2016-ல் நீங்கள் குறித்துவைக்கும் நினைவலைகள் யாவை?

0

என் இனிய நண்பர்களே... (தொழில்முனைவோர் மற்றும் அல்லாதோர்), 2016 ஆம் ஆண்டு நம் எல்லாருக்குமே ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக இருந்தது என்று நீங்கள் அனைவரும் ஒற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

ஸ்டார்ட்-அப் உலகம், ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. உலகமே பெரும் மாற்றத்தை சந்தித்து வருகின்றது. இதன் விளைவாக, பல மாதங்களாக நாம் கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் கனவுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, சில சிதைந்து போய் உள்ளது, ஒரு சில வெற்றியும் அடைந்தன. 

நிலைத்தன்மை இல்லாத இந்த போக்கு, நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஆம் நம்மிடம் இருப்பவற்றை, செய்பவற்றை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பு. நான் தனிப்பட்ட முறையில் குறிப்பாக பல புதிய பாடங்களை இந்த ஆண்டு கற்றுள்ளேன்.

நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்... இந்த வெளிப்புற கூச்சல்கள் என்னை, என் பயணத்தை திசைத்திருப்பாமல் இருக்க என்ன செய்யவேடுமென சிந்தித்து கொண்டிருக்கிறேன். இந்த உலகமே வேறு மாதிரி சிந்தித்தாலும் நான் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தொடருகிறேன்.  

மாற்றங்கள் பல ஏற்பட்டாலும், நான் என் நம்பிக்கையை நோக்கி செல்கிறேன். பொருட்கள், மக்கள் மற்றும் சூழ்நிலைகள் மாறினாலும், நானும் எனக்கு இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள அனுபவங்களும் என்னுடன் காலம்காலமாக நினைவில் இருக்கும். 

உங்களுக்கு இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள அனுபவங்கள் என்ன? மறக்கமுடியாத அந்த சம்பவங்கள் என்ன? அதை எங்களுடன் பகிருங்கள்...

இந்த ஆண்டில் கற்ற எதை நீங்கள் உங்களுடன் தொடர்ந்து எடுத்துச்செல்ல விரும்புகிறீர்கள்?  

வரும் புத்தாண்டின் உங்கள் கனவுகள் என்ன? இலக்குகள் என்ன? எங்களுக்கு சொல்லுங்கள்... 

உங்கள் அனுபவத்தை பகிர இங்கே க்ளிக் செய்யுங்கள்

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்தா ஷர்மா