அலுவலக பொருட்கள் தேவையை நிறைவேற்றும் 'கோப்ஸ்டர் '

0

அண்மையில் துவக்கப்பட்ட கோப்ஸ்டர்.காம் (Kobster.com ) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்க்ள் மற்றும் வீட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு அலுவலக பொருட்களை வழங்கும் இ-காமர்ஸ் தளமாகும். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றவர்களான வினீத், மோகன் மற்றும் கார்த்திக் ஆகியோரால் கோப்ஸ்டர் அலுவலக பொருட்களை சப்ளை செய்ய நம்பகமான பிராண்ட் இல்லாத குறையை போக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டேப்லஸ் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும் அந்நிறுவனம் இணையத்தில் செயல்படவில்லை. ஸ்டேப்லஸ் ப்ளுசிப் நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருவதால், கோப்ஸ்டர் கவனம் செலுத்தும் பிரிவானது தன்னை வேறுபடுத்தும் அம்சமாக இருக்கும் என்று கோப்ஸ்டர் குழு நம்புகிறது.

எச்.சி.எல் மற்றும் காக்னிசண்ட் நிறுவனங்களில் இதன் நிறுவனர்கள் பணியாற்றியுள்ளனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் கோப்ஸ்டரின் இணையதளம் சப்ளைகளுக்கான உள்ளார்ந்த நிர்வாக அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 700 எழுது பொருட்கள், 300 மின்னணு சாதனங்கள், 150 கிளினிங் பொருட்கள் உள்பட 1200 அலுவலக பொருட்களை வழங்குகிறது. பொருட்களை வாங்கி கொண்டு பணம் செலுத்துவது, இணையம் மூலம் செலுத்துவது, என்.இ.எப்.டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் செலுத்தலாம். காசோலை மற்றும் டிடி மூலமும் செலுத்தலாம். வர்த்தக நிறுவனங்களுக்கு 21 நாள் கடன் வசதியும் உண்டு. கோப்ஸ்டர், பரிசிலனைக்குப்பிறகு இந்த வசதி அளிக்கப்படும்.

அலுவலக பொருட்களுக்காக நிறுவனம் ரெனால்ட்ஸ், சோலோ, கோத்ரெஜ், எச்பி, கிராபே, லெனோவோ ஆகிய பிராண்ட்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டெலிவரிக்காக டீடிடீசி மற்றும் ஆரமெக்ஸ் ஆகிய கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போதைக்கு இந்நிறுவனம் வேகமாக விற்பனையாகும் பொருட்களை இருப்பு வைத்திருக்கிறது. மற்ற பொருட்களை தேவைக்கேற்ப ஆர்டர் செய்கிறது. ஆன்லைன் மீடியா, பேஸ்புக், டிவிட்டர் மற்றும் லிங்க்டுஇன் மூலம் விளம்பரம் செய்து வருகிறது. கூகுள் ஆட்ஸ் மூலம் விளம்பரம் செய்ய உள்ளது.

போட்டியைப் பொருத்தவரை Officyes.com, Oneclickonecall.com ஆகிய ஸ்டார்ட் அப்களிடம் இருந்து போட்டியை எதிர்நோக்குகிறது. ஆனால் தாங்கள் வழங்கும் பொருட்களின் ரகங்கள் சாதகமாக இருக்கும் என்று நிறுவனர்கள் நம்புகின்றனர். அடுத்த கட்டமாக பர்னீச்சர்களையும் வழங்க உள்ளனர். "எங்கள் போட்டியாளர்கள் 4 அல்லது 5 மாதங்கள் முன்னதாக துவங்கியிருந்தாலும் வரும் காலத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருப்போம். பள்ளிகளின் தேவையும் இதே போன்றது என்பதால் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்” என்கிறார் இணை நிறுனர் வினீத்.

சொந்த சேமிப்பு நிதியால் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுவலக பொருட்கள் பிரிவில் முன்னிலையில் வர விரும்புகிறது. "எல்லா வகையான பொருட்களுக்குமான பிராண்டாக நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்கிறார் மற்றொரு இணை நிறுவனரான மோகன்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்ப கோப்ஸ்டர் ஸ்பிலைஸ் அட்வைசர்ஸ் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளது. ஸ்பிலைஸ் அட்வைசர்ஸ் நிறுவனம் ஐதராபாத்தின் டாக்டர் சி உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு உதவும் என கோப்ஸ்டர் கருதுகிறது. "தொழில்நுட்ப மேம்பாடு, பல்வேறு நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வது மற்றும் சப்ளை செய்னை வலுவாக்க நிதி பயன்படுத்தப்படும்” என்கிறார் வினீத்.

கோப்ஸ்டர் சென்னை மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மேலும் 5-6 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இணையதள முகவரி: Kobster