ஏதர் நிறுவனம் வழங்கும் முதல் 'மேட் இன் இந்தியா' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

0

எலக்ட்ரிக் டூ-வீலர் தொழில் முனைவு நிறுவனமான ஏதர் எனர்ஜி, தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை ஏதர் எஸ் 340 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களான தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் இந்த கம்பெனி கடந்த 2013 இல் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்கை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வந்தது.

போக்குவரத்து துறையில் நிலையாக பயன்படுத்தும் ஆற்றலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. “எலக்டிரிக் பைக்குகளுக்கு தவிர்க்க இயலாத எதிர்காலம் உள்ளது,” என கூறுகிறார் இந்த கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமை செயல் அதிகாரியுமான தருண் மேத்தா.

ஆதர் பைக்குடன் அதன் நிறுவனர்கள் 
ஆதர் பைக்குடன் அதன் நிறுவனர்கள் 

ஆட்டோமொபைல் துறையில், தரவுகளையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வலுவான பைக்காக ஏதர் 340 ஐயை உருவாக்க 3 வருடங்கள் வரை ஆகியுள்ளது.

இந்த ஏதர் எஸ் 340 பைக்கில் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. கூடவே டச் ஸ்க்ரீன் உள்ள டேஸ்போர்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த கனமுள்ள இதன் அடிப்பீடம், மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள டேஸ் போர்டின் உதவியுடன், இதனை பயன்படுத்துபவர்கள், ப்ரோபைல்களை மாற்றி கொள்ள முடியும். அத்துடன், தனக்கு தேவையான ஓட்டும் முறைகளை தேர்வு செய்து கொள்வதுடன் தேவையான ஓட்டும் முறைகளை மாற்றி அமைத்து கொள்ளவும் முடியும்.

ஒரு மணிநேரத்திற்குள் 80% இந்த பைக் சார்ஜ் ஆகிவிடுகிறது. இதில் உள்ள டச் ஸ்க்ரீனில் வேக்கில்ஸ் கண்ட்ரோல் யூனிட் ஒன்று உள்ளது. இது பைக்கை ஓட்டும் தன்மையை கண்காணிப்பதுடன், ஜிபிஎஸ் முறைகளையும், இருக்கும் சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் செல்லலாம் என்பதையும் தெரியப்படுத்துகிறது.

ஆதர் எஸ்340 
ஆதர் எஸ்340 

இதில் கட்டமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து தருண் மேத்தா கூறுகையில், இதில் உள்ள வசதிகள் பிற வாகனங்களில் இல்லை. இதில் உள்ள வரைபடம், குறிப்பிட்ட சென்று சேர வேண்டிய இடத்தை எவ்வளவு நேரத்தில் சென்று சேரலாம் என கூறுவதோடு மட்டுமல்லாமல், சாலையின் நிலை எப்படி இருக்கிறது என்றும் சொல்லிவிடுகிறது. அவைகள், போகும் வழியில் உள்ள தரவுகளையும், சார்ஜ் ஏற்றும் இடங்களை பற்றியும், குறிப்பிட்ட இடத்தை எவ்வளவு நேரத்தில் சென்று சேர்ந்தது என்பதையும் சேமித்து வைத்து விடுகின்றன. அவற்றை பின்னர் பயன்படுத்திக் கொண்டுவிட முடியும்.

இந்த பைக்கில் உள்ள சில சிறப்பம்சங்கள்.

• 24 மணிநேரமும் செயல்படும் டச் ஸ்க்ரீன் டேஸ் போர்ட்

• வழிகாட்டும் கருவிகள்

• ஒருமுறை சார்ஜ் செய்தாலே 60 கிலோமீட்டர் செல்லும் வசதி

• ஒரு மணி நேரத்தில் 80% சார்ஜ் ஏறுதல்

• அதிகபட்ச வேகம் 72 கிலோமீட்டர்

• 15 விதமான பயன்பாடுகள்

• ஆன்லைனில் மட்டுமே விற்பனை

• வீட்டில் நேரடியாகவே டெலிவரி மற்றும் சர்வீஸ்

• கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உற்பத்தி

ஆதர் டேஸ் போர்ட் 
ஆதர் டேஸ் போர்ட் 
“பெரும்பாலான சூழல்களில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே வண்டியை பழுது பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இதில் உள்ள பராமரிப்புக்கான முன்னறிவிப்பு முறை மூலம், பைக்கின் உடைமையாளர், ஏதேனும் பழுது ஏற்படுவதற்கு முன்னரே, வண்டியை சரி செய்து கொள்ள முடியும்.” என்றார் தருண் மேத்தா.

ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலுடன், மேடல் நிறுவன சிஇஓ ராஜூ வெங்கட்ராமனும், டைகர் க்ளோபல் நிறுவனமும் இந்த ஏதர் கம்பெனியில் முதலீடு செய்துள்ளன. டைகர் க்ளோபல் நிறுவனம் கடந்த மே 2015 இல் 12 மில்லியன் டாலர் இதில் முதலீடு செய்துள்ளது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

அப்துல் கலீம் - ஜனாதிபதி விருது பெற்ற கண்டுபிடிப்பாளர்

பைக், கார் பழுதடைந்து நின்று விட்டதா? 'GoBumpr' செயலி மூலம் மெக்கானிக்கை உடனே அழையுங்கள்!