தேசிய தொழில்முனைவு விருது: சிறந்த இன்குபேட்டர் மையமாக திருச்சி ஆர்இசி ’TREC-STEP’ தேர்வு!

0

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று புது டெல்லியில் நடைப்பெற்ற முதல் தேசிய தொழில்முனைவோர்கள் விருதுகளை வழங்கி வெற்றியாளர்களை கெளரவித்தார். மத்திய தொழில் திறன் மேம்பாட்டுதுறை (MSDE) அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழில்முனைவு நோக்கோடு ஊக்கத்துடன் செயல்படும் இளைஞர்களை அங்கீகரிக்கவும் இதன் மூலம் மேலும் பல இந்திய இளைஞர்கள் தொழில்முனைவோர்கள் ஆகவேண்டும் என்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.

இதில் திருச்சியி உள்ள ரீஜனல் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா (TREC-STEP), நாட்டின் சிறந்த இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் மையமாக செயல்பட்டு ஸ்டார்ட்-அப்’களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளிப்பதாக கூறி, தேசிய தொழில்முனைவு விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தொழில்முனைவு விருதுகள், MSDE மற்றும் நாடெங்கும் உள்ள பல்வேறு பிரபலமான கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஐடி (மும்பை, கான்பூர், டெல்லி மற்றும் சென்னை) உட்பட, டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (TISS), மும்பை, XLRI, ஜாம்ஷத்பூர் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கல்வி நிறுவனம் தலைமை வகித்து இவ்விழாவை நடத்தும். இந்த ஆண்டு அதாவது  2016-17, ஐஐடி டெல்லி தலைமையில் நடத்தப்பட்டது.  

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் பேசுகையில், தொழில்முனைவின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து, அது எவ்வாறு உலக அளவில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்கினார். வெற்றிப்பெற்ற தொழில்முனைவர்களை பாராட்டினார் அவர். விழாவில் பேசிய ராஜீவ் பிரதாப் ரூடி, தொழில் திறன் மேம்பாட்டுதுறையில் உள்ள தொழில்முனைவர்களுக்கான திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் இந்த அமைச்சகம், பல இளம் இந்தியர்களை தொழில்முனைவிற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து வெற்றி தொழில்முனைவர்கள் பலரின் உத்வேக பேச்சுகள் இடம் பெற்றது. அதில் வருண் கேதன் (Urban Clap நிறுவனர்), ஸ்ரீகாந்த் போலா (Bollant Industries நிறுவனர்), ரிதேஷ் அகர்வால் (Bollant Industries, நிறுவனர்) ஆகியோர் தங்களின் தொழில் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் கதைகள் விழாவில் கூடி இருந்த இளம் தொழில்முனைவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. 

சிறந்த தொழில்முனைவர் விருதுகள் 11 பிரிவுகளில் வழங்கப்பட்டது. இது இரண்டு தேர்வு முறைகளாக பிரிக்கப்பட்டிருந்தது- விருதுகள் பிரிவு மற்றும் அங்கீகாரம் பிரிவு. மூன்று கடின தேர்வு முறைகளுக்கு பின்னர் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றியாளர்கள் பற்றிய விவரங்கள்:

விருதுகள் பிரிவு

அக்ரி, உணவு, காட்டியல் பொருட்கள்- Wow Momo Foods Private Ltd

கெமிக்கல், ஃபார்மா, பயோ மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள்- Saral Design Solutions Private Ltd 

இ-வணிகம், லாஜிஸ்டிக்ஸ், போக்குவரத்து மற்றும் இதர சேவைகள்- JETSETGO Aviation Services

இன்ஜினியரிங் சேவைகள்- Swadha Energies

ஐடி மற்றும் ஐடிஇஎஸ், நிதி - Lucideus Tech

பெண்கள்- S V Engineering and Consultancy Services

அங்கீகரிக்கப்பட்ட விருதுகள் பிரிவு

கல்வி நிலையங்கள்: RSETI, கர்நாடகா

இன்குபேட்டர்- TREC-STEP, திருச்சி ஆர் இ சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா

வழிக்காட்டி Mentor (அரசு துறை): பிரதீப் குப்தா, இயக்குனர், சைபர் மீடியா குழுமம்

வெற்றிப்பெற்ற தொழில்முனைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், பெரிய நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.