குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி பெற்றோர்களுக்கு உதவும் 'பேபிபெர்ரி'

1

புதிய பெற்றோர்கள் ரொம்பத் தான் குழம்பிப்போகிறார்கள். யார் சொல்வதைக் கேட்பது? ஆன்லைனில் சொல்லப்படுவதை பின்பற்றுவதா? அல்லது வழிவழியாக காலங்காலமாக நம் முன்னோர் சொல்லிவந்த அறிவுரைகளை கேட்டு நடப்பதா? இதில் மூடநம்பிக்கைகளை அகற்றிப் பார்த்தால் அதன் உண்மை மெய்சிலிர்க்கும். இத்துடன் ஒரு பொதுவான பீதி எல்லப் பெற்றொர்களிடமும் காணப்படும். இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல் அழுதுக்கொண்டிருக்கும் குழந்தையை சமாளிக்கமுடியாமல், அதற்கு காரணம் பசியா, உடல் உபாதையா என குழம்பி, நீங்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி அதனை ஒரு பெற்றோராக அனுபவித்திருப்பீர்கள். அங்குதான் 'பேபிபெர்ரி' (BabyBerry) உங்களுக்கு உதவுகிறது.

அது என்ன?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முழுமையாக கவனித்துக்கொள்ள, குழந்தை வளர்ப்பில் எல்லா அம்சங்களையும் சிறப்பாக கையாள, 'பேபிபெர்ரி' உதவி செய்கிறது. அதாவது தடுப்பூசி அட்டவணை, வளர்ச்சியின் படிநிலைகள், அத்தகவல்கள், வாழ்க்கைப் பதிவுக்கான கருவிகள் மற்றும் பரிந்துரைக்கப்படும் குழந்தைத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மதிப்பிடுவதற்கான சாதகமான அம்சங்கள் என்று அனைத்து சேவையையும் உள்ளடக்கிய செயலி இது.

இந்த செயலி குழந்தைகளின் உடல்ரீதியான, உணர்ச்சிமயமான மற்றும் அறிவுரீதியான வளர்ச்சியையும் கண்காணிக்க முற்படுகிறது. அது தனிப்பட்ட தகவல்களையும் பெற்றோர்களுக்கு பரிந்துரைக்க தனது பிரத்யேக எஞ்சின் எம்பிரையோ வழியாகத் தருகிறது. குழந்தையின் வயது, பாலினம், மக்கள் தொகையியல், பழக்கவழக்கம், திறன்கள் மற்றும் பெற்றோரின் வாழ்க்கைமுறை ஆகிய தகவல்களைத் திரட்டுகிறது. தடுப்பூசிகள் போடும்போது அதனால் ஏற்படும் சாத்தியமான பக்கவிளைவுகள் பற்றிய எச்சரிக்கைகளும் பெற்றோர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும். அவர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பின் தரத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம். மேலும் குழந்தையின் தேவையான மற்றும் தனிப்பட்ட சமீபத்திய தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

இதுவரையில் கதை

செர்ரிப்ராம் இன்னோவேசன்ஸ், பேபிபெர்ரிக்கு பின்னால் இருக்கிற முதன்மை நிறுவனம். அது பாலா வெங்கடாச்சலம் மற்றும் சுபாசினி சுப்ரமணியம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தன்னை எப்போதும் சிறந்த பெற்றோராக நினைக்கிறவர் சுபாசினி. தன் குழந்தையின் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். ஆனால் ஒரு நாள் அவருடைய மகள் சின்னம்மையால் பாதிக்கப்பட்டார். அவர் உடனே மருத்துவரைப் பார்த்தபோது, சின்னம்மை பாதிப்பு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியை போடவில்லை என்றார். அவருடைய மகளுக்கு வகுப்புத்தோழி மூலமாக அது வந்திருக்கிறது. அரசின் முக்கிய தடுப்பு மருந்துகளில் அதுவும் ஒன்று.

அப்போதுதான் இந்த நிறுவனர்கள், தகவல் பற்றாக்குறை, விழிப்புணர்வு மற்றும் நேரத்தில் நினைவூட்டல் ஆகியவை தேவையாக இருப்பதையும் அவை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்றும் உணர்ந்தார்கள். முதல்கட்டமாக நல்ல புரிதல் உள்ள குழந்தை நல நிபுணர்களை சந்தித்தார்கள்.

பேபிபெர்ரியின் தலைமை மருத்துவ அலுவலர் தேவ் விக் பகிர்கிறார்: “எங்கள் யூகங்களை குழந்தை நல மருத்துவர்கள் உறுதி செய்தார்கள். பல பெற்றோர்கள் மருத்துவர்களை சிறு தகவல்களுக்காக வழக்கமாக சந்தித்தார்கள். ஆனால் கூச்சலைத் தவிர எதுவுமில்லை. மறுபுறத்தில் பல பெற்றோர்கள் மருத்துவர்களை எப்போதாவது சந்தித்தார்கள். ஆனால் முக்கியமான பரிசோதனைகள் செய்வதற்கு மறந்துபோனார்கள். எனவே பெற்றோர்களுக்கு தனிப்பட்ட, சரியான தகவல்கள் தேவையாக இருந்தன. அவை சரியான முறையில் சரியாக தெரிவிக்கப்படவேண்டும்.“

பீட்டா சோதனைக்குப் பிறகு பேபிபெர்ரி, அக்டோபர் 2014ம் ஆண்டில் செயலியாக (APPS) அறிமுகமானது. “எங்களுடைய தயாரிப்பு, சார்பு நிலை சானலாக இருக்கவேண்டும், எதிர்வினையாற்றும் சானலாக இருக்கக்கூடாது என்று விரும்பினோம். அதனால் செயலிதான் சிறந்த தேர்வாக இருக்கும் என்று அதை வெளியிட முடிவுசெய்தோம்.”

இந்த பிரதான குழுவில் ஆறு பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொழில்நுட்ப பின்னணி கொண்டவர்கள். அடுத்த இரு பணியாளர்கள் நடவடிக்கைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸை கவனித்துக்கொள்கிறார்கள். முதன்மை செயல் அதிகாரியான பாலா, இருபது ஆண்டுகள் தயாரிப்பு பொறியியலில் அனுபவம் வாய்ந்தவர். முதன்மை நடவடிக்கை அதிகாரியான சுபாசினி, பதினேழு ஆண்டுகள் சுகாதாரத்துறை மற்றும் இ-வணிக தயாரிப்புகளை கையாள்வதில் அனுபவம் பெற்றவர். தேவும் முதன்மைக் குழுவில் அங்கம் வகிக்கிறார். அவருக்கு தேச மற்றும் சர்வதேச மொபைல் நிறுவனங்களில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய 11 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. பேபிபெர்ரி முதலில் மெட்ரோ நகரங்களில் உள்ள புதிய பெற்றோர்களைக் கவர்ந்தது. அடுத்து இந்தியா முழுவதும் உள்ள சிறு நகரங்கள் மற்றும் நகரங்களின் பெற்றோர்கள். அவர்களிடம் நம்பிக்கையான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கலந்த சந்தைப்படுத்தல் வழிகள் இருக்கின்றன. மற்றும் வாய்மொழி வழியாகவும் பயனர்களை அதிகரித்துக்கொள்கிறார்கள்.

எப்படி வேலை செய்கிறது?

பெற்றோர்கள் அந்த ஆப்ஸில் பதிவு செய்து நுழைந்து தங்கள் குழந்தையின் தொடர்புடைய தகவல்களைத் தரவேண்டும். குழந்தையின் பிறந்த நாள், பிறந்தபோது இருந்த எடை அளவு, உயரம், பாலினம், ரத்த வகை மற்றும் கருவுற்ற நாட்கள் ஆகியவற்றைக் கொடுத்தால் தேவையான தகவல்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான கால அட்டவணையும் கிடைக்கும்.

பதிவு செய்யப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், ஆப்ஸ் மூலம் குழந்தைகள் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவை செய்யும் தேவையான, தொடர்புடைய வாங்குவோர்களிடம் இணைக்கப்படும். மேலும் அந்த செயலி, மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்களிடம் இருந்தும் தொடர்புடைய தகவல்களை பெற்றுத்தரும்.

பேபிபெர்ரி பல வருவாய்க்கான வழிகளையும் வைத்திருக்கிறது. பெர்ரிகார்ட், இந்த ஆப் இ-வணிக ஸ்டோர்; பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள், பொம்மைகள் மற்றும் பிறவற்றையும் வாங்கிக் கொள்ள முடியும். அவர்கள் மேலும் மருத்துவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிளினிக்குகளுடன் தொடர்புகொண்டு சந்திக்க நேரம் வாங்கிக்கொள்ளலாம். மேலும் தாய்மார்கள், குழந்தைகளுக்குத் தேவைப்படும் குழந்தை பராமரிப்புக்குத் தேவைப்படும் பிராண்ட்டுகள், பிக் டேட்டா, மற்றும் சுகாதாரம் தொடர்புடைய சேவை என பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் இந்த நிறுவனம் கண்டறிந்து செய்கிறது.

