உலகின் அழகிய தாய்!

1

லஷ்மி, திராவக வீச்சுலிருந்து உயிர் பிழைத்தவர். அதை விட முக்கியமாக , ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ்’-ன் தீவிரமான பிரச்சாரகர், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 2005ல் தனது பதினாறு வயதில், அவரை விரும்பிய 32 வயதான ஒருவரை மறுத்ததற்காக, திராவகத்தால் தாக்கப்பட்டார்.

லஷ்மி, சமூக ஆர்வலர் அலோக் தீக்‌ஷித்தின் மேல் காதல் கொண்டார். சமூகத்திற்கு சவால் விடுவதாய், இருவரும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதாய் முடிவு செய்தனர். ஏழு மாதங்களுக்கு முன், பிஹு என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தாள். தைனிக் பாஸ்கருடனான ஒரு பேட்டியின் போது, குழந்தை பிறந்தவுடன் தன் முகத்தை பார்த்தால் பயப்படுவாள் என்று கர்ப்பமாய் இருந்த போது லஷ்மி அஞ்சினாள் என அலோக் நினைவு கூறுகிறார். ஆனால் பிஹு ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும் போதும் சிரிக்கிறாள்.

லஷ்மி, திராவக விற்பனையை தடை செய்யக் கோரி 27000 கையெழுத்துக்கள் பெற்று, திராவக தாக்குதலுக்கு எதிராக தீவிரமாக போராடியிருக்கிறார். அதன் மூலமாக, உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நீதிமன்றங்களுக்கு திராவகத்தின் விற்பனையை முறைப்படுத்த ஆணையிட்டது. மேலும், பாராளுமன்றம், திராவகத் தாக்குதல் வழக்குகளை எளிதாக கையாள சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2014, சர்வதேச துணிவானப் பெண் விருதை, மிச்சேல் ஒபாமாவிடமிருந்து லஷ்மி பெற்றுக் கொண்டார் மேலும் என்.டி.டிவியின் ‘வருடத்தின் இந்தியரா’கவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அடுத்த மாதம் லக்னோவில், ‘ஷீரோஸ் கேஃபே’ தொடங்கும் வேலையில் இருக்கிறார் லஷ்ம். பிஹு, அநேக நேரத்தை, தன் தாயுடன் ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ பிரச்சாரகர்களுடன் செலவிடுகிறார். அவர்களில் பலரும் திராவக தாக்குதலுக்கு ஆளானவர்கள் தான். தன் தாய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் பிஹு, தான் சந்திக்கப் போகும் மனிதர்களில் அழகானவர்கள் தன் பெற்றொர்கள் தான் என்பதையும் இதய ஆழத்தில் அறிந்திருப்பாள்.