நட்பை கொண்டாட ‘Snapchat’ அறிமுகப்படுத்தி இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்கள்! 

0

தினசரி உறவுகளையும், நட்புகளையும் நலம் விசாரிக்க நேரமில்லாத நாமெல்லாம் கூட, வாட்ஸ் அப், ஸ்நாப்சேட் போன்ற செயலிகளால் அவர்களின் வாழ்வில் பங்கேற்கவும், அவர்களுடைய தனிமையை போக்கவும் முடிகிறது. இந்த அனுபவத்தை மேலும் சிறப்பாக்க ஸ்நாப்சேட் ‘ ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்’ எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்
ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்
ஸ்நாப்சேட் பயனர்கள் தங்களுடைய நண்பர்களுடனோ, அல்லது நண்பர் குழுவிடனோ பகிர்ந்திருக்கும் படங்கள், வீடியோக்கள், செய்திகள், லிங்க்குகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்படுவதே ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்கள். நீங்கள் உங்களுடைய லொகேஷனை பகிர்ந்திருந்தால், அதுவும் கூட இதில் சேர்க்கப்படும்.

பொதுவெளியில் மட்டுமே இதுபோன்ற விவரங்களை பதிவிட முடியும் எனும் பிற சமூக வலைதளங்கள் போல அல்லாமல், ‘ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்கள்’ வழியே தனிப்பட்ட பயனருக்கு மட்டும் இதை முன்னிலைப்படுத்தி காட்டுகிறது ஸ்நாப்சேட். எவ்வளவு அதிகம் ஸ்நாப்சேட் வழியே பகிர்கிறீர்களோ, அவ்வளவு செழிப்பானதாக உங்கள் ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்கள் காட்சியளிக்கும். 

ஸ்நாப்சேட் பயன்படுத்த தொடங்கிய காலத்தில் இருந்து, எந்தெந்த முக்கியமான செய்திகளை நண்பர்களுடம் பகிர்ந்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள எளிதான, வேகமான வழியாக ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்கள் இருக்கும். அதுவும், ஒவ்வொரு ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைலும் தனித்துவம் வாய்ந்ததாகவும், நீங்கள் பகிர்ந்து கொண்ட முக்கிய தருணங்களை முன்னிலைப்படுத்துபவையாகவும் இருக்கும்.

உங்கள் நண்பரின் பிட்மோஜியை க்ளிக் செய்தாலே உங்கள் ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல் தெரியும். கூடவே, நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து காட்சியளிக்கு காமிக் ஸ்ட்ரிப்களை காட்ட பிட்மோஜி ஸ்டோரிஸ் எனும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடக்கக் காலத்தில் இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
பிட்மோஜி ஸ்டோரிக்கள்
பிட்மோஜி ஸ்டோரிக்கள்
“ஸ்நாப்சேட்டில் நட்பை கொண்டாட ஒரு புது வழியை அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஃப்ரெண்ட்ஷிப் ப்ரொஃபைல்ஸ் உங்கள் உறவுகளை எல்லாம் தனிப்பட்ட முறையில் கொண்டாடுகிறது. இன்னும் சில வார காலங்களில் உலகம் முழுவதுமே ஸ்நாப்சேட்டில் இந்த வசதி வந்துவிடும்,” என ஸ்நாப்சாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 

கட்டுரையாளர்- ஸ்னேஹா

Related Stories

Stories by YS TEAM TAMIL