10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள  யுவர்ஸ்டோரி-ன் 9வது 'TechSparks' 

யுவர்ஸ்டோரியின் ஆண்டு விழாவான ‘டெக்ஸ்பார்க்ஸ்’ல் நீங்கள் பங்கேற்க 9 காரணங்கள்! 

0

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் தொழில்நுட்ப, புதுமையாக்க மற்றும் தொழில் முனைவோர் மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் நெருங்கியுள்ளது. இதற்கு இன்னும் ஒரு தினமே உள்ளது. யுவர்ஸ்டோர் அலுவலகம் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ராட்சத இயந்திரத்தில் சுற்றும் போது கிடைக்கும் உணர்வு இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பிலும் டெக்ஸ்பார்க்ஸ் பெரிதாகவும், சிறப்பாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 9வது பதிப்பு நிகழ உள்ள நிலையில், யுவர்ஸ்டோரி தனது பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

டெக்ஸ்பார்க்ஸ் 2018, வலைப்பின்னல் தொடர்பு மற்றும் உரையாடல்களுக்கான இரண்டு நாள் நிகழ்வாக இருக்கும், இந்த அனுபவம் நிகரில்லாதது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கி, பணி மற்றும் குடும்பத்தைவிட இரண்டு நாட்கள் இதில் பங்கேற்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, இதற்கான காரணம் நிறைய இருக்கிறது. பயிலறங்குகள், தயாரிப்பு அறிமுகங்கள், வல்லுனர் உரைகள், விவாத அரங்குகள், திறமை கண்டறிதல் ஆகியவற்றுடன் மேலும் பல அம்சங்கள் இருக்கின்றன.

சிறந்தவர்களிடம் இருந்து கற்பது

யூனிகார்ன் முதல் டீப் சயின்ஸ், வடிவமைப்பு என இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்சில் எல்லோருக்குமான ஏதாவது ஒன்று இருக்கிறது. ஸ்டார்ட் அப் சூழலில் முக்கிய புள்ளிகள், இந்தியா முழுவதிலும் இருந்து வர்த்தக தலைவர்கள், வி.சிக்கள், அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்கின்றனர்.

பேடிஎம் பின்னணியில் உள்ள மனிதரான விஜய்சேகர் சர்மா, தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார். டெய்லிஹண்டின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, இந்தியா எதை விரும்புகிறது என கூறுகிறார்.

இன்னும் பல இருக்கின்றன. டெல்ஹிவரியின் மோகித் டாண்டன், லாஜிஸ்டிக்ஸ் சேவையை 12,000 பின்கோடுகளுக்கு கொண்டு செல்வது பற்றியும், இந்தியாவின் மகத்தான கிராசரி நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனர்களும் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். 

இவற்றுக்கு மத்தியில் யூனிகார்ன்கள் மற்றும் கையகப்படுத்தலை மறக்க முடியுமா? 30 ஆண்டுகள் மற்றும் 13 கையகப்படுத்தலுக்குப் பிறகு இந்தியாவின் விளம்பரம் மற்றும் மீடியா மகாராஜாம் ஆஷிஸ் பாசின், டிஜிட்டல் இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளார்.

உடான் இணை நிறுவனரான சுஜீத் (ஃபிளிப்கார்ட்டின் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாட்டை உருவாக்கியவர்) இந்தியாவில் பெரிய மார்க்கெட்டிங் வாய்ப்புகளை கண்டறிவது பற்றி பேசுகிறார்.

இவர்கள் பேசும் போது, உங்கள் கருத்துக்களை டிவிட்டரில் #tsparks என பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களுக்காக...

இந்த ஆண்டு வடிவமைப்பு, தாக்கத்திற்கான தொழில்நுட்பம், ஆழ் தொழில்நுட்பம், பெண்கள் மீதான கவனம் என தனியே எழு வரிசைகள் உள்ளன. இவற்றின் மூலம், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் பற்றி ஆழமாக கவனம் செலுத்த இருக்கிறோம். வடிவமைப்பு வரிசையில், சி.இ.ஓவாக வடிவமைப்பாளர் எனும் தலைப்பில் கிரீனோபியா இணை நிறுவனர் மற்றும் ஆய்வு தலைவர் மயுகினி பாண்டே பேசுவதை கேளுங்கள். 

இன்ஸ்டாமோஜோவின் வடிவமைப்பு தலைவர் கிங் சித்தார்த், மனித சார்புகள் பற்றியும், அது தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் ஏன் முக்கியம் என்பது பற்றியும் பேசுகிறார். இன்னும் பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

இது கேள்விகள் கேட்டும், தொழில்துறை சகாக்களுடன் பேசி வலைப்பின்னல் அமைத்துக்கொள்ள மற்றும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதற்கான களமாகும்.

உலகலாவிய தொடர்பு

டெக்ஸ்பார்க்சில் உலகின் பல பகுதிகளில் இருந்து பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்சில், தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஏன் இந்திய சந்தையை நோக்குகின்றன என்பதையும் அவை எவ்வளவு குழப்பமாக உணர்கின்றன (அல்லது இல்லை) என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தி குளோபல் இந்தியா; சிலிக்கான் பிரிட்ஜஸ் பார் ஸ்டார்ட் அப்சில், இவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள, சர்வதேச சந்தை தேவையை புரிந்து கொள்ள, பல்வேறு பகுதியினர் இந்திய சந்தையை எப்படி பார்க்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாகும்.

