கொல்கத்தாவில் செயல்வழி கல்வியை பயிற்றுவிக்கும் பல்திறன் பெண்மணி குசும் பண்டாரி

0

அவர் ஒரு கல்வியாளர், புகைப்படக் கலைஞர், கலை விரும்பி மற்றும் ஜோதிடர். செயல்வழி கல்வி நிலையத்திற்கு பின்னால் இருக்கும் முகம், இந்தப் பள்ளி மேற்குவங்கத்தில் செயல்வழிக் கல்வியின் முன்னோடி, நகரத்தில் செயல்வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் ஒரே நபர் குசும் பண்டாரி தான்.

வடிவத்தை கொடுத்தல்

“என்னுடைய பட்டப்படிப்பை முடித்ததும் நான் மழலையர் பள்ளியில் சேர்ந்தேன் அங்கே செயல்வழி கல்விக்கான(Montessori) பயிற்சியையும் எடுத்துக் கொண்டேன். அந்த நேரம் தான் இந்தியாவின் மேடம் மான்டிசரி அமைப்பு மற்றும் சர்வதேச மான்டிசரி கழகம் கொல்கத்தாவை பார்வையிட்டது. நான் அவர்களுடைய ஒரு படிப்பை தேர்ந்தெடுத்தேன், அதற்கு மரியா மான்டிசரியின் நிர்வாகி ஜுஸ்டன் நேரடி பயிற்சி அளித்தார். என்னுடைய பயிற்சி காலத்தின் போது பால்(Bal) நிலையத்தின் நிறுவனரும் என்னுடைய வருங்கால மாமியாரையும் எனக்கு அறிமுகம் செய்தனர். என்னுடைய பயிற்சி முடிந்ததும் எனக்கு திருமணமாகிவிட்டது. அதன் பின்னர் 1976ல் நான் பால் நிலையத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்,” என்று நினைவுகூர்கிறார் குசும் பண்டாரி.

கொல்கத்தாவில் செயல்வழி கல்வி இந்த வளாகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தின் அதே கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது, மேடம் மான்டிசரியின் மகன் மரியோ மான்டிசரி இந்தப் பள்ளியை 70களில் பார்வையிட்டார்.

இந்தப் பள்ளியின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் நான் கற்பித்தல், கற்றுக் கொள்தல் மற்றும் குழந்தைகளின் மனநிலை பற்றி நிறையவே கற்றுக் கொண்டேன். இத்தனை ஆண்டு காலமாக என்னுடைய மாணவர்களை கையாள அதுவே எனக்கு உதவுகிறது,” என்கிறார் குசும்.

பணியாற்றும் பகுதி

சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்து இன்று ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராக விளங்குகிறார் குசும் பண்டாரி. தன் 40 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தில், குசும் ஒரு ஆக்கப்பூர்வமான கல்வியாளரில் இருந்து முன்நோக்கி சிந்திக்கும் கல்வி நிர்வாகியாகவும் -தொழில்முனைவராகவும், கல்வியை உற்றுநோக்குபவராகவும், கல்வி வள்ளலாகவும் மாற்றியுள்ளது. அவர் பல்வேறு கல்வி கண்டுபிடிப்புகளின் முன்னோடி. ஆரம்பப்பள்ளி படிப்பிற்கு முன்பிருந்தே கல்வி முறையில் கணினியை தீவிரமாக்குவது போன்ற புதுமைகளை புகுத்தி அவற்றின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

செயல்வழிக் கல்வி பள்ளியை நடத்துவதோடு, குசும் ஒரு தீவிர ஆராய்ச்சியாளர். அவர் ஈடுபாட்டுடன் கல்வி தொடர்பான பிரச்னைகளான மனித வாழ்வில் இளமைக்கால பள்ளிப்பருவத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரம்பப் பள்ளிக்கு முந்தைய நிலையில் செயல்வழிக் கல்விக்கான அவசியம் உள்ளிட்ட ஏராளமானவை குறித்து அலசி ஆராய்பவர். “மனித வளர்ச்சிக்கான தொடர் பங்களிப்பை” நோக்கமாக கொண்ட குசும் பண்டாரி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் யுனெஸ்கோவின் கிழக்கு இந்தியா மன்றத்தைத் தொடங்கியுள்ளார்.

அவருக்குள் இருந்த புகைப்படக்கலைஞர்

அடிப்படையிலேயே பொறுமைசாலியான குசும் பண்டாரியின் ஆர்வம் பலவகையாக வித்தியாசப்படுகிறது. செயல்வழிக் கல்வி தன்னுடைய முதன்மை ஆர்வமாக இருந்தபோதும், அவருடைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, குழந்தைகள் நிலையத்தில் அவர் கடினமாகவும் முழுமனதாக பணியாற்றிய 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்தது. அவர் தன்னுடைய வாழ்க்கையை வேறு கோணத்தில் வெளிக்காட்ட விரும்பினார்.

என் உறவினரின் புகைப்படக் கருவியை வைத்து நான் யதேச்சையாக பல்வேறு புகைப்படங்கள் எடுத்தேன் அதுவே புகைப்படக்காரராக நான் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய தருணம். என்னுடைய புகைப்படங்கள் பாராட்டு பெற்றதும், நான் அதில் தீவிரமாக செயல்படத் தொடங்கினேன். அப்போது தான் கொல்கத்தாவில் ஒரு தேசிய காங்கிரஸ் கூட்டம் நடந்தது, இந்திரா காந்தி அதற்காக அங்கு வந்திருந்தார். புகைப்படம் எடுப்பதில் எனக்கு இருந்த ஆர்வம் என்னை அந்த கூட்டத்தில் பங்கேற்று புகைப்படம் எடுக்க உந்தியது. உள்ளூரைச் சேர்ந்த சில காங்கிரஸ்காரர்களின் உதவியால் எனக்கு நுழைவுச் சீட்டு கிடைத்து நான் கூட்டம் நடைபெறும் நேதாஜி உள்விளையாட்டு அரங்கின் உள் அரங்கம் வரை செல்லும் அனுமதியும் கிடைத்தது. அந்த கூட்டத்தில் இந்திராகாந்தியை நான் எடுத்த புகைப்படங்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் முன்னணி வாரஇதழ்கள் மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியாகின,

என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் குசும். அவர் ஹார்வர்ட்டில் புகைப்படக்கலை தொடர்பாக முறையாக பயின்றுள்ளார். 1985ல் வருடாந்திர கும்ப மேளாவிற்கு சென்ற அவர், ஊர் திரும்பியதும் படதிக் அரங்கில் தனியாக ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சியை இயக்குனர் ம்ரினால் சென் தொடங்கிவைத்தார். அதன் பிறகு அவர் ‘தாடியுடன் கூடிய ஆண்கள்’ வரிசை பற்றியும் கண்காட்சி நடத்தினார். அதில் அவர் பிரதமர் சந்திரசேகர், ஷ்யாம் பெனகல், விஜய் டெண்டுல்கர், அலைக் பதம்சீ, எட் ஆல் உள்ளிட்டோரின் புகைப்படங்களை படம் பிடித்து வைத்திருந்தார்.

அபூர்வமான பொருள்

குசும் ஒரு ஜோதிடக் கலை மாணவரும் கூட, இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமையில் வெளிவரும் கிராஃப்பிட்டி ஆஃப் தி டெலிகிராம் வாரப்பத்திரிக்கையில் கட்டுரையும் எழுதியுள்ளார். குசும் ஜோதிடத்தை நவீன மற்றும் அறிவியல் பூர்வமாக படித்து வைத்திருந்தார். அறிந்து கொள்ளும் ஆர்வம் உடைய மாணவராக, அவர் அந்த பாடத்தின் திறனை கண்டுபிடித்தார். இப்போது ஜோதிடத்தை அன்றாட எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருடைய உள்ளுணர்வை கண்டுபிடிப்பதை நோக்கி எடுத்துச் செல்கிறார். அவருடைய ஆய்விற்காக, குசுமை மாற்று மருத்துவ முறைக்கான கவுன்சில் ஜோதிட – மருத்துவ அறிவியலில் முனைவர் பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளது.

ஹருகி முருகமியின் தீவிர ரசிகை குசும், முருகமியின் அனைத்து நாவல்களையும் படித்துள்ளார், அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு பிடித்த மற்றொரு மிகப்பெரிய ஆர்வமிக்க பகுதி பெங்கால் கலை, அதே போன்று இயற்கையோடு நல்ல தொடர்புடையவர் குசும் பண்டாரி.

ஆக்கம் : Baishali Mukherjee / தமிழில்: Gajalakshmi Mahalingam