலில் இந்தியாவை புரிந்து கொள்வது அவசியம் என்கிறார் தீபக். 

இந்தியாவை மூன்று பாகங்களாக பிரிக்கிறார் தீபக்:

இந்தியா 3: 55 சதவீதம், 65 கோடி மக்கள், மாத வருமான ரூ.1,500  

இந்தியா 2: 30 சதவீதம், 45 கோடி மக்கள், மாத வருமான ரூ.8,000  

இந்தியா 1: 15 சதவீதம். அதிக வருமானம். 

தனிநபர் சராசரி வருமான சதவீதத்தில் குறைவாக உள்ளது இந்திய சந்தை. அதாவது மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள சந்தையே இந்திய சந்தையாகும். ஆனால் பெரும்பாலான டிஜிட்டல் நிறுவனங்கள், இந்தியா 1 பிரிவை குறிவைத்து தங்களை எடுத்து செல்கின்றனர் என்றார் தீபக். 

“வேகமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருட்கள் பிரிவில், அதிக சந்தை வாய்ப்பு உள்ளது. இதில் பெரிய மற்றும் சிறந்த விற்பனை வாய்ப்பு உள்ளது. ஷாம்பூ பாக்கெட்கள் விற்கப்பட்ட போது இதை உணர்ந்தனர். ஆனால் அதே சந்தையை மொபைல் பிரிவில் எடுத்து கொண்டால், குறைந்த தொகை ரிச்சார்ஜ்க்கு மட்டுமே இந்த பிரிவு மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாமல் குறைந்த சதவீத முதல் பிரிவு இந்தியாவை நிறுவனங்கள் இலக்காக கொண்டு இயங்குகின்றன,” என்றார். 

அதேபோல் மொபைல் போன் வகைகளை இந்திய பயனாளிகள் படி பிரித்து பார்க்கும் பொழுது, 55 சதவீதம் (இந்தியா 3) மட்டுமே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்தியா 2 பிரிவினர் ரூ.15,000 குறைவான போன்களை பயன்படுத்துகின்றனர். இது 23 சதவீதமாக உள்ளது. இந்தியா 1 அதாவது குறைந்த பிரிவு மக்கள் மட்டுமே 15000 ரூபாய்க்கு அதிகமான போனை வாங்க முற்படுகின்றனர். இருப்பினும் பெரும்பாலான ஆப்’கள் இவர்களை குறி வைத்தே உருவாக்கப்படுகிறது. 

மொபைல் இந்தியாவை கட்டவிழ்கவேண்டும் என்றால், முதலில் நம் எண்ணங்களை கட்டவிழ்கவேண்டும் என்று நம்புகிறார் தீபக். இன்று ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்தியா 1 பிரிவை தாண்டி சந்தையை புரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்கிறார் அவர். 

“ஒரு தொழில்முனைவராக, ஆப் டெவலப்பராக முதலில் இந்தியா 3 பிரிவு சந்தையை புரிந்துகொள்வோம். இது வரை தெரியாமல் இருந்ததை அறிவோம். இதை புரிந்து கொள்ள ஒரே வழி, அந்த சந்தையில் உட்புகுந்து நாமும் ஒரு வாடிக்கையாளராக இருந்து பார்த்து அதை புரிந்து கொள்ளவேண்டும்.”