முதல் முறையாக இந்திய ராணுவம் ஆஃப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சியளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பயிற்சியைப் பொருத்தவரை ஆண், பெண் என இருவருக்கும் பயிற்சியளிக்கும் ஒரே அகாடமியான சென்னை ஓடிஏ அகாடமியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த இராணுவ பயிற்சி டிசம்பர் 4-ம் தேதி துவங்கியது. இந்த 20 பெண்களில் 17 பேர் ஆப்கான் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்புப்படை, உளவுத்துறை, ஸ்ட்ராடெஜி மற்றும் பொது விவகாரம், மருத்துவம், கல்வி, சட்டம் மற்றும் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா என்டிடிவி உடனான கலந்துரையாடலில் தெரிவிக்கையில்,
”உடற்பயிற்சி, உத்திகள், தகவல் பரிமாற்றத் திறன்கள், தலைமைத்துவம் உள்ளிட்ட அடிப்படை திறன்கள் குறித்து அதிகாரிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கமாகும்.”
இந்திய ஆயுதப் படை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 4,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பயிற்சிக்கு உதவியபோதும் பெண் அதிகாரிகளுக்கான பயிற்சி திட்டம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இந்த முயற்சியின் வாயிலாக இந்திய பெண் அதிகாரிகள் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் குறித்து ஓடிஏ வின் மேஜர் ஜே ஆர் சஞ்சனா ’தி ஹிந்து’விடம் தெரிவிக்கையில்,
”அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். போர்க்களத்தில் பங்கேற்க பெண்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் அதிகாரிகளால் முடியுமெனில் நிச்சயமாக எங்களாலும் முடியும்.”
படிநிலை அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களும் போர்கால பயிற்சியின் வெவ்வேறு கூறுகளை கற்க ஒன்றிணைந்தனர். இதில் துப்பாக்கிச்சூடு, தகவல் தொடர்பு, ஆயுதங்கள், உத்திகள், நிர்வாகம், தளவாடங்கள் உள்ளிட்டவை அடங்கும். அது மட்டுமல்லாமல் கைகளால் எறியப்படும் குண்டு, ஏகே 47, இன்சாஸ் துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தவும் பயிற்சியளிக்கப்படுகிறது.
கட்டுரை : Think Change India
Related Stories
December 16, 2017
December 16, 2017
Stories by YS TEAM TAMIL