தொழில்நுட்ப உதவியுடன் 30% கூடுதல் லாபத்தில் 350 அறுவடைகள் : விவசாயிகளுக்கு உதவும் ஐஐடி பொறியாளர் விவேக்!

இந்தியாவில் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாயத் துறையில் விவசாயியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மண் மற்றும் பயிர் முறைகளை அளவிடக்கூடிய ஒரு மாற்று தொழில்பட்பத்திற்கான தேவை காணப்படுகிறது!

0

நீலகிரி மலைப்பகுதிகளில் 29 வயதான விவேக் ராஜ்குமார் 150 விவசாயிகளுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் 20 நிலங்களுக்குச் சென்று அங்கு குழுவாக இணைந்து பணிபுரிவதை பார்வையிடுகிறார். விவேக்கின் நிறுவனமான ’ஐபோனோ’ (Aibono) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 300 ஏக்கர் நிலப்பரப்பை தொகுக்கிறது. பூமியிலிருந்து கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி விவசாயிகள் சிறப்பான விளைச்சலைப் பெற உதவுகிறது இந்நிறுவனம்.

700 சதுர அடி கொண்ட இவரது அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. நிலத்திலிருந்து கிடைக்கும் தரவுகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தரவுகள் விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது. அவரது கண்ணாடியைத் துடைத்தவாறே நம்மிடம்,

“எங்களது குழு உருவாக்கிய தொழில்நுட்பத்தை 150 விவசாயிகளும் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்னால் அவர்களிடம் நான் என்னை நிரூபிக்க விரும்புகிறேன்.” என்றார்.

தனிப்பட்ட அனுபவம் சார்ந்தே Aibono உருவானது. ஒருவரது குழந்தைப் பருவத்தில் சொல்லப்பட்ட கதைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. விவேக்கின் தாத்தா கேரளாவின் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான விவசாயியாக இருந்ததாக விவேக் அறிந்தார். ஐஐடி மெட்ராஸில் படிப்பை முடிக்கும்வரை அவரைப் போலவே ஒரு விவசாயியாக வேண்டும் என்கிற மரபு விவேக்கிடம் காணப்பட்டது. ஐஐடியில் சமூக நிறுவனங்கள் உருவாக்கிய பல்வேறு நபர்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு விவேக்கிற்கு கிடைத்தது.

2011-ல் பட்டப்படிப்பை முடித்த பிறகு வருங்காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொள்ளப்போவதாக எடுத்துச் சொல்லி அவரது பெற்றோரை சம்மதிக்க வைத்தார். அவர்கள் இயன்ற அளவு பணம் கொடுத்தனர். விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் மேலும் உறுதியானது.

உள்ளூர் நபரின் உதவியுடன் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை துவங்கினார். அரிசி விளைச்சலுக்காகவும் நல்ல பயிரை உறுதிசெய்ய உரம் வாங்கவும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தார். பயிர் மிகச்சிறந்த விளைச்சலை அளிக்கவில்லை. சந்தையில் நல்ல லாபத்தை பெற்றுத்தராத காரணத்தால் விவேக் முதலீடு செய்த பணம் வீணாகும் நிலையில் இருந்தது.

ஆனால் விவேக் 125 நாட்கள் கடுமையாக உழைத்தது வீண்போகவில்லை. விதையின் வகை, தண்ணீரின் அளவு, நிலத்தில் பயன்படுத்தப்பட்ட உரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்திருந்தார்.

மறுபடி அடுத்த வருடமும் முயற்சித்தார். விளைச்சல் சற்று மேம்பட்டிருந்ததாலும் போதுமான பணம் ஈட்டவில்லை. ஆனால் நிலத்தைக் குறித்த பல பயனுள்ள தரவுகளை சேகரித்து வைத்திருந்தார். 2013-ம் ஆண்டு ஒரு பண்ணையில் செயல்பாட்டில் உள்ள அனைத்து வரைக்கூறுகளையும் கைப்பற்றக்கூடிய தளத்தை உருவாக்கினால் பயன்படும் என்கிற எண்ணம் தோன்றியது.

