பார்வையற்றோர் டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

0

கண் பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் 1996-ம் வருடம் முதல் நடைப்பெற்று வருகிறது. உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில், ஓரளவு மட்டுமே பார்வை உடைய மற்றும் முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்காக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. நான்கு ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை மற்றும் ஒரு குறைந்த நேர கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பார்வையற்றோர் டி20 கோப்பையை இந்திய அணி பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்களில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. 

பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில், இந்திய அணி, 198 ரன்கள் என்ற இலக்கை 9 விக்கெட்டுகள் மற்றும் 14 பந்துகள் கை இருப்பில் கொண்டு வெற்றி பெற்றது. பாகிஸ்தான், டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து, 197/8 ரன்களை 20 ஓவர்களில் எடுத்தது. இந்திய அணி சார்பில் களம் இறங்கிய ஓப்பனர் ப்ரகாஷா ஜயராமையா, 99 ரன்களை அடித்து இந்திய அணி வெற்றிக்கு வித்திட்டார். மற்றொரு ஓப்பனர் ஆன அஜய் குமார் ரெட்டி, 43 ரன்கள் அடித்து இலக்கை அடைய உதவினார். ப்ரகாஷா அதிக ரன்களை எடுத்து, இந்தியாவை 200/1 ரன்களை 17.4 ஓவர்களில் அடித்து வெற்றியை தேடித் தந்தார். 

கண் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாட்டை, இரண்டு பார்வையற்ற பேக்டரி ஊழியர்கள் மெல்பர்னில் 1922 ஆம் ஆண்டு உருவாக்கினர். தி விக்டோரியன் ப்ளைண்ட் கிரிக்கெட் அசோசியேஷன் என்ற அமைப்பு 1922 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1928 இல் ஒரு விளையாட்டு மைதானமும், க்ளப் ஹவுஸ் ஒன்றும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக மெல்பர்னில் கட்டப்பட்டது. 

பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். எட்டு மேட்சுகளில் வெற்றிப்பெற்றே இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் ஒரு முறை மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோற்றது. ஆனால் தகுதிச் சுற்றில் எல்லா மேட்சிலும் வெற்றிப் பெற்று இறுதிக்கு வந்த பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India