உங்கள் தயாரிப்பு/சேவை மற்றும் நிறுவனத்தை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கும் யுவர்ஸ்டோரி TechSparks 2017

0

உங்கள் ஐடியா மற்றும் கனவு முயற்சிகளை உலகத்தரம் வாய்ந்த எங்கள் விழாவில் கலந்துகொண்டு வெளிப்படுத்துங்கள். இந்தியா முழுதும் அதை சென்றடையச் செய்யுங்கள்!

இந்தியாவின் வருங்கால பொருளாதார வளர்ச்சி தொழில்முனைவின் வளர்ச்சியை பொருத்து அமையும். ஸ்டார்ட்- அப்’களை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அளவிலேயே தொழில்முனைவர்களை உருவாக்கும் பல நிகழ்ச்சிகள் தற்போது நடக்கத் துவங்கியுள்ளது. தொழில்முனைவுச் சூழலை உருவாக்கி அதன் மீதான மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். நிலையான தயாரிப்பு மற்றும் சேவைகள் மூலம் சமூகத்தில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த பல தொழில்முனைவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இது நம் நாட்டில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கி, இந்தியாவை ஒரு சரியான பாதையில் இட்டு செல்லவுள்ளது. 

டிஜிட்டல் உலமாகமிப்போன சூழ்நிலையில் அதற்கேற்ற பல டெக் நிறுவனங்கள் களத்தில் இறங்கி சாதிக்க காத்திருக்கின்றனர். இவை அனைத்தையும், தொழில்முனைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் கொண்டுவந்து, ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதத்தில் யுவர்ஸ்டோரி, ‘டெக்ஸ்பார்க்ஸ் 2017’ எனும் ஆண்டு விழாவை நடத்தத் தயாராக உள்ளது. தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் பங்குபெற்று பயன் பெறுங்கள். 

எல்லாருக்கும் பயன் தரும் டெக்ஸ்பார்க்ஸ்

யுவர்ஸ்டோரி-ன் ஆண்டு விழாவான டெக்ஸ்பார்க்ஸ் இந்த ஆண்டு தனது எட்டாவது பதிப்பை நடத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விழாவின் தன்மை பெருகிக்கொண்டே போகிறது. டெக்ஸ்பார்க்ஸ் 2017’ இந்தியா முழுதுமுள்ள தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழிலதிபர்களை அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடும் விழா ஆகும். 

இந்த ஆண்டு விழாவில் உலகெங்கும் உள்ள சிறந்த பேச்சாளர்கள், தங்கள் அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். வெற்றிக்கதைகள் முதல் தோல்வி அனுபவங்கள் வரை, தாங்கள் சந்தித்த சவால்கள் என்று பலரும் தங்கள் தொழில் பயணங்களை பகிரவுள்ளனர்.

செப்டம்பர் 22-23 ஆம் தேதி, பெங்களூர் யெஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவாந்தா’-வில் டெக்ஸ்பார்க்ஸ் நடைப்பெற உள்ளது. TechSparks 2017 விழாவில் நீங்கள் தவறவிடக்கூடாத சில முக்கிய அம்சங்கள்:

பரந்த தொடர்புகள்: இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ்-ல் 5000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 100 மில்லியன் மக்களை யுவர்ஸ்டோரி தளம் மூலம் இவ்விழா சென்றடைய உள்ளது. அதைத்தாண்டி ரேடியோ, டிவி, விளம்பரப்பலகைகள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பல லட்சம் பேரிடம் இவ்விழா சென்றடையப் போகிறது. 

இணைப்புகள் ஏற்பட வாய்ப்பு: 90 பிரபல பேச்சாளர்கள், 40 பார்ட்னர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பல பெரிய கார்ப்பரேட் தலைவர்கள், முதலீட்டாளர்கள், ப்ராண்டுகள் மற்றும் மீடியா நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் கலந்துரையாடி, தொடர்புள் மற்றும் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

குழு உறுப்பினர்கள் சந்திப்பு: டெக்ஸ்பார்க்ஸ் விழாவில் டெவலப்பர்கள், டிசைனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் வருவதால் உங்களுக்கு தேவைப்படும் சரியான குழுவினரை சந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவும். 

எங்களுடன் இணையுங்கள்

கடந்த வருட டெக்ஸ்பார்க்ஸ் விழாக்களில் புதிய ப்ராடக்ட் மற்றும் சேவைகளை பலர் காட்சிப் படுத்தினர். அதேப்போல் இந்தாண்டு நீங்கள் செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். வாய்ப்பை தவரவிடாமல் பலபேரிடம் உங்களைப் பற்றி விளக்க சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

எங்களை தொடர்பு கொள்ள techsparks@yourstory.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.