சுதந்திரத்துக்கு முன் கட்டிய இந்தியாவின் முதல் 'லிஃப்ட்' - இன்றளவும் இயங்கும் ஆச்சர்யம்! 

0

இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட லிஃப்ட், இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுனர் மாளிகை ராஜ் பவனில், இந்தியாவின் முதல் லிஃப்ட் அமைக்கப்பட்டது. அது ஆளுனர் மாளிகையில் உள்ள வீட்டினுள் உள்ளது. 

கொல்கத்தாவில் அமைந்துள்ள 'ராஜ் பவன்', 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாரம்பர்ய கட்டிடமாக போற்றப்படும் இந்த மாளிகை, 1803 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்த மாளிகையே அரசு அலுவலகமாக இருந்து வந்தது. 

இந்தியா சுதந்திரம் அடைந்தபின், ஈஸ்ட் இந்தியா கம்பெனியிடம் இருந்த இந்தியா, பிரிட்டிஷ் க்ரெளனுக்கு 1858 இல் மாற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவன், அன்றிலிருந்து இந்திய வைஸ்ராய் இன் அதிகாரப்பூர்வ இடமாக இருந்து வந்தது. 1911 இல் இந்திய தலைநகரமாக டெல்லி என்ற மாற்றம் ஏற்படும் வரை இது தொடர்ந்தது. 

கொல்கத்தா ராஜ் பவனில், ஓடிஸ் எலிவேட்டர் நிறுவனம் இந்தியாவின் முதல் லிஃப்டை 1892 இல் நிறுவியது. பலதலைமுறை வைஸ்ராய்கள், பெங்காலின் ஆளுனர்கள் இங்கு இருந்துள்ளனர். பிரிட்டிஷ் காலம் முதல் சுதந்திர இந்தியா வரை இன்றும் இந்த லிஃப்ட் வேலை செய்வது ஆச்சர்யமான ஒன்றுதான். 

பழைமை வாய்ந்த இந்த எலிவேட்டர், 1969 ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது மற்றும் அண்மையில், 2010 ஆம் ஆண்டிலும் புனரமைக்கப்பட்டது. இன்றளவும் அந்த வரலாறு சிறப்புமிக்க லிஃப்ட் தொடர்ந்து செயலபட்டுவருவது நம் எல்லாருக்கும் பெருமிதம் தரும் விஷயமே.