முன்னேறிய பொருளாதாரங்கள் தழுவிய நிதி செயல்பாடுகள் இந்தியாவுக்கு பொருந்தாது: பொருளாதார ஆய்வறிக்கை 2016-17

எஃப். ஆர். பி. எம். சட்டம் 2003ல் உள்ள நிதிக் கொள்கைகளின் அடிப்படை மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தியாவின் பொருளாதார அனுபவம்: பொருளாதார ஆய்வறிக்கை 2016-17

1

மேம்படுத்தப்பட்ட பொருளாதாரங்களால் ஏற்கப்பட்ட நிதிச் செயல்பாடுகள், அதாவது, எதிர்-சுழற்சி கொள்கைகள் மற்றும் கடனை ஒழிப்பதற்கு குறைந்த மதிப்பளிப்பது இந்தியாவுக்கு பொருந்தாது என்பதையே இந்தியாவின் பொருளாதார அனுபவம் காட்டுகிறது. 

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2016-17ல் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதி அனுபவம் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாக சட்டம் (எஃப் ஆர் பி எம் சட்டம்) 2003ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிதிக் கொள்கைகளின் அடிப்படை மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

பட உதவி: Track2Media
பட உதவி: Track2Media

2008-09 உலகளாவிய நிதிச் சிக்கலுக்குப் பிறகு சர்வதேச அளவில் நிதிக் கொள்கையில் கடன் தொடங்கி பற்றாக்குறை வரை இருந்த முக்கியத்துவத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு ஓட்டங்களில் (பற்றாக்குறை) பெரும் இயக்கத்திற்கு வாதிடப்பட்டு, கடனைக் குறைப்பதற்கான கவலை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ள்து. ஆனால் இந்தியாவின் அனுபவம் நிதிப் பற்றாக்குறைகளை குறைப்பதற்கான சட்டங்களின் தேவையை உறுதிப்படுத்தி, ஏற்றங்களின் போது செலவு செய்யும் சிந்தனை மற்றும் இறக்கத்தின் போது ஊக்கம் அளித்தும் வருகிறது. 

நிலையான மற்றும் மிதமான நிதி மற்றும் முதன்மை இருப்பை சரிசெய்து கடனைக் குறைக்க சுமை தூக்குவதற்கு பதில் விரைவான வேகத்தை நம்பியிருப்பதில் உள்ள ஆபத்து எடுத்துக்காட்டியுள்ளது. சுருங்கக் கூறின் இது எஃப்.ஆர்.பி.எம். சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கொள்கைகளின் அடிப்படை மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எஃப்.ஆர். பி. எம்.மின் அடிப்படைக் கோட்பாடுகள் மதிப்புடையாதாக உள்ள போதிலும், 2003ல் வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டுக் கட்டமைப்புகள் இந்தியாவின் இன்றைய நிதிக் கொள்கை திசையில் மிக முக்கியமாக நாளைய இந்தியாவின் திசையில் திருத்தியமைக்கப்பட வேண்டும். 21ம் நூற்றாண்டுக்கான எஃப்.ஆர்.பி.எம் மூலமாக புதிய கண்ணோட்டத்தை அமைப்பது எஃப்.ஆர்.பி.எம். ஆய்வுக் குழுவின் பணியாக இருக்கும்.