தொழில்நுட்பத்துடன் தகவல்களை நிர்வகிக்க பயோபார்மாவுக்கு உதவும் 'கிளினிஆப்ஸ்'

0

சான்பிரான்சிஸ்கோவில் அதுவொரு சிறிய தாய்லாந்து உணவு விடுதி. 2012ம் ஆண்டில் அவிக் பாலுக்கு மருத்துவப் பரிசோதனைகளுக்கான தரவுகள் மேலாண்மையில் ஒரு புதுமையான தருணம் அது.

மதிய உணவு இடைவேளையின்போது சில அறிவியல் ஆய்வாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஐகுரேவின் ( iKure) நிறுவனர்களில் ஒருவரான அவிக், மருத்துவப் பரிசோதனைகள் முழுவதும் தாள்களைச் சார்ந்து இருப்பதையும், அவற்றை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றவேண்டும் என்பதையும் உணர்ந்தார். புதிய மருத்துவ சிகிச்சைகளுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

ஐகுரேவில் அவிக், நிலையான சுகாதாரச் சேவையை தொழில்நுட்ப உதவியுடன் கடைசி மனிதனுக்கும் வழங்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டார். இந்த ஐகுரே அனுபவம் சுகாதாரத் தரவுகள் மேலாண்மையில் உள்ள சில நடைமுறை சவால்களை புரிந்துகொள்ள உதவியது.

இந்த இடைப்பட்ட நேரத்தில், அவருடைய மனைவி மருத்துவராக பயிற்சி பெற்று மருத்துவ ஆய்வில் ஈடுபட்டிருந்தார். தரவுகள் மேலாண்மையில் மருத்துவப் பரிசோதனை உலகம் எதிர்கொள்ளும் சவால்களை அவருடன் பகிர்ந்துகொண்டார்.

பலபேர் மருத்துவப் பரிசோதனை சூழலில் ஈடுபட்டிருக்கும் செய்தி அவருக்குள் ஒரு யோசனையை உருவாக்கியது. கடைசியில் அந்த சிறு பொறியே ஊதிப் பெரிதாகி மருத்துவப் பரிசோதனைகளுக்கான தரவுகளை டிஜிட்டலைஸ் செய்யும் "கிளினிஆப்ஸ்" ஆக (CliniOps) உருவானது.

செயல்பாடுகள்

கிளினிஆப்ஸ், 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சமூகவலைதளங்கள், மொபைல், பகுப்பாய்வு மற்றும் க்ளவுட் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவப் பரிசோதனைகளுக்கு மாத்திரை சார்ந்த தீர்வுகளை பயோஃபார்மா தொழில்துறைக்கு கிளினிஆப்ஸ் வழங்கியது. அது மின்னணு முறையில் எல்லாத் தகவல்களையும் மூல ஆதாரங்களாக சேகரித்தது. இதனால், எடிட்டிங் மற்றும் பல்வேறு பிற தகவல் மேலாண்மை நடைமுறைகள் மருத்துவப் பரிசோதனை தகவல் மேலாண்மையில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டன.

கிளினிஆப்ஸ் மூலம், ரத்த அழுத்தம் காட்டும் மானிட்டர்கள் போன்ற பல்வேறு மருத்துவக் கருவிகளில் இருந்து நேரடியாக தரமான தகவல்கள் பெறப்பட்டன. சரியாக அந்த தகவல்கள் உடனடியாக ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்தக் குழு உலகம் முழுவதும் சுகாதார சேவையில் ஈடுபடும் பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், மருத்துவக் கல்வி மையங்கள், ஆராய்ச்சி இன்ஸ்ட்டியூட்டுகள் மற்றும் அறக்கட்டளைகளுடன் இணைந்து செயல்பட்டது.

“நாங்கள் மருத்துவப் பரிசோதனைகளை அடையாளம் கண்டுகொண்டோம். குறிப்பாக அவை சர்வதேச இணைய தளங்களில் கிடைத்தன. தகவல் சேகரிப்பு, தகவல் மேலாண்மை, தகவலின் தரம் மற்றும் தகவல் பாதுகாப்பு எனப் பல சவால்கள் இருந்தன” என்று அனுபவத்தைப் பேசுகிறார் 40 வயதாகும் அவிக்.

இந்த சவால்களை எதிர்கொள்ளவும் மருத்துவ சிகிச்சை அடிப்படையிலும் பெரும்பாலும், போதிய இணையதள வசதிகள் இருக்கும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே முதுகெலும்பாக உள்ளன. மாத்திரை சார்ந்த தீர்வுகள் இணையம் இல்லாமல் செயல்படும். இணையதளத்தை நம்பாமல் முழுமையாக செயல்படுவது இச்சேவையின் நெகிழ்வு.

குழுவை உருவாக்குதல்

அவிக், தன்னுடன் ஐஐடி கரக்பூரில் படித்த நண்பர் யராமல்லி சுப்ரமணியத்தையும் குழுவில் இணை நிறுவனராக இணைத்துக்கொண்டார். “எங்களுடைய ஐஐடி நாட்களுக்குப் பிறகு எங்களது பாதைகள் வெவ்வேறானவையாக இருந்தன. சுப்பு, சுகாதார தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கருவிகளில் கவனம் கொண்டிருந்தபோது, நான் தொழில் பயன்பாட்டு ஆலோசனையில் ஈடுபட்டேன். பிறகுதான் நான் கிளினிஆப்ஸ் தொடங்க முடிவுசெய்தேன். அப்போது அவருடைய பெயர்தான் முதலில் ஞாபகத்துக்கு வந்தது. அவரைச் சந்தித்துப் பேசினேன். அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இணை நிறுவனராகவும் உயர் தொழில்நுட்ப அலுவலராகவும் இணைந்துகொண்டார்” என்கிறார் அவிக்.

சுப்ரமணியம்தான் ஆரம்பநிலையில் இருந்து தயாரிப்பை வடிவமைத்தார். மேலும் பல புதிய எண்ணங்களையும் தொடக்க முயற்சிகளையும் செய்தார்.

அங்கீகாரமும் முயற்சியும்

முன்னணி டிஜிட்டல் சுகாதார அமைப்புகளில் ஒன்றாக கிளினிஆப்ஸ் அங்கீகாரம் பெற்று இருக்கிறது.

அப்சஸரிஸ், கிளின் ஆப்ஸை டிஜிட்டல் சுகாதாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திய 15 நிறுவனங்களில் ஒன்றாக பட்டியலிட்டிருக்கிறது.

டெக்நியூஸ், டிஜிட்டல் சுகாதாரத்தில் புதுமையான ஆய்வுகளை செய்யும் 5 நிறுவனங்களில் ஒன்றாக கிளினி ஆப்ஸுக்கு இடம் அளித்திருக்கிறது.

பவுண்டர்ஸ் கெய்டு, அமெரிக்காவில் சுகாதாரம் மற்றும் பிட்னெஸ் துறையில் செயல்படும் முதன்மையான தொடக்கநிலை நிறுவனங்களில் ஒன்றாக கிளினி ஆப்ஸை தேர்ந்தெடுத்துள்ளது.

பார்மா வாய்ஸ், புதுமைகளை நிகழ்த்தும் முதன்மையான 10 நிறுவனங்களில் ஒன்றாக் கிளினி ஆப்ஸை பட்டியலிட்டுள்ளது.

எதிர்காலத் திட்டங்கள்

“ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டோம். கடின உழைப்பின் மூலம் எங்களுடைய தயாரிப்பை சந்தைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் ஆரம்பத்தில் 1 லட்சம் டாலரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் திரட்டினோம். தற்போது நாங்கல் எங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கான ஆதரவைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம்” என்று மேலும் கூறுகிறார் அவிக்.

இந்த ஆண்டு கிளினி ஆப்ஸ் வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலராக இருக்கிறது. அது சந்தாவைச் சார்ந்த மென்பொருள் சர்வீஸ் மாடலை பின்பற்றுகிறது. அது விரைவில் நிறுவன மாதிரிக்கு நகர்ந்துவிடும். கலிபோர்னியாவைத் தாண்டி கிளினிஆப்ஸ் கொல்கத்தாவிலும் தனது சேவையைத் தொடங்கிவிட்டது.

இந்த நிறுவனம் சில மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் பல்வேறுபட்ட சிகிச்சைகளில் ஈடுபடும் அறக்கட்டளைகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மேலும், பெரிய மருந்து மற்றும் மருத்துவப் பரிசோதனை அமைப்புகளுடன் பேசி ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டது. இன்னும் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதால் அவர்களுடை பெயர்களை கிளினிஆப்ஸ் வெளியிடவில்லை.

கண்காணிப்பு, நோயாளிகளை பராமரித்தல் மற்றும் நடைமுறை வாழ்க்கையுடன் கூடிய மேம்பட்ட பகுப்பாய்வு ஆகிய கூடுதல் சேவைகளில் கிளினிஆப்ஸ் ஈடுபட திட்டம் வைத்திருக்கிறது.

சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வெளி ச்

சுகாதாரம் மற்றும் சுகாதார தொழில்நுட்பம் ஆகியவை மிகவும் வேகமாக வளரும் துறைகளாக இந்தியாவில் உள்ளன. இந்திய மருத்துவப் பரிசோதனைச் சந்தை, 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 36 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

ஐபிஇஎப் அமைப்பின் அறிக்கையின்படி, மொத்த சுகாதாரத் தொழில்துறையின் வளர்ச்சி வரும் 2017ம் ஆண்டில் 160 பில்லியன் டாலராக இருக்கும் என கணித்திருக்கிறது.

மருத்துவப் பரிசோதனைகளை மேலும் திறமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றவேண்டும். அதுதான் வரவேற்கக்கூடிய முன்னேற்றம். நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்த கூடுதலான சுகாதார தொழில்நுட்ப புதுமைகள் தேவைப்படுகின்றன.

இணையதள முகவரி: Cliniops

ஆக்கம்: SINDHU KASHYAP | தமிழில்: தருண் கார்த்தி