டெக் 30

எல்லாவற்றையும் பட்டியலிட்டால் நேரம் இருக்காது என்பதால், மோபிஸி, இன்னோவகர், விகாரா ஆகிய பெயர்களை மற்றும் குறிப்பிடுகிறேன். கையகப்படுத்தப்பட்டவற்றின் பட்டியல் இங்கே இருக்கிறது.

இவை அனைத்தும் டெக் 30 நிறுவனங்கள். டெஸ்ஸ்பார்க்சில் டெக் 30 ஆக கலக்கக் கூடிய நாளை நட்சத்திரங்கள் இவை. இந்த பட்டியலில் நீங்கள் இடம்பெறாவிட்டாலும், அவர்களின் கோரிக்கை வாசகங்கள் எப்படி வலுவாக அமைகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு, வாய்ப்புள்ள முதலீட்டாளர்களையும் சந்திக்கலாம்.

எலிவேட்டர் கோரிக்கை

எந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியும் வி.சி.க்கள் இல்லாமல் நிறைவடைவதில்லை. இந்திய ஸ்டார்ட் அப் துறையில் இந்திய விசிகள் எப்படி மீண்டும் துடிப்புடன் இயங்குகின்றனர் என்பதை இந்த ஆண்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆர்வம் காட்டும் துறைகளையும் அறியலாம்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சி 
கடந்த ஆண்டு நிகழ்ச்சி 

விசிக்களை மனதை அறிவதோடு, அவர்களை சந்திக்கும் போது உங்கள் எலிவேட்டர் கோரிக்கையை மறந்துவிட வேண்டாம். அதை பட்டைத்தீட்டி வையுங்கள். எப்போது தேவைப்படும் என தெரியாது. சந்திப்பின் போது நிச்சயம் கைகொடுக்கும். டெக்ஸ்பார்கிசில் பல மாயங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

கண்காட்சி

சேவையாளர்கள், ஸ்டார்ட் அப்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என பலவிதமான காண்காட்சியாளர்களை சந்தித்து, பேசி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். டெக்ஸ்பார்க்ஸ் 2018 கண்காட்சியாளர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இவர்களை நீங்களே 5 மற்றும் 6 ம் தேதி நேரில் கண்டறியுங்கள்.

மாஸ்டர்கிளாஸ்

துறையின் சிறந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்சில் 8 மாஸ்டர்கிளாஸ்கள் உள்ளன. சாம்சங்கின் ஆரம்ப நிலை முதலீட்டு பிரிவான சாம்சங் நெக்ஸ்ட், பொறியாளர்களுக்கான யு.எக்ஸ் எனும் பிரிவில் மாஸ்டர்கிளாஸ் நடத்துகிறது. குபேர்நோட்ஸ் பற்றிய மாஸ்டர்கிளாசும் இருக்கிறது. இவை தவறவிடக்கூடாத வாய்ப்புகள்.

புதிய வாய்ப்புகள்

தேநீர் மற்றும் காபிக்கு இடையே, 2,000 பேருக்கு மேல் சந்தித்து, கார்ட்க்களை பரிமாறிக்கொண்டு, புதிய வர்த்தக வாய்ப்புகளை கண்டறிந்து, புதிய வேலைவாய்ப்பை கண்டறியும் வாய்ப்பு உள்ளன. கல்லூரியை முடித்து வெளியே வந்தவர்கள், இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட் அப்பில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். வலைப்பின்னல் செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகளை கண்டறியலாம்.

யுவர்ஸ்டோரி குழு

ஆண்டுதோறும் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமான நடத்த யுவர்ஸ்டோரி குழு கடுமையாக உழைக்கிறது. ஒரே கூரையின் கீழ் சிறந்தவற்றை கொண்டு வர ஈடுபாடு மற்றும் நேசத்துடன் உழைக்கிறோம். இந்த குழுவை முழுவதும் சந்திப்பதற்கான வாய்ப்பு இது. எங்கள் குழுவை சந்தித்து, மேலும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கதைகள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

நிகழ்ச்சி நெருங்கும் நிலையில் யுவர்ஸ்டோரி அலுவலகம் துடிப்பாக இருக்கிறது. பின்னணியில் என்ன நடக்கிறது என அறிய வேண்டுமா? முதல் தளத்தில் நிறைய செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

டெக் 30 கோரிக்கைகள் நிகழ்கின்றன. அறிக்கைகள் தயாராகிவிட்டன. பேச்சாளர்களும் தயாராக உள்ளனர். உங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்க காத்திருக்கிறோம். அதுவரை எங்கள் குழுவிடம் இருந்து அன்பு வணக்கங்கள்.

டெக்ஸ்பார்க்ஸ் 2018 ல் உங்களை பார்க்கலாம்.

அக்டோபர் 5 மற்றும் 6 ல் நிகழும் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சிக்கு பதிவு செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். இல்லை எனில் உங்கள் டிக்கெட் மற்றும் கண்காட்சி இடத்தை 40 சதவீத தள்ளுபடியில் பதிவு செய்யலாம்.

உங்கள் இடத்தை பதிவு செய்யவும்! (’TS40LB’ எனும் கூப்பனை தள்ளுப்படிக்காக பயன்படுத்தவும்)

தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL