வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த மனைவிகளின் வாழ்க்கைக் கதைகளை புத்தகமாக வெளியிட்ட பெண்கள்!

பல ஆண்டுகளாக உருவாக்கிய வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு கணவரின் பணி காரணமாக புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்ற மனைவிமார்கள் தங்களுக்கான வழியை கண்டறிந்தது எப்படி?

0

வாழ்க்கைத் துணைக்கு வெளிநாடுகளில் பணி நியமிக்கப்படும்போது உடன் செல்ல நேரும் கணவன் / மனைவி ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்கிறது. சில கணவன்மார்கள் மனைவியின் பணிமாற்றல் காரணமாக மனைவியுடன் வெளி நாடுகளுக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனினும் கணவரின் பணி காரணமாக அவருடன் மனைவி வெளிநாடுகளுக்குச் செல்ல நேரும் சூழலே அதிகம் காணப்படுகிறது.

சுஷ்மிதா மொஹபத்ரா மற்றும் சவீதா வேணுகோபால் இருவரும் ஜர்னலிஸ்ட். அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் அதிக அனுபவமிக்கவர்கள். இவர்கள் இருவரும் தத்தமது கணவர்களின் பணி காரணமாக சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தனர். அந்த நாட்டில் அவர்களுக்கென தனிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டனர்.

சவிதா வேணுகோபால் மற்றும் சுஷ்மிதா 
சவிதா வேணுகோபால் மற்றும் சுஷ்மிதா 

தங்கள் கணவருடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த 10 பெண்களின் கதைகளைத் தொகுத்து ’டியர் மிஸ் எக்ஸ்பாட்’ 'Dear Ms Expat', என்கிற பெயரில் புத்தகம் ஒன்றை இருவரும் வெளியிட்டனர். அந்த பத்து பெண்கள் எதிர்கொண்ட சவால்கள் மட்டுமல்லாது அவர்களது சாதனைகளும் இதில் கொண்டாடப்பட்டது.

புதிய சூழலுக்கு மாற்றலான இந்தப் பெண்கள் புதிய நாட்டில் தங்களது புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள கடுமையாக உழைத்தனர். சவீதா கூறுகையில்,

”கணவர்/மனைவியின் பாதையில் பின்தொடர்வதில் உள்ள நன்மை என்னவென்றால் அவர்களது வாழ்க்கைப்பாதையில் நீங்கள் பயணித்து புதிய கலாச்சாரத்தை அணுகி, அவர்களது உணவை சுவைத்து சுவாரஸ்யமான இடங்களுக்குச் செல்லலாம்.”

தொலைதூரப் பயணம்

இதில் பல தீமைகளும் உள்ளன. துவக்கத்திலிருந்து உங்களது வாழ்க்கையை மறுபடி துவங்கவேண்டும். சில நேரங்களில் இது நடக்காமலும் போகலாம். புதிய நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். புதிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். உற்சாகமின்மையும் அலுப்பும்கூட ஏற்படலாம். சிங்கப்பூர் போலல்லாமல் சில நாடுகள் பாதுகாப்பின்றியும் இருக்கும். அவர்கள் பிறநாட்டவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழல்களில் சவால்கள் மிகவும் கடினமானதாக இருக்கும். இதை ஒப்புக்கொண்ட சுஷ்மிதா, 

“எங்களைக் கவர்ந்த பெண்களில் ஒருவரும் வழக்கறிஞருமான மனாலே, சிங்கப்பூரில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தார். தனிப்பட்ட முறையில் நான் ஜகார்தா மற்றும் பேங்காக்கில் வசித்துள்ளேன். ஆனால் பணிக்குச் செல்லும் ஒரு அம்மாவாக சிங்கப்பூரில் எனது சொந்த வென்சரை அமைத்தேன். சிங்கப்பூரில் உள்ள ஆதரவான கட்டமைப்பு வசதிகள் காரணமாக இதை எளிதாக செய்ய முடிந்தது,” என்றார்.

மற்ற குடும்ப உறுப்பினர்கள் இல்லாததும் அதன் காரணமான தனிமையுமே கணவன்/மனைவியின் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் துணை சந்திக்கும் முதல் சவாலாகும். சவீதா விவரிக்கையில், 

“நிலைமை எவ்வாறு மோசமாகும் என்பதைப் புரிந்துகொள்ள தீபாஸ்ரீயின் கதை நமக்கு உதவும். இந்தியாவில் சிறப்பாக ஈடுபட்டு வந்த தனது பணி வாழ்க்கையை விட்டுவிட்டு கணவருக்காக சிங்கப்பூருக்கு மாற்றலானார். சிங்கப்பூரில் நல்ல பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. விரைவில் அவரது திருமண வாழ்க்கையும் பிளவுபட்டு விவாகரத்து வரை சென்றது. இருந்தும் அவர் சிங்கப்பூரிலேயே தங்கி தன் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டார்.”

பெரும்பாலும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக கணவருடன் வெளிநாடுகளில் வசிக்கச் செல்லும் மனைவிக்கு புதிய நாட்டில் வேலை கிடைப்பது கடினமாக இருக்கும். ட்ரம்பால் அமெரிக்காவில் இருக்கும் பல பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். தகுதியான ஒரு பெண் தனது பணி வாழ்க்கையை நிறுத்த நேரிட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார். அத்துடன் சுய மரியாதையும் பாதிக்கப்படும்.

தொடர்ந்து சுஷ்மிதா கூறுகையில், “ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையையும் நாம் குறிப்பிடவேண்டும். எங்களது ஆசிரியரும் வெளியீட்டாளரும் நகைச்சுவையாக ஒரு கருத்தை கூறுவார்கள். அதற்கு மிஸ்டர் எக்ஸ்பாட் என்று பெயரிடலாம் என்பார்கள். இதில் ஏஞ்சலினா க்ராஸ்-ஓகுமா குறித்து கூறப்படுகிறது. இவரது கணவர் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பதாகவும் அவர் பணிபுரிந்து பயணங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடுவார்கள். எனவே மனைவியின் பணி வாழ்க்கை பாழாகக்கூடாது என்கிற எண்ணத்தில் தியாகம் செய்யும் ஆண்களும் உள்ளனர்.”

வாழ்க்கை சாகசம் நிறைந்தது

வாழ்க்கைத்துணையுடன் புதிய பகுதிக்கு மாற்றலாக இருக்கும் மனைவி இந்த மாற்றத்தை திறந்த மனதுடன் தழுவிக்கொள்ளவேண்டும். சவீதா கூறிகையில்,

நாடு, அதன் கலாச்சாரம், பணி இவற்றை குறித்து அதிகம் ஆராயுங்கள். நீங்கள் அங்கு சென்றடையும்போது பல தெரியாத விஷயங்கள் இருக்கப்போகின்றன. இந்த ஆய்வு உங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவும்.

இன்றைய காலகட்டத்தில் ஒரே மாதிரியான ஆர்வம் கொண்டவர்களுடனான சந்திப்புகள், காஃபி செஷன்கள் போன்றவை ஆன்லைன் க்ரூப்களில் திட்டமிடப்படுகிறது. சுஷ்மிதா அறிவுரை வழங்குகையில், “உங்களது கணவன்/மனைவியின் உடன் பணிபுரிவோர் ஏற்கெனவே அங்கு இருக்கலாம். இதனால் அந்த சூழல் உங்களைக் காட்டிலும் அவருக்கு பழக்கப்பட்ட இடமாக இருக்கலாம். எனவே இந்த ஆலோசனை ஒரு விதமான தெரபி போல இருந்தாலும் சூழலை புரிந்துகொண்டு நீங்கள் அங்கு செல்வதற்கு முன்பு உங்களது கணவன்/மனைவியுடன் வெளிப்படையாக இது குறித்து பேசுவதே சிறந்த யோசனையாகும். இப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் உணர்வுப்பூர்வமாக தயார் நிலையில் இருக்கவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்