நொறுக்கு தீனிகளை ஆன்லைனில் விற்கும் ஐயங்கார்ஸ் பேக்கரி.காம் 

ஆன்லைன் வாடிக்கையாளர்கள் சில நேரம், நேரடியாக கடைக்கு வந்து நொறுக்கு தீனிகள் வாங்குவதும், முதன்முதலாக கடைக்கு வருபவர்கள், பின்னர் ஆன்லைனில் தொடர்ந்து நொறுக்கு தீனிகள் வாங்குவதும் எங்களுக்கு கிடைத்த வெற்றி! 

0

பெங்களூரில் வளர்ந்த ஒருவரிடம் அவருடைய பள்ளி நாட்கள் முடிந்த பின் நடந்த ட்ரீட்களை பற்றி கேட்டுப் பாருங்கள். அவர் நிச்சயம் ஆலுபன்களையும், வெஜிட்டபிள் பப்ஸ்களையும், நிபட்டுகள், தேனில் முழுக்கி எடுத்த கேக்கான ஹணி கேக்கையும் சுவைத்த அனுபவத்தை கூறுவார். இத்தகைய விதவிதமான இனிப்புகளை அருகிலுள்ள ஐயங்கார் பேக்கரியில் கண்டுபிடித்துவிட முடியும்.

ஐயங்கார் பேக்கரியின் ஒரிஜினல் வடிவம், அதன் நிறுவனர் எச்.ஆர்.ஸ்ரீதராவின் முன்னாள் முதலாளியின் தூண்டுதலால் பிறந்தது. பிரபலமான அந்த உள்ளூர் பேக்கரியில் எச்.ஆர்.ஸ்ரீதரா கணக்கராக வேலை பார்த்து வந்தார். அப்போது, தனக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, தான் வேலை பார்த்த அதே பேக்கரியில் உள்ள தின்பண்டங்களை எடுத்து விற்று வந்தார். அப்போது தான், அந்த முதலாளி ஸ்ரீதராவிடம் வளர்ந்து வரும் தேவையை நிவிர்த்தி செய்ய சொந்தமாக பேக்கரி துவங்குமாறு அறிவுரைக் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, முன்னாள் கணக்கரான ஸ்ரீதரா, பேக்கிங் தொழில்நுட்பத்தை கற்று கொடுத்து, சென்னையில் உள்ள ஆஸ்டின் டவுனில் வைத்து 1981 இல் 'ஐயங்கார் பேக்கரி'யை துவங்கினார்.

ஸ்ரீதரவின் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினராக, அவரது மகன்களான லக்ஷ்மீஷாவும், ராமனும் இந்தத் தொழிலை கவனிக்கத் துவங்கியுள்ளனர். லக்ஷ்மீஷா கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, இ-காமர்ஸ் பிசினசை துவங்க விரும்பினார். இதற்காக ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் டொமைன் பெயர்களை வாங்கத் துவங்கினார். அதனை தொடர்ந்து 2013 இல் ஐயங்கார் பேக்கரிக்கான இ- காமர்ஸ் வெப்சைட் முழு வடிவம் பெற்றது.

லக்ஷ்மீஷாவை பொறுத்தவரை, ஒரு .com டொமைன் பெயரை பெறுவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. அவரது குடும்பத்தினரும் ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் வேறு பல டொமைன் பெயர்களை வாங்கி வைத்திருந்தனர். அவை அனைத்துமே முக்கிய வெப்சைட்டான IyengarsBakery.com உடன் இணைக்கப்பட்டுள்ளது.

“ஆன்லைனுக்கு செல்வது நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வது மட்டுமல்லாது, கம்பெனிகளிடமிருந்து பல்க் ஆர்டர்களை பெறவும் எங்களுக்கு வாய்ப்பாக உள்ளது. மேலும் இது எங்களுக்கு அதிக அளவிலான பார்வையை தந்துள்ளதுடன், புதிய கோணத்தில் முன்செல்லுவதற்கான சிந்தனைகளை எங்களுக்குத் தருகிறது. இதில் உருவாகும் சாத்தியங்கள் முடிவற்றவை.” என்றார் லக்ஷ்மீஷா.

