ஸ்மார்ட் போன் பயன்பாடு உங்களுடைய பர்சனாலிட்டியை வெளிப்படுத்துமா?

0

விலை ஒப்பீடு மற்றும் பரிந்துரை செய்யும் வழிகள் பொருகி விட்டன. இதுபோன்ற ஆப்ஸ்கள், தயாரிப்புகளின் விலை மற்றும் விவரங்கள் பற்றிய நிலையான தகவல்களைத் தருகின்றன. பயனாளர்கள் ஒப்பீடு செய்துகொள்வதை புரிந்துகொள்வதற்கு இதுபோன்ற தரவுகள் பயன்படும். தரவுகளை உருவாக்கும் வெவ்வேறு வகையான ஆப்ஸ்கள் தனிநபரைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கின்றனவா?

இந்த செயலிகள், பிராண்டுகள் விற்பனையாவதற்கு உதவிகரமாக இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த தொடக்கநிலை நிறுவனமான 'மோபிஆர்பிட் லேப்ஸ்', இந்த லட்சியத் திட்டத்தில் பணியைத் தொடங்கியது. தங்களுடைய 'ஸ்மார்ட்லி.மீ' என்ற ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட் போன் பயனாளர்களுடன் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பிராண்டுகள் பற்றித் தெளிவாக அறிந்துகொள்வதற்கான உதவியை செய்தார்கள்.

உதாரணத்திற்கு, கேனான் போன்ற ஒரு கம்பெனி, ஸ்மார்ட் போன் பயனருக்கு போட்டோகிராபி பிடிக்கும் என்றால், அந்த டிவைசில் இருந்து தரவுகளைப் பெற்று, தனிப்பட்ட முறையிலான பிரச்சாரத்தை, ஸ்மார்ட்லி.மீ மூலம் தயாரிப்புகளை அந்த பயனரிடம் விற்பனை செய்கிறது.

மோபிஆர்பிட் லேப்ஸ் இணை நிறுவனரான முரளிதர் ராஜன் கூறுகையில்,

ஒரு ஸ்மார்ட் போன் பயனாளி நல்ல புகைப்படக்கலைஞராக இருப்பாரா அல்லது தொடக்கநிலை நிறுவனங்கள் பற்றிய செய்திகளைப் படிக்கிறவராக இருப்பாரா என்பதை எங்கள் செயலி கண்டுபிடித்து விடும்.

தொடக்கநிலை நிறுவனங்களின் வழிமுறைகள், பயனர்கள் எல்லைக்கு மட்டும் உட்பட்டதில்லை. அது வொயிட் லேபிள் வழிமுறையாக இருப்பினும், நுகர்வோர் தொழிலில் இருக்கும் எந்த நிறுவனத்துக்கும் அதை சில்லறை வர்த்தகர்களுக்கு ஆப்ஸாக உருவாக்குகிறது மொபிஆர்பிட்.

அனைத்து இருப்புகள் பற்றிய தகவல்ளை வைத்திருக்கும் யூனிட்டுகள்( எஸ்கேயூ) முழுமையான பட்டியலாக, நடைமுறையில் இருக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் ஒப்பீடு செய்வதாக இருக்கும். அது ஸ்டோர் மேலாளரால் கையாளப்பட்டு புத்திசாலித்தனமாக நுகர்வோர்கள் பங்கேற்குமாறு செய்யப்படும்.

இந்த எண்ணமானது, மூன்று நிறுவனர்களும் நண்பர்களாக இருந்தபோது ஆயிரக்கணக்கானோருடன் உரையாடியதன் மூலம் உருவானது. 2011 மற்றும் 2014 காலகட்டத்தில் பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்களில் கிடைத்தத் தகவல்களின் அடிப்பையில் உருவாக்கப்பட்டது. நிறுவனர்களான சந்தோஷ் பிரபு, முரளிதர் மற்றும் பலாஷ் பட்டீல் ஆகியோர் மனிதர்களுக்கு இரண்டாவது இயல்பாக மொபைல்கள் இருப்பதை உணர்ந்தனர். இந்தத் தொழில்நுட்பத்தை கட்டமைப்பதற்காக தங்களுடைய செழிப்பான வேலைகளை அவர்கள் துறந்தார்கள்.

அவர்களுடைய வளாகம் மிகவும் எளிமையானது. இந்த செயலி, நுகர்வோர்களின் தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்படும்போது, அது பிராண்டுகளின் தங்கச் சுரங்கமாக இருக்கிறது. செயல்பாடுமிக்க விஷயங்களுக்கு அவர்கள் எவ்வளவு பணம் தரவும் தயாராக இருக்கிறார்கள்.

சாதாரண கடைகளில் சரக்குகளை மேலாண்மை செய்ய ஒரு மொபைல் எப்படி உதவியாக இருக்கிறது என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்களா என்று மோபிஆர்பிட் நிறுவனர்கள் சில்லறை வர்த்தகர்களை சந்தித்துப் பேசினார்கள்.

“எங்களுடைய தயாரிப்பை ஏழு மாதங்களில் உருவாக்கினோம். இது ஒரு மென்பொருள். தரவுகளைக் கொண்டதால், அது தொழில்நுட்பத்தை போட்டிக்குள்ளாக்கியது” என்கிறார் முரளிதர்.

மோபிஆர்பிட், தன்னுடைய தயாரிப்பை அக்டோபர் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது அது வலிமையான ஆளுமை சுற்றுச்சூழலை உருவாக்கி வருகிறது. அதனுடைய சர்வர் கட்டமைப்பை டிஜேங்கோ மற்றும் போஸ்ட்கிரஸ் டிபியுடன் சேர்ந்து உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கு முன் பயனர்களின் கருத்துகளைக் கேட்கிறார்கள்.

வர்த்தக முறை

பிஸினஸ் 2 நுகர்வோர் மாடலான பி2சி மாதிரி ஆளுமைகளை சார்ந்து பரிந்துரைகளை செய்கிறது, நுகர்வோர்களுக்கு இலவசங்களை வழங்குகிறது. தகவல்கள் பிராண்டுகளுக்கு கொடுக்கப்பட்டுச் சேவையை வழங்குகிறார்கள்.

"நாங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனம், தகவல்களை மிகப்பெரிய பயனாளிகளிடம் இருந்து சேகரித்துத் தருகிறோம். நாங்கள் ஆலோசனை வழங்குவதில்லை. ஆனால் பிராண்டுகள், வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கான பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்கின்றன” 

என்று விவரிக்கிறா் முரளிதர்.

இரண்டாவது பிஸினஸ் மாதிரி என்பது நுகர்வோர் தொழில்களுக்கு நாடு முழுவதும் உள்ள விநியோக மையங்களின் வழியாக தயாரிப்புகளை விற்பது. பிஸினஸ் டு நுகர்வோர் தொழில் மாதிரிக்கு ஸ்மார்ட்லி.மீ செயலி ஆதரவளித்தது. அதனிடம் 5 ஆயிரம் டவுன்லோடுகள் இதுவரை இருக்கின்றன. இந்த தொடக்கநிலை நிறுவனம் சில பிராண்டுகளுடன் சேர்ந்து ஆளுமை தரவுகளை விற்க முயற்சி செய்துவருகிறது. இதன் நிறுவனர்கள் தற்போது 70 ஆயிரம் டாலர் மென்பொருள் தளத்தை கட்டமைக்க செலவு செய்துள்ளார்கள்.

முதலீடும் போட்டியும்

மோபிஆர்பிட்டின் பிஸினஸ் மாதிரிக்கு ஒரு பக்கம் வலிமை தேவைப்படுகிறது. ஏனென்றால், நுகர்வோர் அவர்களுடைய ஆப்ஸை டவுன்லோடு செய்வதை நம்பியிருக்கிறது. பிறகு பிராண்டுகளுடன் பங்குதாரராக இணைந்து தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக வணிக பக்கத்தில் நிறுவனம் நிச்சயமாக பிராண்டுகள் மற்றும் நுகர்வோர் தொழில்களுடன் கூட்டு சேரவேண்டும்.

ஆர். நடராஜன், சிஎப்ஓ, ஹெலியான் வென்ஞ்சர் பார்ட்னர்ஸ், இது பற்றி கூறுகையில்,

இரண்டு பக்கமும் ரிஸ்க் இருக்கிறது. ஒரே நேரத்தில் நுகர்வோர்களை கண்டறியவும், வலிமையான தொழில்நுட்பத்தை கட்டமைக்கவும் நிறுவனர்களுக்கு அலைவரிசை தேவையாக இருக்கிறது.

மைஸ்மார்ட்பிரைஸ், ஸ்மார்ட்பிரிக்ஸ் மற்றும் பிரைஸ்பாபா போன்ற நிறைய தொடக்கநிலை நிறுவனங்கள், இதேபோன்ற பிஸினஸ் மாதிரிகள் கொண்டுள்ளன, ஆனால் அவர்கள் தகவல்களுக்காக நுகர்வோர்களை பிரித்துவைத்திருப்பதில் தனித்து செயல்படுகிறார்கள். இருபதை நெருங்கும் நிறுவனங்கள் இந்த தொழிலைப் பயன்படுத்தி மில்லியன் டாலர் வாய்ப்புகளை இந்தியாவில் மட்டும் பெறுவதற்கு முயற்சி செய்வதாக மதிப்பிடப்படுகிறது. மைஸ்மார்ட்பிரைஸ் ஆக்ஸல் மற்றும் ஹெலியான் பார்ட்னர்ஸ் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து 11 மில்லியன் டாலரைப் பெற்றிருக்கின்றன.

ஒரே திரையில் ஒரு ஆப்ஸில் கிடைக்கும் விலைகளை மற்ற செயலியில் ஒப்பீடு செய்யக்கூடிய வசதிகளை வூடூ டெக்னாலஜிஸ் என்ற தொடக்கநிலை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதாவது அந்த வின்டோ திரையில் ஃபிளிப்கார்ட்டில் உள்ள விலையை, ஸ்நாப்டீலோடு ஒப்பீடு செய்துகொள்ளமுடியும்.

மோபிஆர்பிட்டின் இரண்டாவது பிஸினஸ் மாதிரிக்கு ரேடியோலோகஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து போட்டி வருகிறது. நுகர்வோர்களின் அணுகுமுறைகளில் இருந்து கிடைக்கும் நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படுவதற்கான நம்பிக்கையை சில்லறை வர்த்தகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

மோகன்தாஸ் பை, மேலாண்மை இயக்குநர், ஆரின் கேபிட்டல் இது பற்றி கூறுகையில்,

தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒருகட்டத்தில் மிகப்பெரிய நிறுவனங்களாக மாறும். ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள், அவற்றில் பல தோல்வியை சந்திக்க நேரிடும்.

யுவர்ஸ்டோரி கருத்து

யாரும் கருவியைச் சேர்ந்த ஆளுமைகளை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரும் ஆப்ஸைத் தாண்டிய ஷாப்பிங் பழக்கமும் உள்ள ஆளுமைகளைத்தான் உருவாக்குகிறார்கள். இங்கே மோபிஆர்பிட் அதில் மற்றவர்களைவிட விளிம்பில் இருக்கிறது. ஒரு ஆளுமையை உருவாக்குவதற்கு முன்பு தொடக்கநிலை நிறுவனம் போனில் உள்ள முழுமையான ஆப்ஸ் சூழலை புரிந்துகொள்கிறது.

ஆனால் அவர்களுடைய வெற்றி என்பது, நுகர்வோர் தொழில்களுடன் நுகர்வோர்களை இணைத்து பணம் சம்பாதிக்கும் திறமையில்தான் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு பி2பி2சி க்கு வாய்ப்புள்ள ஆண்டு. எனவே அவர்கள் அதை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஆக்கம்: VISHAL KRISHNA தமிழில்: தருண் கார்த்தி

செயலி தரவிறக்க செய்ய: Mobiorbit

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற மொபைல் செயலியில் புதிய தொழில்நுட்பச் சேவை தொழில்முனைவு நிறுவன கட்டுரைகள்:

ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கணக்குச் சொல்லும் 'ஸ்மார்ட்ப்ரோ'

இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவும் 'ஃபர்ஸ்ட் டச்'