உங்களுக்கு உகந்த இன்சூரன்ஸ் பாலிசி எது? ஆலோசனை வழங்கும் ’PerilWise’ ஆப் மற்றும் தளம்!

0

"நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு மற்றும் அதன் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை வாங்குவது பற்றியும் இன்சூரன்சில் உள்ள குறைபாடுகள் குறித்தும் எடுத்துச் சொல்வோம்,” 

என்றார் அவினாஷ் ராமசந்திரன் PerilWise நிறுவனர். இன்சூரன்ஸ் விற்பனை இன்று பலவகைகளில் குழப்பப்பட்டு, பயனற்றவையாக பலரால் கருதப்படுகிறது. காப்பீட்டை விற்பனை செய்வோரும் அதைப் பற்றி சரிவர விளக்காமல் வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுகின்றனர். தொழில்நுட்பத்தின் பங்கும் இந்த துறையில் குறைவாகவே இருப்பதால் சரியான தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளாமல் ஏமாந்தும் விடுகின்றனர். 

PerilWise குழு 
PerilWise குழு 

இன்சூரன்ஸ் திட்டங்களில் உள்ள இந்த குறைப்பாட்டை களைய நினைத்த நண்பர்கள் சுனில் ஸ்ரீவத்சா பாடசாலா மற்றும் அவினாஷ் ராமசந்திரன் தொழில்முனைவில் இறங்கினர். இன்சூரன்ஸ் புக்கிங் சேவைகளுக்கான பிரத்யேக தளத்தின் தேவை இருப்பதை உணர்ந்த இவர்கள், அத்துறையில் உள்ள தகவல்கள் இயலாமையை போக்கி, சரியான விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். அப்படி ஆகஸ்ட் 2016-ல் சென்னையில் பிறந்ததுதான் ’பெரில்வைஸ்’ ’PerilWise’ எனும் நிறுவனம். 

வாடிக்கையாளர்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இடையே பாலமாக அமையும் ஆப் மற்றும் வெப் மூலமான தீர்வு தளத்தை உருவாக்கியுள்ளனர் இவர்கள். இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் IRDA ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அவினாஷ் கூறினார். இதன் மூலம் PerilWise வாழ்நாள் மற்றும் பொது காப்பீட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் ப்ரோக்கர் நிறுவனம் ஆகிவிடும்.

PerilWise சேவைகள் என்ன?

ஒரு பர்சனல், ஆன்லைன் இன்சூரன்ஸ் பாலிசி மேனேஜர் போல செயல்படும் தளம். பாலிசி தொடர்பான மேலாண்மை சேவைகளுக்கான நேரடி பொது மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் ப்ரோக்கர்கள் போல் செயல்படுவார்கள்.

நிறுவனர்களின் பின்னணி

 சுனில் பாடசாலா நான்கு ஆண்டுகள், பாரதி ஆக்சா உட்பட பல நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர். அவினாஷுக்கு விற்பனை மற்றும் இ-காமர்ஸ் துறையில் அனுபவம் கொண்டவர். இருவரும் இணைந்து இ-காமர்ஸ், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் இன்சூரன்ஸ் ப்ரோகிங் சேவைகளை செய்ய முனைந்தனர்.

சிறப்பு தனித்துவ சேவைகள்

பயனர்கள் தங்களின் குடும்பம் மற்றும் தங்களின் இன்சூரன்ஸ் பாலிசி விவரங்களை PerilWise செயலியில் பதிவேற்றலாம். ப்ரீமியம், ரெனியூவல் மற்றும் க்ளேய்ம் குறித்த தகவல்களை தளத்தின் உதவியுடன் அறியலாம். அதில் சேட்பாட் வசதி உள்ளதால் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உடனடியாக கிடைக்கும். சந்தேகங்களும் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். 

ஒருவருக்கு எந்த பாலிசி உகந்தது என்பது பற்றிய ஆலோசனையும், பயனரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற பாலிசியை பரிந்துரைக்கிறது இத்தளம். PerilWise ஆப் மூலம் ஒருவர் தங்கள் பாலிசியை நிர்வகிக்கவும், புதிய பாலிசி வாங்கவும் முடியும்.

”எங்கள் சேவைகள் எல்லாம் நாங்கள் அனாலிடிக்ஸ் அடிப்படையில் செய்வதால், சரியான வழியில் வாடிக்கையாளர்கள் வழிகாட்டப்படுவார்கள்,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவினாஷ். 

பயனாளிகள் இன்சூரன்ஸ் அளிக்கும் மருத்துவமனைகள், கராஜ்கள் பற்றியும் தகவல்களையும் இத்தளம் வழியே தெரிந்து கொள்ளலாம். 

குழு விவரம்

தங்கள் நிறுவன குழு பற்றி விவரித்த அவினாஷ், “தற்போது எங்களிடம் 5 முழுநேர டெவலப்பர்கள் உள்ளனர். எல்லாரும் நாங்கள் படித்த கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றவர்கள்,” என்றார். 

சந்தை மற்றும் வருவாய் மாதிரி

இன்றைய ஆன்லைன் இன்சூரன்ஸ் சந்தையின் மதிப்பு ரூ.1800 கோடி ஆகும். ஆஃப்லைன் சந்தை அதைவிட 200 மடங்கு அதிகமாக உள்ளது, ஆனால் மெல்ல அதுவும் ஆன்லைன் நோக்கி நகர்வது நல்ல தகவல். தற்போது உள்ள நிலையில் 2021-க்குள் ஆன்லைன் இன்சூரன்ஸ் சந்தை ஏழு மடங்கு அதிகரிக்கும் என்று PerilWise குழுவினர் கணிக்கின்றனர். 

இவர்களின் தளம் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு இன்சூரன்ஸ் பாலிசிக்கும் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்துள்ளனர். பயனர்கள் தளத்தை பயன்படுத்த கட்டணம் ஏதும் இல்லை, இலவசமாக சேவைகளை பெறலாம். செலவுகளை குறைக்க முடிந்தவரை எல்லா செயல்பாடுகளையும் நிறுவன முக்கிய குழுவினரே பார்த்துக் கொள்கின்றனர். நிறுவனத்துக்கான மார்க்கெடிங் பணிகளையும் ஆன்லைன் மூலமே செய்ய திட்டமிட்டுள்ளனர் PerilWise நிறுவனர்கள். 

இணையதள முகவரி: PerilWise