நெல் வைக்கோலில் இருந்து மக்கும் தட்டுகள் தயாரிக்கும் மாணவர்கள்!

ஐஐடி டெல்லியின் கீழ் வரும் ’க்ரியா லாப்ஸ்’, அரிசி வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை கூழாக மாற்ற செயலாக்க தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

0

இங்கு நம் ஊரில் காற்று மாசுப்பாடு மிக அதிகமாகவே இருக்கிறது, அதற்கு பல காரணங்களும் இருக்கிறது. இதில் முக்கிய மற்றும் நாம் நினைத்தால் கட்டுப்படுத்தக்கூடிய காரனம் நெல் வைக்கோல் எரிப்பு மாசுப்பாடு; இதன் மூலம் ஏற்படும் மாசை குறைக்க, ஐஐடி டெல்லியின் கீழ் வரும் ’க்ரியா லாப்ஸ்’, அரிசி வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை கூழாக மாற்ற செயலாக்க தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

கூழாக மாற்றிய வேளாண் கழிவுகளை, தட்டுகள், கப்புகள் போன்ற மக்கும் பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தகின்றனர். இது குறித்து க்ரியா லாப்ஸ் வலைதளம்,

“ஏற்கனவே சந்தையில் இருக்கும் கூழ் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் போல இந்த தயாரிப்புக்கு அதிக இடமும் செலவினைகளும் தேவை இல்லை. சிறிய இடத்தில் சிக்கனமாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். கூடுதலாக, இந்த செயல்முறைக்குத் தயாரிக்கப்பட்ட கரைப்பான் அமைப்பு முற்றிலும் இயற்கையான தயாரிப்புகளால் தயாரிக்கப்பட்ட மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய, முற்றிலும் பாதுகாப்பான தயாரிப்பு ஆகும்,” என குறிப்பிட்டுள்ளது.

இந்த ப்ராஜக்ட்டை தலைமை எடுத்து நடத்தும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் ஆசரியர் நீத்து சிங்க் இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிக பயன்பாட்டை தரும் என்கிறார்.

“வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப் படும் கூழ்கள், ஒரு கிலோ 45 ரூபாய் வரை விற்கப்படும். இதனால் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக கூழாக மாற்றி விற்பனை செய்யலாம். ஒரு டன் வேளாண் மறுசுழற்சி இயந்திரம் ரூ. 35 லட்சம் வரை ஆகும்,” என்கிறார் அவர், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்தப் பேட்டியில்.

கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் தட்டுகள், கப்புகளை நேரடியாக சந்தையில் விற்கவே முதலில் முயன்றனர் ஆனால் அது கணிசமான தாக்கத்தை மற்றுமே ஏற்படுத்தும் என்பதால் இந்த தொழில்நுட்பத்தை அரசாங்கத்திற்கும் பெருநிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஓரளவு மாசை கட்டுப்படுத்த முடியும் என்றும் இது பல இடங்களுக்கு பரவும் எனவும் இக்குழு நம்புகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியில் அதிகமாக எரிக்கப்படும் இந்த கழிவுப் பொருட்கள் காற்றை மாசுப்படுத்துகிறது. நாம் உருவாக்கிய இந்த செயல்முறை விவசாயிகள் இலாபம் சம்பாதிக்க உதவுவதோடு மாசை குறைக்கவும் உதவும் என்கின்றனர்.

இரண்டு வருடத்திற்குள் குறைந்தது 20 இயந்திரங்களை சந்தையில் நுழைத்துவிட வேண்டும் என்றும் 5 வருடத்திற்குள் மற்ற மாநிலங்களை தொட்டுவிட வேண்டும் என்ற இலக்கில் வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது க்ரியா லாப்ஸ்.

தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் 

Related Stories

Stories by YS TEAM TAMIL