பாதுகாப்பான வெளியூர் பயணங்களுக்கு பாரத்பென்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதியவகை சொகுசு பேருந்து!

6

சென்னை – டெய்ம்ளர் ஏஜி நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமான டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள்ஸ் அதன் பாரத்பென்ஸ் (BharatBenz) ப்ராண்டின் தயாரிப்பு அணிவரிசையை விரிவுபடுத்தும் விதத்தில் அதன் புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. 

2015-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டவாறும் திட்டமிட்டபடியும் இந்நிறுவனத்தின் பேருந்து தயாரிப்பு செயல்முறை தொடக்கத்தின் வழியாக வெளிவந்திருக்கும் முற்றிலும் புதிய பாரத்பென்ஸ் இண்டர்சிட்டி கோச், இந்த பிராண்டின் பேருந்து அணிவரிசையை நிறைவுசெய்கிறது.

2015-ம் ஆண்டின் இறுதியிலிருந்தே பள்ளிகள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான 9 டன் வகையினைச் சேர்ந்த பேருந்துகள் பாரத்பென்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. நகரங்களுக்கு இடையிலான பயணம் என்பது வளர்ந்து வரும் பிரிவாகும். எனவே இதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 16 டன்கள், 238 hp (175 kW) முன்புற இன்ஜினைக் கொண்ட இந்தப் பேருந்து பாரத்பென்ஸ்-ன் வெற்றிகரமான தயாரிப்பு தொகுப்பை மேலும் முழுமையாக்குகிறது. 

டெய்ம்ளர் பஸ்ஸஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மார்க்கஸ் வில்லிங்கர் கூறியதாவது : 

"நகரங்களுக்கிடையிலான பயணத்தை அடுத்த மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்காக புதிய பாரத்பென்ஸ் இண்டர்சிட்டி கோச்சை நாங்கள் வடிவமைத்துள்ளோம். பயணியருக்கும் ஓட்டுநருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் அதிக சவுகரியமான பயண அனுபவம் கிடைப்பதோடு உரிமையாளர்களுக்கு அதிக மதிப்பும் உறுதிசெய்யப்படுகிறது," என்றார்.  

சந்தையில் எங்களது ஏற்பு மற்றும் கிடைத்திருக்கும் வரவேற்பினைச் சார்ந்து நிரூபிக்கப்பட்ட BSIV தொழில்நுட்பம் கொண்ட இந்த சிறப்பான தயாரிப்பின் வழியாக வளர்ந்து வரும் இப்பிரிவில் வாய்ப்புகளை கைப்பற்றுவோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார் மேலும். 

பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டது 

இதன் சிறப்பான வீல்பேஸ்-ன் மூலம் 12 மீட்டர் நீளமான பாரத்பென்ஸ் இண்டர்சிட்டி கோச் எளிதான இருக்கை வசதிக்காக பயணிகளுக்கு 790 மி.மீ அளவிற்கு கால் நீட்டும் வசதியை வழங்குகிறது. இதனால் இவ்வகையினத்தில் மிகச்சிறந்த கேபின் இட விநியோகம் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது. பயணத்தின் போது விரிவான பார்வை நிலைகளோடு ரிலாக்ஸான பயணத்தை உறுதிசெய்வதற்கு அழகான உட்புற அலங்காரம், வசதிகள் மற்றும் அகலமான ஜன்னல்கள் உதவுகின்றன.

சாலையின் மேடு பள்ளங்களின் அதிர்வினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு சேசிஸின் செயல்திறனோடு முன்புற மற்றும் பின்புற ஏர் சஸ்பென்ஷன்கள் நேர்த்தியாக அளவிடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும் சத்தம் கேட்காதவாறு காப்புவசதி செய்யப்பட்டிருப்பதை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இதன் தனித்துவமான திறந்தநிலை சலூன் வடிவமைப்பின் காரணமாக சத்தமில்லாமல் அமைதியான பயணம் அமைவதை இவ்வாகனத்தின் கட்டமைப்பு உறுதிசெய்துள்ளது.

இன்ஜினால் இயக்கப்படும் கம்ப்ரஸருடன் கூடிய சக்திவாய்ந்த ஏர்கண்டிஷனர் பயணிகளுக்கு இனிமையான மற்றும் சொகுசான கேபின் சூழலைத் தருவதுடன் வாகன ஓட்டுநர்கள் விழிப்புடன் செயல்பட உகந்த சூழல் அமைவதையும் உறுதிசெய்கிறது.

