மொபைல் தியேட்டர்கள் வாயிலாக கிராமங்களுக்கு திரைப்படங்களைக் கொண்டு சேர்க்கும் சதீஷ் கௌஷிக்!

0

நாம் திரைப்படங்களுக்காக நேரமும் பணமும் செலவிடுவதை வைத்தே திரைப்படங்கள் மீது நமக்கிருக்கும் ஈடுபாட்டைத் தெரிந்துகொள்ளலாம். நகர்புறங்களில் இருக்கும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளாகட்டும் சிறு நகரங்களில் இருக்கும் சினிமா தியேட்டர்களாகட்டும் வெகு சிலரே திரைப்படங்கள் பார்க்க செலவிடுவதற்குத் தயங்குவர். எனினும் இந்திய கிராமப்புறங்களில் அத்தகைய நிலை இல்லை. ஏனெனில் அனைத்து கிராமங்களிலும் சினிமா தியேட்டர்கள் இருப்பதில்லை. அவர்களால் இணையத்தை அணுக முடியாத நிலை உள்ளது.

இந்தச் சூழலை மாற்றுவதற்காக திரைப்பட இயக்குனர் சதீஷ் கௌஷிக் மொபைல் டிஜிட்டல் மூவி தியேட்டர் (MDMT) உருவாக்கினார். ட்ரக்குகளை தியேட்டர்களாக மாற்றி இந்தியாவில் உள்ள வெவ்வேறு கிராமங்களுக்கு பயணிப்பதே இதன் திட்டமாகும். இதனால் மக்களால் குறைவான கட்டணத்தில், அதாவது 35 முதல் 75 ரூபாய் வரை செலுத்தி திரைப்படத்தைப் பார்க்க முடியும்.

மொபைல் தியேட்டர் உடனடியாக பொருத்தும் விதத்திலும் எளிதாக அகற்றும் விதத்திலும் அமைந்திருக்கும். இந்தத் தியேட்டர்கள் குளிரூட்டப்பட்டு, தீப்பற்றாத விதத்திலும் எந்தவித வானிலையாலும் பாதிக்கப்படாத வகையிலும் 150 பேருக்கு இடமளிக்கும் விதத்திலும் அமைந்திருக்கும். 

சுமார் 35 தியேட்டர்கள் தயாராக உள்ளதாகவும் கிராமப்புற மக்களுக்கு மல்டிப்ளெக்ஸ் அனுபவத்தை வழங்குவதற்காக 150 தியேட்டர்கள் உருவாகிவிடும் என இக்குழுவினர் நம்புவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ட்ரக்கிற்கும் பிரபல திரைப்படத்தின் பெயர்கள் வைக்கப்படும். மிஸ்டர் இண்டியா, பாகுபலி, செஹன்ஷா, டான் என பெயரிடப்படும் என மிட் டே அறிக்கை தெரிவிக்கிறது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மொபைல் தியேட்டரை திறந்துவைத்து ஆதரவளித்தார். இந்த முயற்சிக்கு பிக்சர் டைம் நிறுவனத்தின் நிறுவனரான சுஷீல் சௌத்ரி ஆதரவளித்தார். இந்த மொபைல் தியேட்டர்கள் பிக்சர் டைம் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

இது குறித்து சதீஷ் கௌஷிக் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு தெரிவிக்கையில்,

“திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தியேட்டர் கல்வி தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அரசாங்க பணிகளுக்கும் பயன்படும். தலைவர்களும் பேச்சாளர்களும் தங்களது உரை நாட்டின் உட்பகுதிகளைச் சென்றடையவேண்டும் என விரும்பினால் இதைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நபர் டெல்லியில் இருந்தாலும் மும்பையில் உள்ள மக்கள் சிறிய தியேட்டர் வாயிலாக அதைக் காணலாம்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL