ஹாலிவுட் இயக்குனர் சோஹன் ராய் இன் முயற்சி ’Indywood’- சினிமா பத்திரிகையாளர்களுக்கு விருதுகள்! 

1

சென்னையில் நேற்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இண்டிவுட் ஃபிலிம் கார்னிவலின் மூன்றாவது எடிஷனின் அறிமுகம் குறித்து அறிவித்தார் இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் நிறுவன இயக்குனர் ஸ்ரீ சோஹன் ராய். 2D எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இச்சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 2017-ல் டிசம்பர் 1 முதல் 4 வரை இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான யுக்தியை விடுத்து ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் மொழியியலுக்கு புலம்பெயர்ந்து இண்டிவுட் ஃபிலிம் கார்னிவலின் மூன்றாவது எடிஷன், தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்க பிரம்மாண்டமாக நடைப்பெறும் என்று சோஹன் ராய் தெரிவித்தார். 

இவ்விழாவில் சினிமாத்துறை திறமைகள் கொண்டாடப்படுவதுடன் தனித்தன்மை வாய்ந்த அமர்வுகள், சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்ளுடன் சுவாரஸ்யமான சந்திப்புகள், அற்புதமான திரைப்பட வர்த்தகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள், ஒருங்கிணைப்பு அமர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவை அடங்கியிருக்கும். மேலும் நிகழ்ச்சியில் திரைப்படத் துறை சார்ந்த சிறப்பு நாடு காட்சிக்கூடங்கள், சர்வதேச சந்தையில் பிராந்திய திரைப்படங்களின் தேவையை அதிகரிக்கும் விதத்தில் பிராந்திய காட்சிக்கூடங்கள் ஆகியவை இடம்பெறும். 

இண்டிவுட் ’டேலண்ட் ஹண்ட்’ என்ற நட்சத்தர அந்தஸ்துக்கான தேடல் போட்டி நடைப்பெறும். இதில் திறமையான கலைஞர்களை 21 வெவ்வேறு பிரிவுகளில் மதிப்பிடப்படுவார்கள். பொழுதுபோக்கு, போட்டி மற்றும் கற்றல் ஆகியவை நிறைந்த இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது கனவை உணரச் செய்யும் வகையில் இருக்கும் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து மதிப்புமிக்க இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருதுகள் – சென்னை சாப்டர் நடைப்பெற்றது. திரைப்படத் துறைக்கு பங்களித்த அச்சு மற்றும் ஆன்லைன் ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சினிமா துறையில்  தனிநபரின் பங்கு, சாதனையில் சந்தித்த சவால்கள், நீண்ட நாள் சாதனைகள் மற்றும் அவர்களால் கையாளப்பட்ட ப்ராஜெக்ட்டின் விளைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வாழ்நாள் சாதனை விருது பிரிவும் இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருது – சென்னை சாப்டர் வழங்கியது. 

சினிமாத் துறையினரை சமூகத்திற்கு வெளிச்சம் காட்டியவர்களையும், இத்துதுறையை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு தங்களை வடிவமைத்துக் கொண்டு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர்களையும் கொண்டாடுவதே இந்த விருதின் நோக்கமாகும். 

இந்த சிறப்பு அங்கீகாரம் சினிமா விமர்சகர் மற்றும் தி ஹிந்து இணை ஆசிரியர் பரத்வாஜ் ரங்கன் மற்றும் பத்திரிக்கையாளர் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

அதேப்போல் சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக செயல்படும் விளம்பரதாரர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியான நிகில் முருகன் மற்றும் பகுதி நேர மக்கள் தொடர்பு அதிகாரியான டயமண்ட் பாபு ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருது – சென்னை சாப்டர் மற்ற விருதுகள் டெக்கான் க்ரானிக்கல் திரைப்பட பத்திரிக்கையாளர் ஜனனி, ஆனந்த விகடன் பி ஜான்சன், தி ஹிந்து சினிமா நிருபர் எசக்கி முத்து, பகுதிநேர எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையாளர் லதா ஸ்ரீநிவாசன், தினமலர் நிருபர் மற்றும் போட்டோகிராஃபர் சந்திரசேகர் எஸ், நியூஸ் டுடே பரத் குமார், தினகரன் சினிமா நிருபர் தேவ்ராஜ் யோகி, டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரதான நிருபர் எம் சுகந்த், குங்குமம் பத்திரிக்கை திரைப்பட நிருபர் கதிர்வேலன் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆசிரியர் சுதிர் ஸ்ரீநிவாசன், சூர்யா டிவி திரைப்பட பத்திரிக்கையாளர் ஆர் ராஜா மற்றும் இந்தியா டுடே துணை ஆசிரியரான கிருபாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

இந்த விருது வழங்கும் விழாவின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் எடிஷன் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி (செப்டம்பர் 24 2016), கோவா ஹோட்டல் ஃபிடால்கோ (நவம்பர் 21, 2016), மற்றும் கர்நாடகா சலன்சித்ரா அகாடமி (ஃபிப்ரவரி 7, 2017) ஆகிய இடங்களில் முறையே நடைபெற்றது.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களின் பாராட்டத்தக்க பணிகளை கௌரவிக்க இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருதுகள் அனைத்து முக்கிய நகரங்களிலும் வழங்கப்படும். 

2000 இந்திய கார்ப்பரேட்கள் மற்றும் மல்டி மில்லியனர்களின் கூட்டமைப்பால் துவங்கப்பட்ட 10 பில்லியன் US டாலர் ப்ராஜெக்டான ’ப்ராஜக்ட் இண்டிவுட்ன்’ பற்றியும் நிகழ்ச்சியில் பகிரப்பட்டது. 

தேசிய அளவிலான இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருதுகள் ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 2017, டிசம்பர் 1-4 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விருது குறித்த மேலும் தகவல்களை Indywood  என்ற தளத்திலும் பெறலாம்.