இந்திய இணையத்தின் இரண்டாவது திருப்புமுனையாக இருக்கப்போவது பிராந்திய மொழி தொழில்நுட்பம்! 

0

இந்த ஆண்டு மொழி சார்ந்த தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்கள் இதன் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றன. 2017 நமக்கு கற்றுத்தந்துள்ள பாடமும் இது தான். அதாவது இந்தியாவுக்காக நீங்கள் சேவைகளை  உருவாக்குகிறீர்கள் என்றால், இந்திய மொழிகளை நீங்கள் அலட்சியம் செய்ய முடியாது என்கிறார், ரெவரி நிறுவனர் அரவிந்த பேனி (Arvind Pani, Founder of Reverie. )

2017 ம் ஆண்டு விடைபெற உள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் சீராக தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் மூலம் இணையத்திற்கு வரும்  வாடிக்கையாளர்களால் இந்திய இணைய பரப்பு தலைகீழாக மாறியது. அதே போல ஒரு மாற்றத்தை, இப்போது இந்திய மொழிகளால் உண்டாகும் வேகமான வளர்ச்சியின் மூலம் காண்கிறோம்.

மொழி சார்ந்த தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்கள் இதன் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றன. 

இந்த ஆண்டு மொழி தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முக்கிய பாய்ச்சல்கள் மற்றும் அவற்றின் தாக்கம் பற்றி ஒரு பார்வை:

இணையத்தில் இந்திய மொழிகளின் வீச்சு 2017 ஏப்ரல் மாதம், கூகுள் மற்று கேபிஎம்ஜி நிறுவனம், இணையத்தில் இந்திய மொழிகளின் நிலை மற்றும் வீச்சு பற்றிய, இந்திய இணையத்தை நிர்ணயிக்கும் இந்திய மொழிகள் எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டது.  இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 234 மில்லியன் எனும் இந்திய மொழிகளின் இணைய பயனாளிகளின் எண்ணிக்கை, 175 மில்லியன் எனும் ஆங்கில மொழி இணைய பயனாளிகளைவிட அதிகம் என்பதாகும். இந்த போக்கு மேலும் வலுவாக தொடரும் நிலை உள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இணையத்திற்கு வரும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் சொந்த மொழியிலேயே இணையத்தை அணுகுவார்கள் என்பது, இந்திய மொழிகள் இணைய பயனாளிகள் எண்ணிக்கையை 536 மில்லியனாக உயர்த்தும். ஆங்கில மொழி இணைய பயனாளிகள் எண்ணிக்கை 199 மில்லியனாக இருக்கும்.

சில நேரங்களில் இந்த புள்ளிவிவரங்கள் வியப்பாக அமையலாம். ரெவரி லாங்வேஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் இந்தியன் லாங்வேஜ் ரிப்போர்ட் படி, இந்திய மொழி பேசுபவர்கள் மத்தியில் குஜராத்தி மொழி முதல் மூன்று இடங்களில் இல்லாவிட்டாலும் கூட, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் முதல் மூன்று இடங்களில் இந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி இடம்பெற்றுள்ளன. 

இந்திய மொழிகளில் போதிய மொழியாக்க சேவைகள் இல்லாத குறையால் இந்திய மொழி பயனாளிகள் இதுவரை சமூக ஊடக செயல்பாடு, மேசேஜ் அனுப்புவது, இணையத்தில் உலாவுவது, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். ஆனால்  நிறுவனங்கள் இந்த பயனாளிகளை மனதில் கொண்டு சேவைகளை உருவாக்கத்துவங்கும் போது இந்த நிலை மாறும்.

இந்திய மொபைல்களில் மொழிக்கான தேவை

இது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. இந்திய செல்பேசி மொழிக்கு ஆதரவு முக்கிய முன்னேற்றமாக, இந்திய அரசு அனைத்து மொபைல் சாதனங்களிலும் 22 இந்திய மொழிகளின் பயன்பாட்டு வசதி இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது இந்த மொழிகளில் டிஜிட்டல் இருப்பை அதிகரிக்க உதவும். 2018, பிப்ரவரியில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் போது. இந்தியாவில் அனைத்து புதிய செல்போன்களும், 22 அதிகாரப்பூர்வ மொழி ஆதரவை கொண்டிருப்பதோடு, இரண்டு உள்ளூர் மொழிகளில் உள்ளீடு வசதியை கொண்டிருக்க வேண்டும்.

இந்த முடிவின் விளைவால், ஆங்கிலம் பேசாத இந்திய மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் ( நூறு கோடிக்கு மேல்) சாதனங்கள் முன் தேவையாக இருக்கும். மலிவான டேட்டா திட்டங்கள் மற்றும் விலை குறைந்த போன்கள் ஆகியவை சேரும் போது நாட்டில் இணையத்தின் மீது இது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பதை எளிதாக கற்பனை செய்துப்பார்க்கலாம். 

டிஜிட்டல் அரசு சேவைகள்

அரசு டிஜிட்டல் சேவைகள் மேலும், இந்திய அரசு அதிக அரசு சேவைகளை இணையத்தின் மூலம் வழங்குவதை ஊக்குவித்து வருகிறது. இணைய பயன்பாடு அதிகரிக்கும் போது, இணையம் அரசு சேவைகளை அணுகுவதற்கான மற்றும் அதை அளிப்பதற்கான மேடையாக மாறும். 

மாநில அரசுகளும், இணையதளங்கள் மற்றும் செல்போன்கள் மூலம் டிஜிட்டல் மேடைகளில் உள்ளூர் மொழியாக்கத்தை ஊக்குவித்து வருகின்றன.

இந்திய அரசின், உமாங் (யூனிபைடு மொபைல் அப்ளிகேஷன் பார் நியூ ஏஜ் கவர்னன்ஸ்) செயலி இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 இந்திய மொழிகளில் சேவை அளிக்கிறது. உமாங் செயலி அனைத்து அரசு சேவைகளையும் அணுக வழி செய்யும்  செயலியாக இருப்பதால், இதன் உள்ளூர் மொழி ஆதரவு அம்சம் அரசு சேவைகளை எளிதாக அணுக உதவும்.

வெகுமக்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு செல்வதற்கான பீம் செயலியும் எளிதாக பயன்படுத்தகூடியதாக இருக்கிறது. ஆங்கிலம் பேசும், மேல்தட்டு இந்திய மத்தியதர வர்கத்தினர் போலவே சராசரி இந்தியர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை பெறும் வகையில் இந்த செயலி இந்திய மொழிகளின் ஆதரவை கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு மொழி சார்ந்த தொழில்நுட்பத்தில் முக்கிய அம்சமாக, எந்திர கற்றல் மற்றும் குரல் தேடல் அமைந்தது. எந்திர கற்றல், உள்ளூர் மொழியாக்கத்திற்கு அவசியமான, மேலும் சரியான, துல்லியமான மொழியாக்கத்தை சாத்தியமாக்குகிறது. லட்சக்கணக்கான உதாரணங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மொழியாக்க அமைப்புகள் கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்பை மேம்படுத்த இது உதவுகிறது.

இந்திய மொழிகள் அவற்றுக்கு உரிய மொழியியல் விநோத தன்மையால் மொழியாக்க அமைப்புகளை குழப்பக்கூடும். தண்ணீர்; ஜலம் அல்லது பானியாக இருக்கலாம். இது மாறினால் மோசமாக தோன்றும். ஆனால் குரல் வழி சேவைகள், இந்தியர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி தேட வழி செய்கிறது. முதல் முறையாக இணையத்திற்கு வரும்  இந்தியர்கள், டைப் செய்வதை விட குரல் வழி தேடலில் ஈடுபட விரும்புவார்கள். 

இந்திய மொழிகளில் டைப் செய்வது அவர்களுக்கு அந்நியமாக இருக்கலாம். குரல் வழி சேவை அப்படி இல்லை. கூகுள் தகவலின் படி, இந்தியாவில் நிகழும் தேடலில் 28 சதவீதம் குரல் வழியாக நிகழ்கிறது.

தீர்வுகளை உருவாக்குவது

இந்திய மொழிகளுக்கு டிஜிட்டல் ஆதரவு தேவை என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் உணரத்துவங்கியுள்ளன. இந்திய மொழிகளுக்கு உகந்த முழுமையான பயனாளர் அனுபவத்தை அளிக்கும் வகையில் இது இருக்க வேண்டும். மேலோட்டமான அம்சங்கள் பயனளிக்காது. ஆனால் மொழி சேவைகளை உருவாக்குவது அதற்கே உரிய சவால்களை கொண்டுள்ளது.

இந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் ஆதரவை உருவாக்க வளங்கள் குறைவாகவே உள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்தில், பல ஐரோப்பிய மொழிகளுக்கான சொல் வள  ஆவணத்தொகுப்பாக யூரோபால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மொழிகளில் இது போல ஒன்று இல்லை. இது போன்ற வளங்களை நாம் புதிதாக உருவாக்க வேண்டும்.

இது மிகவும் உற்சாகமான பரப்பாகும். தீர்வு காண்பதற்கு  பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த சேவைகள் உருவாக்கப்பட்டாலும் அவை சராசரி இந்தியர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். 

2017 நமக்கு கற்றுத்தந்துள்ள பாடமும் இது தான். அதாவது இந்தியாவுக்காக நீங்கள் சேவைகளை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்திய மொழிகளை நீங்கள் அலட்சியம் செய்ய முடியாது என்பதாகும்.

ஆங்கில கட்டுரையாளர்: அர்விந்த் பானி. இவர் Reverie Language Technologies எனும் மொழி சேவை சார்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