1.3 லட்சம் இந்திய டெவலப்பர்கள், மாணவர்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் திறன் பெற கூகுள் உதவித்தொகை! 

இந்தியாவில் தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்க ப்ளூரல்சைட் மற்றும் உடாசிட்டியுடன் இணைந்துள்ளது கூகுள்.

0

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண்டிராய்டு ஸ்கில்லிங் மற்றும் சர்டிஃபிகேஷன் ப்ரோக்ராமை கூகுள் அறிவித்தது. ஆண்டிராய்ட் டெவலப்மெண்ட்டில் 2 மில்லியன் இந்திய டெவலப்பர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் பயிற்சியளிப்பதற்காக இந்த ப்ரோக்ராமில் அறிவிக்கப்பட்டது.

ஒரு வருடம் ஐந்து மாதங்களில் தொழில்நுட்ப கற்றல் தளமான ப்ளூரல்சைட் (Pluralsight) மற்றும் ஆன்லைன் கல்வி நிறுவனமான உடாசிட்டி (Udacity) ஆகிய இரு நிறுவனங்களுடன் கூகுள் புதிய படிப்புதவித்தொகை திட்டத்திற்காக இணைந்துள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனமான கூகுள் இந்த முயற்சியை 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி புது டெல்லியில் வெளியிட்டது. இத்திட்டத்தில் 1.3 லட்சம் டெவலப்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மொபைல் மற்றும் வெப் டெவலப்மெண்ட், இயந்திரக் கற்றல், AR/VR, செயற்கை நுண்ணறிவு, க்ளௌட் தளங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியளிக்கப்படும்.

இந்த புதிய படிப்புதவித்தொகை திட்டமானது கூகுளின் ஆண்டிராய்ட் ஸ்கில்லிங் ப்ரோக்ராமின் நீட்டிப்பு முயற்சியாகும்.

இந்த கூட்டு முயற்சியில் ப்ளூரல்சைட் தொழில்நுட்ப கற்றல் தளத்தில் 1,00,000 படிப்புதவித்தொகையும் மேம்பட்ட கற்றல் பாடதிட்டத்தைப் பெற்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு டெவலப்பர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள Udacity-க்கு 30,000 படிப்புதவித்தொகையையும் கூகுள் வழங்குகிறது.

Nasscomm தலைவர் ஆர் சந்திரசேகர் கூறுகையில், “திறன்களை புதுப்பித்துக்கொள்வதற்கான தேவை இருப்பதை அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒப்புக்கொள்கின்றன. இந்தத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள பல நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்துகொண்டு வருகின்றன. 

கூகுளின் இந்த படிப்புதவித்தொகை திட்டம் மூலம் இந்தியாவிலுள்ள பல தகவல் தொழில்நுட்ப ப்ரொஃபஷனல்கள் அனைத்து துறைகளிலும் மேம்பட்ட பாடதிட்டங்களை இந்த திட்டத்தின்கீழ் எடுத்துக்கொண்டு திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.”

டெவலப்பர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் திறன்களை பெறுவதற்கு கூகுள் எவ்வாறு திட்டமிடுகிறது?

கூகுள் உடாசிட்டிக்கு வழங்கும் 30,000 படிப்புதவித்தொகையில் 1,000 டெவலப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முழுமையான நானோடிகிரி படிப்புதவித்தொகையும் வழங்கப்படும். இதில் மிகக்குறைவான கட்டணத்துடன் திறன் வழங்கப்பட்டு கட்டாய பணி வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விருப்பமுள்ளவர்கள் ப்ளூரல்சைட் IQ-ஐ அணுகி சமீபத்திய தொழில்நுட்பத்தில் தங்களது திறன்களை ஐந்து நிமிடங்களில் மதிப்பிட்டுக்கொள்ளலாம்.

