இந்தியாவின் முதல் பயோஜெட் எரிபொருள் விமானத்தை இயக்கியுள்ளது ஸ்பைஸ்ஜெட்! 

0

இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்பைஸ்ஜெட் பயோஜெட் எரிபொருளுடன்கூடிய 72 இருக்கைவசதி கொண்ட விமானத்தை வெற்றிகரமான சோதனை செய்துள்ளது. இந்த விமானம் தேஹ்ராதூனில் இருந்து புறப்பட்டு 25 நிமிடங்களில் டெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

இந்த முயற்சியால் வான்வழி போக்குவரத்து தூய்மையாகவும் திறன்மிகுந்ததாகவும் காணப்படும். இதனால் செயல்பாட்டுக் கட்டணம் குறைவதுடன் வழக்கமாக பயன்படுத்தப்படும் விமான எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையும் குறையும். 

ஸ்பைஸ்ஜெட் பம்பார்டியர் Q400 வகை விமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பயோ எரிபொருளை தேஹ்ராதூனைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம் உருவாக்கியுள்ளது.

இதை DGCA மற்றும் இந்தியன் ஆயில் ஆய்வு செய்துள்ளது. இந்த விமானம் 75 சதவீதம் ஏர் டர்பைன் எரிபொருளும் 25 சதவீதம் பயோ எரிபொருளும் கலந்து இயக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கிறது. 

சத்தீஸ்கர் பயோஎரிபொருள் மேம்பாட்டு ஆணையத்தால் (CBDA) ஐஐபி-க்கு விநியோகிக்கப்பட்ட காட்டாமணக்கு பயிரின் விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தி 450 லிட்டர் பயோஜெட் எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது. CBDA இவற்றை சத்தீஸ்கரைச் சேர்ந்த 500 விவசாயிகளிடம் இருந்து வாங்கியுள்ளது.

பயோஜெட் எரிபொருளை உருவாக்கிய 20 பேர் அடங்கிய குழுவை வழிநடத்திய ஐஐபி முதன்மை விஞ்ஞானியான அனில் சின்ஹா குறிப்பிடுகையில், இந்த நிறுவனம் தற்போது பயோ எரிபொருள் உற்பத்திக்காக பல்வேறு விதைகள் மற்றும் மரங்களில் இருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் என்றார்.

”பயோஎரிபொருளுக்கான மூலப்பொருட்களை வாங்குவது மிகப்பெரிய சவாலாகும். எனினும் ஒருமுறை ஒழுங்குபடுத்தப்பட்டால் இந்த மூலப்பொருட்களை விநியோகிப்பதன் மூலம் விவசாயிகளும் பழங்குடியினரும் வருவாய் ஈட்டமுடியும். தற்சமயம் அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலைக்கழகம் சில ஆயிரம் லிட்டர் நாஹோர் எண்ணெயை அனுப்புவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. விதைகளுள்ள மரங்கள் பயோ எரிபொருள் உற்பத்திக்கு பயன்படும். எனவே வருங்காலத்தில் பயோ எரிபொருள் உற்பத்தி வேளாண்காடு வளர்ப்பை ஊக்குவிக்கும்,” என்றார் சின்ஹா.

ஸ்பைஸ்ஜெட் பயன்படுத்திய பயோஎரிபொருள் காட்டாமணக்கு பயிரின் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஏர்டர்பைன் எரிபொருள் ஆகியவற்றின் கலவையாகும். பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பயோ எரிபொருள் உற்பத்தியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐநூறு விவசாய குடும்பங்கள் ஈடுபட்டதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் பயோஎரிபொருள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். பயோ எரிபொருளை பிரித்தெடுக்கும் செயல்முறையும் எளிது. இதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைப் போன்ற விலையுயர்ந்த கட்டமைப்பு அவசியமில்லை. அத்துடன் பயோஎரிபொருள், என்ஜினின் ஒட்டுமொத்த ஆயுளையும் மேம்படுத்தி பராமரிப்பு செலவையும் குறைக்கிறது.

ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடுகையில்,

பயோ எரிபொருள் பயன்பாடு பாரம்பரிய விமான எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையை 50 சதவீதம் குறைக்கும் திறன் கொண்டது. இதனால் கட்டணங்களும் குறையும்.

உத்தர்காண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தேஹ்ராதூனின் ஜாலி கிராண்ட் விமானநிலையத்திலிருந்து பயோஎரிபொருள் பயன்பாட்டை துவக்கி வைத்தார். சோதனை விமானத்தில் DGCA மற்றும் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் பயணம் செய்தனர். சோதனை இயக்கம் என்பதால் இவர்களைத் தவிர வேறு எவரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏஎன்ஐ-க்கு தெரிவிக்கையில்,

இன்று விமான போக்குவரத்துத் துறையில் இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். விமான போக்குவரத்து துறையிலும் க்ளீன் ஆற்றல் துறையிலும் இது மிகப்பெரிய சாதனையாகும். பயோடீசல் மற்றும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

பயோஜெட் எரிபொருள் அமெரிக்க தரநிலை சோதனை முறையால் (ASTM) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு Pratt & Whitney மற்றும் Bombardier-ன் விவரக்குறிப்பு தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது.

ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலை உயர்வு விமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியதால் பயோஎரிபொருள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பல்வேறு உள்ளூர் விமான நிறுவனங்களுக்கு உதவும் என ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

பயோஜெட் எரிபொருளைக் கொண்டு முதன் முதலாக இயக்கப்பட்டது வெர்ஜின் அட்லாண்டிக் விமானமாகும். இது பத்தாண்டுகளுக்கு முன்பு லண்டன் மற்றும் ஆம்ஸ்டர்டாம் இடையே இயக்கப்பட்டது என ’பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவிக்கிறது. மற்றும் வளர்ச்சி

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL