கோவையில் 'கல்வி தொழில்முனைவு மாநாடு 2016'- கல்வி தொழில் முனைவர்களுக்கு குவியவுள்ள வாய்ப்பு!

0

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், இந்தியாவில் கல்வித் துறையில் டிசைன், தயாரிப்பு மற்றும் கல்வி சார்ந்த சேவைகளுக்கான தேவைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இந்தியாவில் கல்வித்துறையில் முக்கிய இடம் வகிக்கும் கோவை மாநகரில், கல்வித்துறை சார்ந்த தொடக்க நிறுவனங்கள் உருவாகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. தொழில்முனைவை ஊக்கப்படுத்தி, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளையும், திறமைகளையும் வெளி கொண்டுவரவேண்டிய நேரம் இது. 

இத்தருணத்தை கருத்தில் கொண்டு, 'டை கோயம்பத்தூர்' (Tie Coimbatore), 'ஃபோர்ஜ் ஆக்சிலரேட்டர்' (Forge Accelerator) உடன் இணைந்து, "கல்வித்துறை தொழில்முனைவு மாநாடு 2016" (Education Entrepreneurship Summit' 2016) நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாதம் 30ஆம் தேதி இந்த மாநாடு கோயம்புத்தூரில் நடக்க உள்ளது. 

மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்:

* துணை வேந்தர்கள், அடைக்காப்போர், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பங்கேற்பாளர்கள்

* இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50 ஸ்டார்ட் அப் தொழில்முனைவர்கள் கலந்து கொள்கின்றனர்

* எடு எக்ஸ்போ Edu Xpo - கல்வித்துறையில் சிறப்பிடத்தில் உள்ள 20 முதல் 25 நிறுவனங்கள் காட்சிப்படுத்தப்படும்

* 'பிட்ச் பெஸ்ட்' - முதலீட்டாளர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ள 6-8 ஸ்டார்ட் அப் கள் தங்கள் தொழிலைப் பற்றி விவரிப்பார்கள்

* பிரபல முதலீட்டாளர்கள், வெற்றி தொழில்முனைவோர்களின் சிறப்பு அமர்வு நடைபெறும்

* கலந்துரையாடல் மற்றும் விவாத மேடை

பிட்ச் பெஸ்ட் இல் வெற்றி பெரும் முதல் 3 நிறுவனங்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு முதலீட்டாளர் குழுவின் முன்பு தங்கள் ஐடியாக்களை வெளிப்படுத்தி, முதலீடு பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். 

சிறப்பு விருந்தினர்கள்

டிவிஎஸ் தலைவர் கோபால் ஸ்ரீனிவாசன், யூனிடஸ் சீட் பண்ட் மேலாண்மை பங்குதாரர் ஸ்ரீகிருஷ்ணா ராமமூர்த்தி, Dr.செல்வகுமார், டை கோவை தலைவர் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் இந்த மாநாட்டில் கலந்து உரையாட உள்ளனர். 

யுவர்ஸ்டோரி இந்நிகழ்வின் மீடியா பார்ட்னராக உள்ளது. 

நிகழ்ச்சி நடக்கும் நாள் : ஜூலை 30, 2016

இடம்: Forge Factory,  KCT Tech Park, Coimbatore

இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்பு கொள்ள: kiran@forgeforward.in | +91-94433-54312, Reni | Executive Director | TiE Coimbatore, admin@tiecoimbatore.org | +91-95855-99299