கூகுளின் இந்தியாவிற்கான டெவலப்பர் ப்ராடக்ட்ஸ் க்ரூப் மற்றும் ஸ்கில்லிங் லீட் வில்லியம் ஃப்ளாரன்ஸ் இந்த புதிய திறன் வழங்கும் முயற்சி இந்தியாவில் தொழில்நுட்பப் பிரிவில் மாற்றம் ஏற்பட உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

”கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் வாயிலாக அரை மில்லியன் மாணவர்கள் மற்றும் டெவலப்பர்களை சென்றடைந்துள்ளோம். இந்தியாவில் திறன் வழங்கும் முயற்சிகளை அறிவித்தது முதல் 2,10,000 மாணவர்கள் கூகுள் உருவாக்கிய பாடங்களை உடாசிட்டி வாயிலாக முடித்துள்ளனர். மேலும் 1,17,000 மாணவர்கள் இந்த வருடம் பாடதிட்டத்தை முடிக்கின்றனர். அத்துடன் மாணவர்கள் மற்றும் டெவலப்பர்கள் மாறிவரும் தொழில்நுட்பப் பிரிவில் வெற்றிகரமாக செயல்படத் தேவையான திறன்களைப் பெறுவதை இந்த படிப்புதவித்தொகை திட்டம் எளிதாக்கும்,” என்றார்.

டெவலப்பர்களுக்கு உதவ ப்ளூரல்சைட் மற்றும் உடாசிட்டியின் முயற்சிகள்

ப்ளூரல்சைட் ஏற்கெனவே 150-க்கும் அதிகமான நாடுகளில் கற்போருக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த தொழில்நுட்ப கற்றல் தளம் கூகுள் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவிலுள்ள டெவலப்பர்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

ப்ளூரல்சைட், Country Head மற்றும் பொது மேலாளர் அருண் ராஜாமணி குறிப்பிடுகையில், “இந்தியாவின் தொழில்நுட்ப பணியாளர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர். வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டலில் இயங்கும் உலகில் மதிப்பை கூட்டிக்கொள்ள புதிய சுற்றுச்சூழலுக்கான தொழில்நுட்ப திறன்களை கற்றுவருகின்றனர். இந்தியாவிலும் உலகம் முழுவதும் இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்துகிறது ப்ளூரல்சைட். இந்தியா முழுவதுமுள்ள டெவலப்பர்கள் தங்களது திறன் நிலையை ப்ளூரல்சைட் IQ-வை பயன்படுத்தி புரிந்துகொள்ளவும் ஆண்டிராய்ட் டெவலப்பர், மொபைல் வெப் ஸ்பெஷலிஸ்ட், க்ளௌட் ஆர்கிடெக்ட், டேட்டா என்ஜினியர் ஆகிய நான்கு முக்கிய பகுதியில் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் கூகுள் உடனான இந்த இணைப்பு உதவும் என்பதால் உற்சாகத்துடன் இருக்கிறோம்.

2016-ம் ஆண்டில் 13,000 மாணவர்கள் நானோடிகிரிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் 900 பேருக்கு இதுவரை பணி கிடைத்துள்ளதாகவும் உடாசிட்டி தெரிவித்தது. இன்ஃபோசிஸ் போன்ற இந்திய தொழில்நுட்ப ஜாம்பவான்களும் தங்களது ஊழியர்களுக்கு திறன் வழங்க உடாசிட்டியுடன் இணைந்துள்ளனர்.

கூகுளின் இந்தியாவிற்காக திறன் வழங்கும் முயற்சியின் முதல் 1,000 மாணவர்களுக்கு கூடுதலாக அதன் மொபைல் மற்றும் வெப் டெவலப்பர் நானோடிகிரி திட்டத்திற்கான 6 மாத படிப்புதவித்தொகை கிடைக்கும் என்று இந்த ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனம் தெரிவித்தது. இதில் ஆலோசனை, சமூக ஆதரவு மற்றும் நிபுணர்களின் திட்ட ஆய்வு ஆகியவையும் அடங்கும்.

உடாசிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இஷான் குப்தா கூறுகையில், “இளைஞர்கள் இன்றைய பணிச்சூழலின் தேவைகளுக்கும் வருங்கால பணிச்சூழலின் தேவைகளுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக அனைவருக்கும் கல்வி வழங்கவேண்டும் என்பதை நோக்கிய மிகப்பெரிய நகர்வுதான் கூகுளுடனான இணைப்பு. இந்த படிப்புதவித்தொகை திட்டத்துடன் மாணவர்கள் வெப் மற்றும் மொபைல் டெவலப்மெண்ட் திறன்களை உடாசிட்டி மற்றும் கூகுளைச் சேர்ந்த நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நிபுணத்துவம் பெறலாம். இந்த படிப்புதவித்தொகை திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் எங்களது வெப் மற்றும் மொபைல் டெவலப்மெண்ட் கோர்ஸ்களை இலவசமாக பெறலாம். அத்துடன் வழிகாட்டுதலும் சமூக ஆதரவும் கிடைக்கும்.”

ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன்