சந்தைக்குப் போய் அலைய வேண்டாம், இனி மீன் உங்கள் வீடு தேடி வரும்!

0

வேலை பளுவுக்கு இடையே மீன் வாங்க மறந்து விட்டீர்களா..?

விரும்பிய மீன் கடையில் கிடைக்க வில்லையா..?

அப்படியே வாங்கினால் கூட நல்ல மீன் கிடைக்க வில்லையா..?

இது போன்ற கவலைகள் இனிமேல் வேண்டாம். நீங்கள் விரும்பிய மீன் இனிமேல் உங்கள் வீடு தேடி வரும். மீன் பிடித் தொழிலில் முன்னணியில் உள்ள பேபி மரைன் என்கிற நிறுவனம் ஆன்லைன் மீன் வர்த்தகத்தில் இறங்கி உள்ளது.

நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்ப தரமான மீனை தேர்வு செய்து ஆர்டர் செய்து வாங்கலாம். நவீன ரீதியில் ஐஸ் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு உங்கள் விலாசத்துக்கு வந்து சேரும்.

சர்வதேச வணிக வளர்ச்சி தான் இந்த துறையில் ஆன்லைனில் இறங்க தூண்டியது. ஆனால், அதற்கான பயிற்சியும், தயாரிப்பு பணிகளும் மிகவும் முக்கியம் என்கிறார், பேபி மரைன் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அலெக்ஸ் கே தாமஸ்.

இந்த வணிக முறையை முதலில் நுகர்வோருக்கு புரிய வைப்பதுதான் சிரமம். நகர்ப்புறக் கடைகளில் தரமான மீன் கிடைப்பதில்லை என்கிற புகார் இருப்பதால், ஆன்லைன் வணிகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறது பேபி மரைன்.

இந்தியாவில் அதிகமாக மீன் விற்பனை நடைபெறும் மாநிலம் கேரளா. 80 சதவீதம் மக்களின் பிரியமான உணவு மீன்தான். ஆண்டுக்கு 450 கோடி ரூபாய் வணிகம் செய்யும் இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்துக்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் தங்களது பிளாண்டை விரிவுப் படுத்தி உள்ளனர். விற்பனையை அதிகரிக்கும் விதமாக மேலும் மூன்று பிளாண்ட்கள் கட்டத் திட்டமிட்டுள்ளனராம்.

தற்போது, சென்னை பிஷ், மும்பை பிஷ், தி பிஷ் மார்கெட், ப்ரெஷ் பிஷ் போன்ற பெயர்களில் சில நகரங்களை மட்டுமே குறிவைத்து விற்பனை செய்து வரும் நிறுவனகள் இருகின்றன. இந்த ஆன்லைன் மீன் வணிகம் விரிவடையும் போது அனைத்து ஊர் மக்களுக்கும் இது வர பிரசாதமாக மாறும்..!

இணையதள முகவரி: Baby Marine

மலையாளத்தில்: கோவிந்தன் நம்பூத்திரி | தமிழில்: ஜெனிட்டா