வானிலை மற்றும் மண்ணின் நிலை போன்ற மேலும் சில முக்கிய வரைக்கூறுகளை இணைத்ததும் ’ஐபோனோ’ என்கிற வடிவில் அந்த மாயாஜாலம் தோன்றியது.

வணிகம்

2014-ல் விவேக் தரவுகளைப் பயன்படுத்தி விவசாயத்தை சிறப்பாக மாற்றும் தனது திட்டத்தை ஐஐடி மெட்ராஸில் தெரிவித்தபோது அங்கிருந்த ஆசிரியர் இந்த யோசனையை வரவேற்றார். விவசாயத்தை மேம்படுத்த உதவும் தரவுகளை சேகரிக்க சிலரை பணிக்கு எடுத்துக்கொண்டார் விவேக். இதற்காக விரைவில் நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் சென்னைக்கு வெளியில் இருக்கும் நிலங்கள் போன்ற பகுதிகளைத் தொடர்பு கொண்டார்.

நிலங்களுக்கு சோதனை மற்றும் அளவீட்டு சேவைகளை வழங்கினார். அதாவது ஒரு சாதனம் மண் மற்றும் வானிலை நிலவரங்களை கைப்பற்றி அப்பகுதியின் படங்களையும் சேகரிக்கும். இந்தப் படங்கள் பயிரின் அழுத்தத்தை விவரிக்கும். மண்ணின் நிலைக்கு உகந்த உரங்களின் கலவை குறித்து விவசாயிகளுக்கு இந்தத் தளம் ஆலோசனை வழங்கும்.

ஆனால் தேயிலை, அரிசி, கோதுமை போன்ற விளைச்சலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பயிர்களுக்கு இந்தத் தளம் உகந்ததாக இல்லை என்பதை ஒரு வருடத்திற்குள்ளாகவே உணர்ந்தார். நீலகிரியில் தேயிலை தோட்டத்தைப் பார்வையிட வந்திருந்ததால் வணிகத்திற்கு உகந்த பயிர்களில் கவனம் செலுத்தும் விவசாயிகளை சந்தித்தார். இவர்கள் காய்கறி விளைச்சலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் தரவுகளை பயன்படுத்தி விளைச்சலை மேம்படுத்தும் திட்டம் குறித்து தெரிவித்தார்.

அறுபது நாட்களில் விவேக் அவர்களுக்கு தனது திட்டத்தை நிரூபித்தார். அவர்கள் உடன் இணைந்தனர். “அவர்களது விளைச்சலைக் காட்டிலும் 30 சதவீதம் அதிக விளைச்சல் கிடைத்தது.” என்றார் விவேக்.

கேரட், கோஸ், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற பயிர்கள் நீலகிரியில் வளர்க்கப்படுகின்றன. விவேக்கின் விவசாய முறை 30 விவசாயிகளை ஈர்த்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் ஐந்து கிராமங்களில் 350 அறுவடைகளில் விவசாயிகளுக்கு உதவியுள்ளது. விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை வசூலிப்பதன் மூலம் நிறுவனம் அதன் வருவாயை ஈட்டுகிறது. இது நிறுவனத்தின் சேவைக்காக விவசாயிகள் அளிக்கும் தொகையாகும்.

தரவுகள் ஒரு சாதனம் மூலமாக சேகரிக்கப்படும். அந்தத் தரவுகள் பண்ணையில் இந்நிறுவனத்துடன் தொடர்புடைய நபர் அல்லது உழவியல் வல்லுநர் மூலமாக ஆய்விற்காக இணையம் வழியாக நிலத்திலிருந்து பெங்களூருவிற்கு அனுப்பப்படும். நிலம் தினமும் கண்காணிக்கப்பட்டு தளம் வாயிலாக கிடைக்கப்படும் பரிந்துரைகளின் பேரில் பயிருக்கு உள்ளீடுகள் அளிக்கப்படும்.

விவசாயி ஆலோசனை மற்றும் தரவுகளை பெற்றுக்கொள்ள ஐபோனோவுடன் கையொப்பமிடுவார். முதலீடு மற்றும் சந்தை அபாயங்களை விவசாயியே ஏற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பமானது தனியுரிமம் பெறப்பட்டது என்று கூறிய விவேக் அதன் காரணமாக அவரது நிறுவனம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொள்ளவில்லை.

”நாங்கள் வளர்ந்து வரும் நிறுவனம். நாங்கள் உருவாக்கிய மாதிரியினால் விவசாயம் நிலையான வணிகமாக மாறும்.” என்கிறார்.

விவேக் தமது வணிகத்தை நாடு முழுவதும் விரிவடையச் செய்ய திட்டமிட்டுள்ளார். பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து 500,000 டாலர்கள் நிதி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி

PEAT, Earth Food மற்றும் V Drone Agro போன்ற தொடர்புடைய தொழில்களில் மூலம் போட்டி இருப்பதாக தெரிவித்தார் விவேக். இதில் இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. க்ளௌட் டெஸ்டிங் முறையில் மண் பரிசோதனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உதவுகின்றனர். டெக்ஸ்பார்க்ஸ் 2016-ல் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த டெல்லியைச் சேர்ந்த க்ரோஃபார்ம் விவசாயிகள் சிறப்பான சந்தையையும் விலையையும் கண்டறிய உதவுகிறது.

அடுத்த ஆண்டில் வி ட்ரோன் அக்ரோ அரசு மற்றும் பகுதியாக அரசு சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி பல்வேறு விவசாயிகளுடன் நேரலையில் இணைந்திருக்க திட்டமிட்டு வருகிறது. 

”பங்குதாரர்களுக்கு பயன்படும் விதத்தில் எங்களது ஆய்வு மாதிரி இருக்கும் என்பதை நிரூபிக்க எங்களுக்கு தரவு தேவைப்படுகிறது.” என்றார் அதன் நிறுவனர் குணால்.

PEAT ஒரு ப்ராடக்ட் நிறுவனமாக செயல்பட்டு தற்போது பயனாளிகளை இணைத்து வருகிறது. எந்தவித வருவாயையும் இன்னும் ஈட்டவில்லை. இவர்களது செயலி செடியின் சேதத்தை கண்டறிந்து அதை படம் பிடித்துத் தருகிறது. இதனால் அதிகம் தாமதிக்காமல் பயிரை காப்பாற்ற முடியும். 

”இந்த சுயகற்றல் வழிமுறைகளுக்கான பயிற்சிக்கு ஒரு மிகப்பெரிய டேட்டாபேஸ் அவசியம். இன்று எங்களது டேட்டாபேஸில் 270,000 பெயரிடப்பட்ட படங்கள் உள்ளன. பயனாளிகள் ஒவ்வொரு படமாக எங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பதால் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது.” என்றார் PEAT இணை நிறுவனரான சார்லெட் சூமான்.

மேலும் PEAT ஒரு மிகப்பெரிய சுற்று நிதியை முடித்துள்ளது. விவசாயம் குறித்த தரவுகளை சேகரிக்க ICRISAT-டுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறது.

இந்தியாவில் 600 மில்லியன் விவசாயிகள் உள்ளனர். ஒவ்வொருவரிடமிம் குறைந்தது ஐந்து குந்தா நிலம் உள்ளது என்பதால் Aibono-விற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. நகர் பகுதிகளில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் நிதி சார்ந்த ஏற்றதாழ்வுகள் விவசாயத்தில் அதிகமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகள் ஒரு வாக்கு வங்கியாகவே பார்க்கப்படுகிறார்களே ஒழிய அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எதிர்காலம் தரவுகளைச் சார்ந்தே உள்ளது. அதற்கான வழியை ஐபோனோ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் காட்டுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா