தினசரி 10 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், ஒரு விஸ்கி பாட்டில்... இதலாம் யாருக்கு தெரியுமா?  

1,500 கிலோ எடையுடன் விந்தணு விற்பனையில் ஆண்டுக்கு ஒரு கோடி சம்பாதிக்கும் இந்திய கருமை எருமை!

0

இந்தியாவின் 'தி பிக்கஸ்ட் எருமை' என்ற பெருமையுடன் கால்நடைகளின் எடை, உடல் ஆரோக்கியம், இனப்பெருக்கத் திறன், ஆகியவற்றை கணக்கிட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ள ஹரியானாவை சேர்ந்த எருமையின் மதிப்பு ரூ.21 கோடி. 

செல்லப்பிராணிகளை வாயோடு வாய் வைத்து கொஞ்சுதல், படுக்கையில் பாதி இடத்தை பப்பிகளுக்கு ஒதுக்கிவிட்டு ஓரங்கட்டி ஒடுங்கி படுத்து கொள்வது என பெட் அனிமல்ஸ் மீது அளவற்ற காதல் கொண்டோர் எக்கச்சக்கம். வில்லேஜ் வீடுகளில் செல்லப்பிராணிகளாக ஆடு, மாடு நிறைந்திருப்பது போல், சிட்டி வாழ் குடிமக்கள் பாரீன் பறவைகள், நாய்களை வளர்த்து பெட் அனிமல்சை ஆடம்பரத்தின் குறியீடாக மாற்றிவிட்டனர். ஆனால், ஹரியானாவில் ஒரு குடும்பம் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணியினாலே ஆடம்பரமாய் வாழ்ந்து வருகின்றனர். பிகாஸ்... 

அவர்கள் வளர்க்கும் 5 அடி 11 அங்குலம் உயரத்துடன், 1,500 கிலோ எடை கொண்ட சுல்தான் எனும் கருகரு காஸ்ட்லி ஆண் எருமையின் விந்தணுவின் விலை ஒரு கோடிப்புபு... 

யெஸ் மக்களே, செயற்கையாய் விஞ்ஞான ரீதியில் விந்தணுவை சேகரித்து ஒரு டோஸ் விந்தணுவை ரூ.300க்கு விற்பனை செய்கின்றனர். சுல்தான் ஆண்டுக்கு 54,000 டோஸ் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. சுல்தானுக்கு சேவகம் செய்ய 5 பணியாட்கள் வேறு உள்ளனர்.

பட உதவி : lifedeathprizes
பட உதவி : lifedeathprizes

ஹரியானாவின் கைதால் பகுதியைச் சேர்ந்த நரேஷ் பெனிவாலே ஓனர் ஆப் திஸ் முரட்டு எருமை. 

“முர்ரா இனத்தைச் சேர்ந்த சுல்தான் தனித்துவமான எருமை. 8 வயதிலே சாதாரண எருமையை விட இருமடங்கு எடைக் கொண்டது. சுல்தானின் ஷைனிங் தோலையும் ஹெல்தி பாடியையும் பராமரிக்க, முழு டைட் பாலோ செய்கின்றனர் அதன் பராமரிப்பாளர்கள், என்கிறார் நரேஷ்.  

காலையில் டான்னு எழுந்தவுடன் 5 கி.மீ வாக்கிங். 10 லிட்டர் பால், 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், 10 கிலோ தானியங்கள், 10 டூ 12 கிலோ இலை, தழை காய்கறிகள்... இதுவே சுல்தானின் ஒரு நாள் உணவுப்பட்டியல். தவிர, சாயங்காலம் ஆகிவிட்டால் ஒரு விஸ்கி அடிக்கும் பழக்கமும் உண்டு. மாபெரும் காளையை பராமரிக்க அதிக செலவாகினும், அதற்கேற்ற லம்ப்பான வருமானத்தையும் ஈட்டித் தருகிறது.

பட உதவி : lifedeathprizes
பட உதவி : lifedeathprizes
“மருத்துவச் செலவு, பராமரிப்பு, தீவன செலவு என ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. சுல்தானின் விந்து ஒரு டோசின் விலை 300 ரூபாயாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுல்தானின் விந்தணுவை பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான விந்தணுவை விற்பனை செய்கிறோம்.” 

மாடுகளின் இனவிருத்தியை மேம்படுத்தவும், விவசாயிகள் விந்தணு விற்பனை மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சுல்தானை பல கால்நடை கண்காட்சிகளுக்கும் கொண்டு சென்று காட்சிப்படுத்தியுள்ளார். அப்படி ஒரு முறை கண்காட்சிக்கு சுல்தானை அழைத்து சென்ற போது, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கால்நடை விவசாயி ஒருவர், ரூ 21 கோடிக்கு சுல்தானை விலைக்கு தரக்கோரியுள்ளார். ஆனால், நரேஷ் அதை மறுத்துவிட்டார்.

சுல்தானுடன் நரேஷ் . பட உதவி : lifedeathprizes
சுல்தானுடன் நரேஷ் . பட உதவி : lifedeathprizes
“பல லட்ச ரூபாய்களை சுல்தான் எனக்கு சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்பதை தாண்டி, எனக்கும் அதுக்கும் ஒரு உறவு பின்னல் இருக்கிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் சுல்தானை விற்க மாட்டேன்,” என்றார்.

நரேஷின் இதே கொள்கையை பின்பற்றி வருகிறார் அதே மாநிலத்தைச் சேர்ந்த குருசேஷ்த்ரா பகுதியைச் சேர்ந்த கரம்வீர் சிங். ஏனெனில் ஏறக்குறைய சுல்தானை போன்ற அவர் ஒரு எருமையை வளர்த்து வருகிறார். அதற்கு அவர் சூட்டிய பெயர் யுவராஜ். 

கிரிக்கெட்டர் யுவராஜ் பீக் டைமில் இருந்தபோது, எருதுக்கு இப்பெயர் சூட்டியுள்ளார். இந்த முர்ரா எருமையின் மொத்த எடை 1400 கிலோ. உயரம் 5 அடி 9 அங்குலம். நீளம் 14 அடி. பிரமாண்ட உருவக்கொண்ட யுவராஜ்ஜை ரூ.7 கோடிக்கு விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால், கரம்சிங் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் ‘அதன் குடும்பத்தில் இருந்து யுவராஜ்ஜை பிரிக்க வேண்டுமா?’ என்று கேட்கிறார்.

ஆம், யுவராஜ்ஜின் மொத்தக் குடும்பமும் கரம்சிங் வீட்டு கொல்லையில் குடி கொண்டுள்ளது. 21 வயதான யுவராஜ்ஜின் அம்மா, இதுவரை 16 முறை குட்டி ஈன்றுள்ளது. “தினமும் 26 லிட்டர் பால் அளிக்கும் சக்திப்படைத்தவள் அவள்” எனும் அவர் இவையனைத்தும் யுவராஜ்ஜின் தந்தை எருமையை 16 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.37 ஆயிரத்துக்கு வாங்கியப் போது துவங்கியது என்கிறார். 

யுவராஜ்ஜுடன் கரம்சிங். பட உதவி: bbc
யுவராஜ்ஜுடன் கரம்சிங். பட உதவி: bbc
யுவராஜிடமிருந்து ஒரு முறை 10 முதல் 14 மி.லி. வரை விந்து எடுக்கப்படுகிறது. அதை அறிவியல்பூர்வமாக நீர்க்கச் செய்து 700 முதல் 900 ‘டோஸ்’கள் வரை மாற்றப்படுகிறது. ஆண்டுக்கு 45,000 டோஸ்கள் உற்பத்தி செய்கிறது. 

யுவராஜின் விந்தணுக்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அதனால், நாள்தோறும் பல நாடுகளில் இருந்தும் பலர் யுவராஜ்ஜை காண கரம்வீர் சிங் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒரு முறை பிரேசில் இருந்து யுவராஜ்ஜை காணவந்த அறிவயலாளர், தான் பார்த்ததிலே யுவராஜ் தான் சிறந்த எருமை என்றுள்ளார். அதற்கு கரம் சிங் அவர்களிடம், “ஆனால் நீங்கள் மீண்டும் யுவராஜை பார்க்க கோடையில் வர வேண்டும். அப்போது, அவர் இன்னும் ஹேண்ட்சம்மாக இருப்பான்,” என்றுள்ளார்.

இந்த கட்டுரையை படித்த பின்னார், இனி யாரையும் வளர்ந்து கெட்ட மாடு என்று திட்டி மாட்டை அசிங்கப்படுத்த முடியாது... 

தகவல் உதவி: பிபிசி மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்