'டெக்ஸ்பார்க்ஸ்’18: சிறு-குறு தொழில்களை ஊக்குவிப்பதற்கான MSME துறையின் திட்டங்கள் என்ன? 

0

மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தனது புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு ஆதரவு அமைப்புகள் மூலம் அறிவித்திருக்கிறது.

இந்திய அரசு செயலாளர் ராம் மோகன் மிஸ்ரா, யுவர் ஸ்டோரியின் தீப்தி நாயருடன் உரையாற்றுகிறார். 
இந்திய அரசு செயலாளர் ராம் மோகன் மிஸ்ரா, யுவர் ஸ்டோரியின் தீப்தி நாயருடன் உரையாற்றுகிறார். 

இந்தியா என்பது அதன் பல்வேறு நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீற்றிருக்கும் சிறிய தொழில் நிறுவனங்களாக இருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்கள் தங்கள் பயணத்தை தொடர, சிறப்பு ஆதரவு கொண்ட மேடை மூலம் உதவ அரசு விரும்புகிறது.

யுவர் ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சியான, டெக்ஸ்பார்க்ஸ் 2018ல், இந்திய அரசுக்கான கூடுதல் செயலர் மற்றும் எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் வளர்ச்சி ஆணையரான ராம் மோகன் மிஸ்ரா, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அரசு இணைந்து முதலீடு செய்ய விரும்புவதாக உறுதி அளித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியா தனது ஏற்றுமதி மூலம் உலகம் முழுவதும் கலை சார்ந்த பொருட்களுக்காக அறியப்பட்டிருந்ததாகவும், எந்திரங்கள் வருகைக்குப்பிற்கு இந்த பிரிவு நலிந்துவிட்டதாகவும் மிஸ்ரா தெரிவித்தார். 

“இந்தியாவில் கலை சார்ந்த தொழில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது, அதை புதுப்பிக்க விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME) ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண் தொழில் முனைவோருக்கான ’உதயம் சாத்தி’ மற்றும் ’உதயம் சக்தி’ இவற்றில் ஒன்றாக திகழ்கின்றன.

“தொழில்முனைவோரின் கனவுகள் மரிக்காமல் இருக்க அவர்களுக்கு ஊக்கம் தேவை. பல்வேறு நிறுவனங்களுக்கு கைப்பிடித்து வழிகாட்டுவோம்,” என்று மிஸ்ரா கூறினார்.

எம்.எஸ்.எம்.இ துறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளின் அடையாளமாக, இந்தியா எண்டர்பிரைஸ் போர்டல் அமைக்கப்பட்டிருப்பதை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் சிறந்த செயல்முறைகளை பட்டியலிடும் இணையதளமாக இது விளங்குகிறது.

வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தி ஆலோசிக்க, சிறு தொழில்களுக்கான உதவி எண் அமைப்பது பற்றியும் மிஸ்ரா பேசினார்.

MSME கண்டுபிடிப்புகள் வர்த்தகமயமாக்கப்படும் வகையில், சி.எஸ்.ஆர் லாப்சுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.

எம்.எஸ்.எம்.இ துறையில் உள்ள வாய்ப்புகளை அடையாளம் காட்ட, தொழில்முனைவு மையங்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக மிஸ்ரா கூறினார். சில இடங்களில் முன்மாதிரியாக அமைக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதும் இவை விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா புஜாரி | தமிழில்: சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL