வேர் இஸ் தி பார்ட்டி? கொண்டாட்டமான தொழில்முனைவு!

1

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் மக்களின் மனம் மெதுவாக மாறி வருகிறது. வாழ்கைத் தரம் அதிகரித்து வரும் இவ்வேளையில், பார்ட்டி கலாச்சாரம் வாழ்வியலின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. இளைஞர்களிடமும், மேல்தட்டு மக்களிடமும் பார்ட்டிகள் கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருவதால், அதற்கு தேவையானவற்றை வழங்குவதற்கான வாய்ப்பும் அதிகரித்து வருகின்றது.

ஒவ்வொரு கொண்டாடத்திற்கும், ஏற்ப, ஆடை அணிகலன்கள், அலங்கார பொருட்கள், அழைப்பு மடல்கள் என, தேவைப்படுபவைகள் எண்ணிக்கை அதிகம். எனவே அவற்றை வழங்குவதை ஒரு தொழில்முனைவாக தற்போது பலர் செய்து வருகின்றனர்.

அப்படி பட்ட தொகுப்பினை ,"பார்ட்டி ஆன்ட்ரபுரருனர்" என்றழைக்கின்றனர். கல்யாணம், அலுவலக கொண்டாட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள், என அனைத்து வகையான பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு, இவர்கள் தேவையான பொருட்களை வழங்குகிறார்கள். முதலில், பிரான்ஷு மகேஷ்வரியின், "இன்னெரிவர்", (Inneriver) கொண்டாடங்களுக்கு ஏற்ப அழைப்பிதழ்கள் வடிவமைக்கும் துறையில் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு, விளம்பர நிறுவனத்தில், வடிவமைப்பாளராக பணிபுரிந்த பிரான்ஷு, தனது நண்பரின் காக்டைல் கொண்டாட்டத்திற்காக ஒரு அழைப்பிதழ் வடிவமைத்தார். அந்த அழைப்பிதழ் அனைவராலும் பெரிதும் பாராட்டபட்டது. அன்று இது போன்று வடிவமைக்க யாரும் இல்லாததை அடுத்து, அதனை ஒரு தொழில்முனையும் வாய்ப்பாக கருதி 2010 ல் "இன்னெரிவெர்" துவக்கினர். மேல்தட்டு மக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவரது வாடிக்கையாளராக உள்ளனர்.

நாங்கள் வடிவமைக்கும் அழைப்பிதழ்கள், தனித்தன்மை வாய்ந்தவை. மற்றவர்கள், பெயரை மட்டும் அழைப்பிதழ்களில் அச்சடிக்கின்றனர். அதில் எவ்வித புதுமையும் இருப்பதில்லை. ஆனால் "இன்னெரிவெர்" நாங்கள், அழைப்பிதழை தகவலாக அல்லாமல், மனதிற்கு நெருக்கமான தொடர்பாகவே பார்க்கின்றோம் என்கிறார் பிரன்ஷு. அவர் இன்னெரிவெரின் நிறுவனர்.

2014-2015 நிதியாண்டில், 3 கோடி அளவிற்கு, அந்நிறுவனத்தில் வணிகம் நடைபெற்றுள்ளது. "எங்கள் கவனம் முழுவதும், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, உயர் ரக அழைப்பிதழ்கள் தயாரிப்பதில் உள்ளது. மேலும் சில்லறை வணிகத்திலும் ஈடுபடும் எண்ணம் உள்ளது. எனவே 2015-2016 ஆம் நிதியாண்டில், எங்கள் வர்த்தகம் 10 கோடியாக அமையும் என நம்புகிறோம் என்கிறார் அவர்.

இதே தொகுப்பில், "ஃபன்கார்ட்.இன்" (Funcart.in) என்பது ஒரு ஆன்லைன் ஸ்டோர் ஆகும். அதன் நிறுவனர் ரித்திகா நங்கியா ஆவார். சிறுவர்களுக்கான கொண்டாட்டங்கள், திருமணத்திற்கு முன்னதாக நிகழும் கொண்டாட்டங்கள், வளைகாப்பு, ஒரு கருவை மையமாக கொண்ட கொண்டாட்டங்கள் என அனைத்திற்கும் இவர்கள் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களிடம் 2000 திற்கும் அதிகமான பொருட்கள் கிடைக்கின்றது.

தனது இல்லத்தில் நிகழ்ந்த ஒரு கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க நேர்ந்த போது, இந்த யோசனை உதித்ததாக, ரிதிக்கா கூறுகிறார்.

மலிவு விலையில் தரமான பொருட்களை வாங்குவது என்பது கடினமாக இருந்தது. வேண்டிய பொருட்கள் கிடைத்தாலும், ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். அப்பொழுது தான் அப்பொருட்களை விற்கும் கடைகளின் தேவையை அவர் உணர்ந்தார்.

எனவே 2015தில், 30 லட்சம் செலவில், தனது நிறுவனத்தை ரிதிக்கா துவக்க, அதன் வளர்ச்சி மாதா மாதம், இருமடங்காக உள்ளது.

சந்தையில் கொண்டாடங்களுக்கு, பொருட்கள் விற்பவர்கள் அநியாய விலை வைத்து தரமற்ற பொருட்களை விற்கின்றனர். அங்கு தேவையான வகைகளும் இருப்பதில்லை. நம் பணமும் அதிகம் கரையும் வாய்ப்பு உள்ளது. எங்களது நோக்கம், பணம் அதிகமாக கரையாது, கொண்டாடங்களுக்கு தேவையான பொருட்களை தருவது. எங்களது வாடிக்கையாளராக, கர்ப்பிணி பெண்கள் முதல், இளைஞர் வரை, திருமணம் ஆன, ஆகாத இளைஞர் என பலர் உள்ளனர்.

போட்டி இருப்பினும், வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும் என ரிதிக்கா எதிர் பார்கின்றார். அடுத்த வருடத்தின் இறுதிக்குள், இத்துறையில், நாட்டின் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக தனது நிறுவனத்தை மாற்ற அவர் முயன்று வருகின்றார். "ஃபன்கார்டின்" தாரக மந்திரம், கொண்டாட்டங்களுக்கு தேவையான பொருட்களை, மலிவு விலையில் கிடைக்க செய்வதாகும்.

இணையதள முகவரி: Innerivar Funcart

Story teller who loves to talk more and now write a little bit :D

Stories by Gowtham Dhavamani