முற்றிலும் தமிழில் நிகழ்ந்த ’Fintech Nxt’ நிதி-தொழில்நுட்பச் சந்திப்பு!

2

Fintech Nxt-ன் ஆகஸ்ட் மாத சந்திப்பு கடந்த சனிக்கிழமை எம்.ஐ.டி சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சந்திப்பின் மிக முக்கியமான அம்சம்; விழா முழுவதும் தமிழிலே நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் முக்கிய கரு 'ப்ளாக்செயின் மற்றும் பிட்காயின்ஸ்’ (Blockchain and Bitcoins). தற்போதிய பொருளாதார சூழ்நிலையில் ’Blockchain தொழில்நுட்பம்’ சூடான விவாதமாக இருக்கிறது. அது எப்படி ஒரு தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்துகிறது? நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான பிரதான நிஜ உலக பயன்பாடுகளை உருவாக்க Blockchain தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு கையாளலாம்? போன்ற கேள்வி மற்றும் அதை தொடர்ந்து Bitcoins வாங்குவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன? அது முதலீடு செய்யக் கூடியதா? இந்த கேள்விகளுக்கு பதில் காணும் விதமாகவே இந்த சந்திப்பு அமைந்தது.

இந்த சந்திப்பிற்கு 60-க்கும் மேற்பட்ட Blockchain மற்றும் bitcoin ஆர்வலர்கள், முக்கியமான துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை தலைவர்கள், ஆர்வலர்கள், தொழில் முனைவோர், நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனம், நிறுவன தொழில்நுட்ப நிர்வாகிகள் பிரதிநிதிகள் என்று நிதித் துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:

இந்த ஆகஸ்ட் சந்திப்பு இரண்டு அமருவுகளாக நடைப்பெற்றது. முதல் அமர்வு, குழு விவாதம்; இங்கு blockchain தொழில்முனைவு பற்றி நிபுணர்கள் அலசி ஆராய்ந்தனர். இது பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து அவர்களை நிகழ்ச்சியோடு ஒன்றிணைத்தது. 

இளங்கோ ராஜதுரை (Equitas சிறிய நிதி வங்கியின் துணைத்தலைவர்), சரவணா குமார் மலைச்சாமி (Smartchainers நிறுவனர்), சதீஷ் சால்வதி (இண்டலிடிக்ஸ் தீர்வுகள் தனியார் லிமிட்டெட் நிறுவனர் மற்றும் இயக்குனர்) மற்றும் மணி பார்த்தசாரதி (ஹேபைல் டெக்னாலஜியின் இணை நிறுவனர்) ஆகியோர் இந்த குழு விவாதத்தில் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது பார்வையாளர்கள் பலர் கேள்வி எழுப்பி அவர்களின் சந்தேகங்களை தீர்த்து கொண்டனர்.

விக்மி மாதும்பாய் (Tarka Labs இன் சி.டி.ஓ) வின் பேச்சு பங்கேற்பாளர்களுக்கு கடந்தகால, தற்போதைய மற்றும் Bitcoin-ன் வருங்காலத்தின் விழிப்புணர்வை கொடுத்தது. மேலும் சாதாரண மனிதனின் பார்வையிலும் பிட்காயினைப் பற்றி விவரித்தார்.

நிகழ்ச்சியின் முக்கியக் கூறு:

Blockchain தொழில்நுட்பம் பிட்காயினின் பாதுகாப்பான இருப்பை எளிதாக்கும் ஒரு தொழில்நுட்பமாக அமைகிறது. சமன்பாட்டில் இருந்து மூன்றாம் அல்லது இடைத்தரகர்களை அகற்ற வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணமாக Blockchain உருவக்கப்பட்டது. உலகம் மற்றும் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு, தொழில்நுட்பத்திற்கு சாத்தியமான ஒரு அச்சுறுத்தல் என blockchain தொழில்நுட்பத்தைப் பார்க்க வேண்டாம் என்று விளக்கப்பட்டது.

மேலும் ப்ளாக்செயின் மாற்றுத்திறன் அம்சம் ஒரு வேட்பாளரின் சுயவிவரத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க மனிதவள மேம்பாட்டு (HR) துறையில் பயனுள்ளதாக அமையும்.

அதேப்போல் Bitcoins-ல் முதலீடு செய்யும் முன் அதைப் பற்றி நன்கு தெரிந்து இருக்க வேண்டும் போன்ற blockchain மற்றும் bitcoins நன்மை மற்றும் தீமையை இந்நிகழ்ச்சியில் பேசினர்.

பாரதியார் கவிதையில் தொடங்கி திருக்குறளில் இந்நிகழ்ச்சி முடிந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது Fintech Nxt-ஐ சேர்ந்த சிவசங்கர். Blokchain மற்றும் Bitcoin-ல் நடைமுறை அனுபவம் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் குழுவினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வலு சேர்த்தனர்.