இந்த வெப்சைட்டை கேள்விப்பட்ட பெரும்பாலான பொதுமக்கள், மிகவும் ஆச்சரியத்துடன், நொறுக்கு தீனி இனி ஆன்லைனிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கொள்ளத் துவங்கினர். உண்மையில், இந்த பேக்கரி கடையானது, தற்காலிகமாக வீடுகளுக்கான ஹோம் டெலிவரி முறையை நிறுத்தி வைத்த போது, பல மக்கள் நேரடியாக கடையில் வந்தே நொறுக்கு தீனிகளை வந்து வாங்கிச் சென்றனர். அப்போது அவர்கள் மறக்காமல் கேட்டது ஏன் ஆன்லைன் சேவை தற்போது இல்லை? என்று தான்.

“ஒருமுறை இங்கு வருபவர்களுக்கு, இந்த பேக்கரி எந்த இடத்தில் இருக்கிறது என தெரிந்து வைத்து விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் வருவார்கள். இதனால், ஆன்லைன் ஸ்டோர் வழியாக பொருட்கள் வாங்கியவர்கள், கடைக்கு நேரடியாக வருகை தருவதன் மூலம், கடை இருக்கும் இடத்தை தெரிந்து வைத்து விடுவார்கள். இது போன்றே கடைக்கு நேரடியாக வந்து முதன்முதலாக வாங்குபவர்கள், பின்னர் ஆன்லைன் ஸ்டோரை பயன்படுத்தி கொள்வார்கள். இது இரட்டை வெற்றியை தரும் சூழலாகும்” என தொடர்ந்து கூறினார் லக்ஷ்மீஷா.

தங்கள் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதில் ஐயங்கார் பேக்கரி மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. இதனால் அந்த வெப்சைட்டின் புகழ் இன்னும் வலுபெறுகிறது. ஆனால் பெங்களூரில் மட்டும், போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைகள் இந்த திட்டத்தை சேதப்படுத்துவதாக கூறும் லக்ஷ்மீஷா , அதனை சரிகட்ட, ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் இருக்கும் உள்ளூர் பேக்கரிகளை அடையாளபடுத்த முயல்வதாக கூறுகிறார். அதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டினருகில் உள்ள கடைகளிலிருந்து சப்ளை செய்து விட முடியும் என கூறும் லக்ஷ்மீஷா, தரம் தான் எங்களுக்கு முக்கியம். அதனை இழக்க மாட்டோம் என்றும் கூறினார். இதுபோன்றே உள்ளூர் லாஜிஸ்டிக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதற்கான முயற்சியை லக்ஷ்மீஷா செய்து வருகிறார்.

லக்ஷ்மீஷாவும், அவரது சகோதரர் ராமனும் தங்கள் தந்தையின் காலடியிலிருந்து இத்தொழிலை கற்றவர்கள். ராமன் அவர்களுடைய 3,300 சதுர அடி பரப்பு கொண்ட உற்பத்தி பகுதியையும், 1000 சதுர அடி பரப்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை பகுதியையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இதனுடன், இந்த சகோதரர்கள் அடுத்து புதிதாக என்ன செய்யலாம் என இணைந்தே திட்டமிடுகின்றனர். அவர்களிடையே செயலாக்க உரிமை யாருக்கும் தனியாக இல்லை. அவர்கள் நல்ல முறையில் பழைய வகை குடும்பத் தொழிலை, நவீனமயமாக்கி ஆன்லைனிலும் கொண்டு வந்துள்ளனர்.

“உங்கள் தொழிலை ஆன்லைனுக்கு எடுத்து செல்லும் முன், அதனை ஆப்லைனில் நன்கு வலுப்படுத்த வேண்டும்” என அறிவுரை கூறுகிறார் லக்ஷ்மீஷா.

அவர் மேலும் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதை போன்றே, எங்கள் வெப்சைட்டுக்கும் வருகை தருகிறார்கள். அவர்கள் உள்ளே வந்து, எங்களிடம் என்ன இருக்கிறது என பார்க்கிறார்கள், அவர்களுக்கு தேவையானதை வாங்குகிறார்கள். பின்னர் போய் விடுகிறார்கள். எங்கள் வெப்சைட் இதே போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. அது வாடிக்கையாளர் நலனுடன் இருக்க வேண்டும்” என்றார். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளை அளிக்கும் சென்னை 'ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்'

விமான நிலைய காத்திருப்பில் தோன்றிய சிறு நகரங்களுக்கான 'பஸில் ஸ்னேக்ஸ்' பிராண்ட்