UEF வர்த்தக உச்சிமாநாடு இரண்டாம் பதிப்பு சென்னையில் நடைபெறும்!

0

UEF வர்த்தக உச்சிமாநாட்டின் இரண்டாம் பதிப்பு சென்னை வர்த்தக மையத்தில் 2017-ம் ஆண்டு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை ட்ரேட் செண்டரில் நடைபெற உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் மாபெரும் வர்த்தக கண்காட்சி இடம்பெற உள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜம்மு & காஷ்மீர் அரசின் நிதித்துறை அமைச்சர் ஹசீப் ஏ. ட்ரபு ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

சிஸ்கோ ஜஸ்பர் பொதுமேலாளர் ஜஹாங்கீர் முகமது, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஹாரூன் ரஷீத்கான், ஜிஇ பவர் கன்வர்ஷன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அஸீஸ் முகமது, ஏபிபி இந்தியா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் அகிலூர் ரஹ்மான், குளோபல் ஈக்விட்டிஸ் அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டியின் முதுநிலை நிதிமேலாளர் மற்றும் தலைவர் ஜீன் பால் கச்சூர் மற்றும் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உதவி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.லஷ்மிநாராயணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் பிற பங்கேற்பாளர்களாகும்.

நாட்டின் பொருளாதாரம், தொழில், கல்வி மற்றும் சமூகவளர்ச்சி ஆகியவற்றிக்கு உதவக்கூடிய வழிவகைகளை கலந்தாலோசித்து முடிவுக்குக்கொண்டு வருவதற்காக பல்வேறு முக்கிய பங்குதாரர்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு தளமாக UEF உச்சிமாநாடு 2017 விளங்குகிறது. பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தொழில்முனைவோர்களுக்கு நிதி வசதி, வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். தொழில்துறையில் சாதித்து முன்னோடிகளாக விளங்குபவர்கள் தாங்கள் சந்தித்த சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைந்தது குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு ஸ்டார்ட் அப்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வழிகாட்ட இந்த மேடையை பயன்படுத்திக் கொள்வார்கள்.

UEF தலைவர் அஹமது ஏ ஆர் புஹாரி கூறுகையில், 

“எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என 2000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றுகூட்டிய 2015-ல் நடைபெற்ற முதல் உச்சிமாநாட்டின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து UEF வர்த்தக உச்சிமாநாடு 2017 நடைபெறவிருக்கிறது. 

“உச்சிமாநாட்டின் முந்தைய பதிப்பில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2,400 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய வர்த்தகம் உருவாக்கப்பட்டது.” 

முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு சென்ற பதிப்பைவிட அதிக கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை பங்கேற்கச் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம், என்றார்.

இந்தியாவிற்குள் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) பங்களிப்பதன் மூலமும் இந்த உச்சிமாநாட்டின் வழியாக ’இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்திற்கு உதவுவதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். 2030-ம் ஆண்டு முடிவிற்குள் 5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதத்திற்கு தமிழ்நாட்டின் GDP-க்கு பிற்பட்ட சமுதாயத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதும் UEF-ன் நோக்கமாகும்,” என்றார்.

UEF ஒருங்கிணைப்பாளர் எம் ரசாக் கூறுகையில், “இரண்டாவது முறையாக UEF வர்த்தக உச்சிமாநாட்டை 2017-ல் ஏற்பாடு செய்து நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உச்சிமாநாட்டின் முக்கியத்துவமும் பெரியளவிலான தன்மையும் வணிக சமூகத்தினரை நெருக்கமாக்குகிறது. கருத்தரங்கில் பங்கேற்கும் சிந்தனையாளர்கள், முந்தைய ஆண்டில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு சாட்சியாவார்கள். 

“இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள உதவக்கூடிய புதிய, தனித்துவமான, புதுமையான யோசனைகளை ஐக்கிய பொருளாதார மன்ற சமுதாயத்திற்குள் கொண்டு வருவது எங்கள் நோக்கமாகும்.” 

எத்தகைய பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை அறியவும், அதை எப்படி அதிகரிப்பது, நீண்டகால மாற்றத்திற்கு செயல்நடவடிக்கையில் எப்படி பங்கேற்கலாம் போன்றவற்றை விவாதிப்பதற்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் உதவக்கூடிய கருத்தரங்கு அமர்வுகள் இந்த ஆண்டின் நிகழ்வில் இடம்பெறும்,” என்றார்.

UEF-ன் தலைமை இயக்குநர் W.S ஹபீப் பேசுகையில், 

“அதிகளவில் டிஜிட்டல் உலகமாக மாறுவதை முன்னெடுத்துச் செல்வதற்கும் வணிக சமூகத்தினரிடையே பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களின் தொழில்முனைவு திறன்களை வளர்த்துகொள்ள நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் காட்ட UEF வர்த்தக உச்சிமாநாடு சமீபத்திய எடுத்துக்காட்டாகும்,” என்று குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள், உருவாகி வரும் பிரச்சனைகள், மாறிவரும் இயங்கியல் ஆகியவை குறித்து தொழில்துறையின் சகபணியாளர்களிடையே ஆழமான கலந்துரையாடல் மற்றும் சிந்தனை பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட இந்த ஆண்டின் கருத்தரங்கு ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது. பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் குழு விவாதமும் இடம்பெறும். இது விளைவுகளை முறையாக வடிவமைக்க உதவும். ’தொழில்முனைவு’, ’வணிகம் மற்றும் பொருளாதார சமூகம்’, ‘கலை மற்றும் கலாச்சாரம்’, ’புதுமை மற்றும் தொழில்நுட்பம்’, ’கல்வி மற்றும் திறன் மேம்பாடு’ போன்றவை இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய தலைப்புகளாகும்.

எதிர்காலத்தை வடிவமைக்கும் பொருளாதார போக்குகள், ’வெற்றிகரமான தொழில்முனைவோரின் அனுபவங்கள் – வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’, ’இந்திய துறைகளுக்கான நிதி மற்றும் முதலீடு வாய்ப்புகள்’, ’தொழில் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் மற்றும் புதுமை’ போன்ற தலைப்புகளில் பல பயனுள்ள தகவல்கள் இக்கருத்தரங்கில் வழங்கப்படும்.

தொழில்முனைவோரும் நிறுவனங்களும் தங்களது புதுமையான திட்டங்களை சாத்தியக்கூறு நிறைந்த முதலீட்டாளர்களிடம் சமர்பிக்க இந்த வர்த்தக கண்காட்சிக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஒத்த சிந்தனையுடைய தொழில்முனைவோர்களை சந்திக்கவும் துறையில் முன்னணியில் இருப்பவர்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடவும் லாபகரமான வணிக யோசனைகளை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணையும் இந்த வர்த்தக கண்காட்சி வழிவகுக்கும்.