துறையின் கண்ணோட்டம் எதிர்காலத் திட்டங்கள்

குழந்தைப் பராமரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சந்தை 50 மில்லியன் பயனாளர்களுடன் இந்தியாவில் அதன் வர்த்தகம் 18 பில்லியன் டாலருக்கு நடைபெறுவதாக மதிப்பிடுகிறார் தேவ். வசதியான மற்றும் நடுத்தர வர்க்கத்தில் இயல்பாகிப்போன தனிக் குடும்பங்கள், எப்போதும் பணியில் இருக்கும் நகர்ப்புற தம்பதிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் எல்லோருமே வாழ்க்கையை எளிதாக்கிக்கொள்ளும் தீர்வுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

இது ஆச்சரியமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல தொடக்கநிலை நிறுவனங்கள் இத்துறையில் இறங்கி நல்ல வெற்றியை கண்டுள்ளனர். முக்கியமான நிறுவனங்களான ஃபர்ஸ்ட்க்ரை. காம் (Firstcry.com) குழந்தைப் பராமரிப்புக்கான தயாரிப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்கின்றன. மஹேந்திராவில் 'பேபிஓயே' (முன்பு மாம் அண்ட் மீ) மகப்பேறுக்கான உடைகள் மற்றும் குழந்தைப் பராமரிப்புக்கான தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

பேபிசக்ரா (Babychakra) என்பது டெஸ்க்டாப் தொடர்புடைய புதிய பெற்றோர்களு்ககான சமூகத்தளம். அது விரைவில் மொபைல் ஆப்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. ஒரு வயது வரையில் குழந்தைகளுக்கான சேவைகளை பேபிசென்டர் வழங்குகிறது. மைசிட்டி4கிட்ஸ் (Mycity4kids) என்ற நிறுவனம் இணையம் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான குழந்தைகள் விரும்பும் நடவடிக்கைகளை பட்டியலாக வழங்குகிறது.

பேபிபெர்ரியின் நோக்கம் உள்ளடக்கத்தில் தான் கவனம் செலுத்துகிறது, வாழ்க்கைப் பதிவு மற்றும் குழந்தை தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகள். தற்போது அது குழந்தைகள் பிறப்பு முதல் ஏழு ஆண்டுகள் வரையில் அவர்களுடைய வளர்ச்சியை கண்காணிக்கும் சேவையை வழங்குகிறது. அதாவது புகைப்படங்களை உள்ளடக்கிய வாழ்க்கைப் பதிவு. அதில் வேறுபட்ட மைல்கற்களை சாதித்துள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு முன்பாக பெண்களுக்கான சேவையை விரிவுபடுத்தும் எதிர்காலத் திட்டங்களை பேபிபெர்ரி வைத்திருக்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாக சமவயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள், வளர்ப்பு அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்த இருக்கிறார்கள்.

யுவர்ஸ்டோரி கருத்து

பேபிபெர்ரி, ஒரு நற்சிந்தனையும் ஒருங்கிணைப்பும் கூடிய செயலி. அது பெற்றோர்களின் வாழ்க்கையை எளிதாகவும் மன அழுத்தம் இல்லாததாகவும் ஆக்கியிருக்கிறது. குழந்தை வளர்ப்பு தொடர்பான கட்டுரைகளை சமூக வலைதளங்களில் ஊடகப்பிரிவினரால் பதிவேற்றப்படுகின்றன. மேலும், பேபிபெர்ரிக்கு வெளியே உள்ளவர்களும் தங்களுடைய கட்டுரைகளை பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த அம்சம் சேர்ந்துள்ளதால் ஆப்ஸ், அதன் எல்லை குறிப்பிடத்தக்க அளவுக்கு அமைப்புரீதியாக விரிவடைந்துள்ளது. பேபிபெர்ரி, சில சமூக நிகழ்வுகள் உள்ளிட்ட குறிப்புகள் எடுத்துக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறது.

இந்த ஆப்ஸ் எளிதான பதிவு செய்யும் நடைமுறைகளைக் கொண்டது., அதை எளிதாக பயன்படுத்தமுடியும். இதில் மிகவும் பயன்பாடுமிக்க அம்சம் வளர்ச்சிக்கான அட்டவணை மற்றும் சுகாதார ஆவணங்கள், இவை பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிப் பாதையை கூர்ந்து கவனித்துக்கொள்ள உதவுகிறது. தவறவிட்ட சில சிகிச்சைகளைக் கண்டறிந்து மருத்துவரை அணுகலாம். அதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்துகிறது.

தயாரிப்பு பொறியியல், சுகாதாரம், இ-வணிகம் மற்றும் விற்பனையில் அனுபவம் உள்ளவர்களுடன் கூடிய பிரதானக் குழுவுடன், எப்படி பேபிபெர்ரி, கூடுதல் அம்சங்களுடன் தங்களுடைய ஆப்ஸை வருங்காலத்தில் மேம்படுத்தப்போகிறது என்பது சுவாரசியம்.

இணையதளம்: BabyBerry

ஆக்கம்: HARSHITH MALLYA தமிழில்: தருண் கார்த்தி