பாதுகாப்பான பயணத்திற்காக கட்டமைக்கப்பட்டது

பாரத்பென்ஸ் இண்டர்சிட்டி கோச் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் ஒரு முழுமையான அணுகுமுறையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட முனைப்பான மற்றும் முனைப்பற்ற பாதுகாப்பு அம்சங்களின் ஒரு விரிவான தொகுப்பு சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. AIS-031 CMUR பேருந்து பாடி பில்டிங் கட்டமைப்பு விதியின்படி ரோல் ஓவருக்கான கடுமையான பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதாக இதன் வலுவான அலுமினிய பாடி இருக்கிறது. வெல்டிங் செய்யப்பட்ட பாகங்கள் எதுவும் கொண்டிராமல் உருவாக்கப்பட்டுள்ள இதன் மெல்லிய எடை கொண்ட கட்டமைப்பு வாகனத்திற்கு கூடுதல் வலு தருவதோடு மட்டுமன்றி இதன் புவியீர்ப்பு சக்தியின் மையத்தை குறைக்கவும் செய்வதால் வாகனத்திற்கு கூடுதல் நிலைப்புத்தன்மை கிடைக்கப்பெறுகிறது.

அகலமான ப்ரேக் லைனிங் (4 டயர்களுக்கும் 410 x 220), திறன்மிக்கவாறு பிரேக்கிங் செய்யப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் மூலம் சிறப்பான பிரேக்கிங் தூரம் கிடைக்கப்பெறுவது உறுதிசெய்யப்படுகிறது. உட்புற அலங்காரங்களைப் பொருத்தவரை இதன் வினைல் ஃப்ளோரிங், சறுக்குவதற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட மேற்புற லேயரோடும் மற்றும் தீ பரவலைத் தடுக்கின்ற பொருட்களைக் கொண்டதாகவும் இருப்பது சிறப்பானது. அவசரநிலை சூழல்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான பாதை இருப்பதை உறுதிசெய்வதற்காக இவ்வாறு மிக கவனமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வாகன உரிமையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வடிவமைப்பு

பேருந்து உரிமையாளர்களுக்கு இலாபம் அளிப்பதற்காக பாரத்பென்ஸ் இண்டர்சிட்டி கோச் வாகனத்தை சொந்தமாக கொண்டிருப்ப்பதற்கான செலவு குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாகன பாடியின் தனித்துவமான அலுமினிய கட்டமைப்பானது வாகனத்தின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறது. இதன் ஏரோ டைனமிக் பாடி வடிவமைப்பும் ட்யூப்லெஸ் டயர்களும் வாகனம் இழுத்துக்கொண்டு உருளாமல் இருப்பதற்கு எதிர்ப்புத்திறனை வழங்குவதோடு எரிபொருள் செயல்திறனையும் மேம்படுத்துகின்றன. 

இன்ஜின் ஆயில் மற்றும் கியர் பாக்ஸ் ஆயில் மாற்றுவதற்கான இடைவெளிகள் ஒரு இலட்சம் கிலோ மீட்டராக இருப்பது இந்த கோச்சின் தனித்துவமான, நிகரற்ற சிறப்பம்சமாகும். பாரத்பென்ஸ் தனது அனைத்து வாகனங்களுக்கும் நாடெங்கிலும் வழங்குகின்ற நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இதற்கு கிடைக்கிறது. ஒரு தனித்துவமான பாரத்பென்ஸ் அம்சமாக வழங்கப்படுகிற வருடாந்திர பராமரிப்பு சேவை தொகுப்பானது, பேருந்தின் பாடி மற்றும் சேஸிஸ் ஆகிய இரண்டையும் உள்ளடக்குவதால் சிறப்பான பராமரிப்பு சேவை கிடைப்பதை உறுதிசெய்கிறது.

மேலும் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான பராமரிப்பு செலவுகள் ஆகியவை மட்டுமன்றி, SCR தொழில்நுட்பமானது தேவைப்படுமானால் BS III எரிபொருளைக் கொண்டு எவ்வித தடையுமின்றி பாரத்பென்ஸ் BS IV வாகனங்கள் இயக்கப்படுவதையும் அனுமதிக்கிறது. 

டெய்ம்ளர் பஸ்ஸஸ் இந்தியா (Daimler Buses India)

DICV-யின் பஸ் வணிகத்திற்கு பொறுப்பான டெய்ம்ளர் பஸ்ஸஸ் இந்தியா இரண்டு விதத்தில் உள்ளூர் சந்தையில் செயல்பட்டுவருகிறது. பாரத்பென்ஸ் அதிக அளவில் விற்பனையாகும் பிரிவிற்காக முன்புற என்ஜின் கொண்ட பஸ்கள் மற்றும் கோச்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் பிரிவிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் பின்புற என்ஜின் கோச்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் சென்னையின் ஒரகடத்திலுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. பாரத்பென்ஸ் டீலர் நெட்வொர்க், வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேகமான சேவை தொகுப்புகள், 24X7 விற்பனைக்கு பிறகான சேவைகள் மற்றும் மேம்பட்ட ஊடாடும் வாகன கண்டறிதல் போன்றவற்றின் மூலம் இரண்டு ப்ராண்டுகளுக்குமான வாடிக்கையாளர் சேவைகள் வழங்கப்படுகிறது. டெய்ம்ளர் ஃபினான்சியல் சர்வீசஸ் இந்தியா நிதி தொடர்பான தீர்வுகளை வழங்கி வருகிறது.