இந்தியாவின் புதிய மென்மையான ஆற்றல்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம்...

0

நம் தேசம் கடின ஆற்றலால் மட்டும் இயங்கவில்லை. சர்வதேச ரீதியிலான ஆட்சியில் முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான சக்தியை நாம் அணிதிரட்ட வேண்டும். இதை நரேந்திர மோடி மற்றும் சிலர் புரிந்து கொண்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், நாட்டின் சில மென் திறனை வளர்க்கும் முயற்சியில், யோகாவின் சர்வதேசமயமாக்கல், பாலிவுட்டின் அதிசயமான வெளியீட்டை சந்தைப்படுத்துதல், இந்தியாவின் வளமான கட்டிடக்கலை, உணவு அல்லது கலை ஆகியவற்றை பரப்புதல் போன்ற திறனை வெளிப்படுத்தி நாட்டை வளர்ச்சி அடைய செய்தார்.

இந்த செயல்பாடு நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது, சர்வேதேச அளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை அறிய நாம் மோடி ஆதரவாளராக இருக்க தேவையில்லை.

'மென்மையான சக்தி' (Soft Power) என்பது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஜோசப் நேய் உருவாக்கிய கருத்தாகும், இது ஈர்க்கும் திறனை விவரிக்கிறது. கடுமையான ஆற்றல் - ஒரு நாட்டின் இராணுவ அல்லது பொருளாதார வலிமையிலிருந்து வெளியேறும் திறன். ஆனால் நாட்டின் மென்மையான சக்தி, அரசியல் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்து உருவாகிறது.

ஆனால் நாம் ஒரு முக்கிய மென்மையான சக்திக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். மோடி, தொழில் முனைவோர் மற்றும் தொடக்கத் திறன்களின் வலிமையை வலியுறுத்தினால் இந்தியாவிற்கு வெளியே மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் நல்ல வளர்ச்சியை கொடுக்க முடியும். இங்கு இந்தியாவில் லட்சக்கணக்கான தொழில் முனைவோர்கள் உள்ளனர், அதுவே இந்தியா உலகளவில் தொழில் முயற்சிக்கான மூலதனமாக அமையக் காரணமாக இருக்கும்.

தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் ஸ்டார்ட் அப் அரசியல் தந்திரதிற்கு ஒரு புதிய கருவியாக இருக்கும். இந்த சக்தியில் தான் இந்திய அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உலகப் பொருளாதாரத்தில் இடையூறு ஏற்படுகின்ற இந்த சூழலில், எவரொருவர் புதுமையாகவும் சிறப்பான முறையிலும் பிரச்சினைகளை தீர்கிறாரோ அதை பொறுத்தே வருங்காலத்தில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்படி நடந்தால் இந்தியா முன்னேறி பல மடங்கு உயரும்.

உலக வங்கி அதாஸ் முறை படி 2016-ல் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி (GNP) $1,680 ஆகும். இதை சீனா $8260 மற்றும் அமெரிக்கா $56,180 ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா மிக தொலைவில் உள்ளது.

நம் நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்த இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆனால் தொழில்முனைவோர் அதிகரித்தால் பண வருகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை வாழ்வாதாரத்தை குறைத்துக் கொண்டால் குறைந்த வருமானத்தில் நல்ல வாழ்க்கை முறையை வாழ முடியுமா? இந்த கேள்விக்கு அரசு, ஊடகம் மற்றும் தொழில் முனைவோர் தான் பதில் அளிக்க முடியும். அதுவும் கூட்டு முயற்சிலியே கண்டறிய முடியும். கொள்கை வகுப்பாளர்களால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) எடையை அடிப்படையாகக் கொண்டு, முக்கியக் கூறுகளாக இருக்கும் உணவு, எரிபொருள், வீட்டுவசதி மற்றும் ஆடை மற்றும் காலணிகள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பணவீக்கம் சுமார் 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு எழும் கேள்வி ஏதேனும் புதிய முயற்சி இதை சீர் செய்யுமா என்பது தான்.

சமன்பாட்டின் இன்னொரு பக்கத்தில் வருமானம் மற்றும் வேலை. இங்கு வேலை பற்றாக்குறை உள்ள சூழலில் தொழில் முனைப்பு மற்றும் ஏதேனும் புதிய முறை வேலை இல்லா திண்டாட்டத்தை தீர்க்கும்மா.

தயாரிப்பு நாடு

இந்தியா ஒரு தயாரிப்பு நாடாக மாற வேண்டும். பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிதி குருக்களும் இந்தியா ஏன் இன்னும் 'சேவையை அடிப்படையாகக் கொண்ட நாடாக' உள்ளது என்பது குறித்து ஆராய வேண்டும்.

சேவையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் இருந்து தயாரிப்பு நாடாக மாற ஸ்டார்ட் அப் தொழிலுக்கு அதிக கவனம் மற்றும் பண முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவின் மேல் நிறுவனங்களும் அரசாங்கமும் இணைந்து ஒரு பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி அமைக்க நான் முன்மொழிகிறேன். இதன் ஆரம்ப முதலீடு 2000 கோடியாகும்.

இது இந்தியாவின் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள், மருந்துகள் (பொதுமக்களிடமிருந்து காப்புரிமை பெற்ற பொருட்களை உற்பத்தி செய்தல்), உயிரித் தொழில்நுட்பம், உற்பத்தி, ஐஓடி (விஷயங்கள் இணையம்), AI (செயற்கை உளவுத்துறை), வி.ஆர் (மெய்நிகர் உண்மை), ஆரோக்கியம், மற்றும் இதர இடங்களில் வேளாண்மை ஆகியவற்றில் இணைய முடியும்.

அதுமட்டும் இன்றி அரசாங்கம் இந்திய நிறுவனங்களை ஸ்டார்ட் அப் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பங்கேற்க வலிவுருத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்டார்ட் ஆப் தொழிலுக்கு அதிக வரவேற்ப்பு கொடுக்கின்ற இந்த சூழலில் இந்திய நிறுவனங்கள் தயங்குவது ஆச்சிரியமாகவே உள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்ற தொழிலை பார்த்து தொழில் செய்வதாகவும் தேவையற்ற பொருள்களை உற்பத்தி செய்வதாகவும் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. நுகர்வோர் தொழில்நுட்பத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் கவனம் செலுத்துகின்ற காரணமத்தினால் அதில் உருவாக்க செலவு குறைவாகவே உள்ளது.

தலையில் கல்வி கடன் சுமையை சுமந்திருக்கும் ஒரு மாணவனால் எப்படி பொருட்கள் உற்பத்தி செய்ய பெரிய நிறுவனம் அமைக்க முதலீடு செய்ய முடியும்? அவர்களால் கடனை திருப்பி கட்டும் நோக்கத்தை மட்டுமே பார்க்க முடியும், இது அவர்களுக்கு பிடிக்காத ஒரு வேலையை செய்ய தள்ளுகிறது. அவர்கள் ஆராய்ச்சியைத் தழுவி அவற்றை மேம்படுத்துவது அவசியம்.

உலகளாவிய ஒத்துழைப்பு

இந்தியாவை தாண்டி வெளியூரிலும் தொழில் தொடங்க அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். பிரக்சிட்டை தொடர்ந்து; ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் இந்தியாவுடன் இணைய முயல்கின்றனர். குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த சுற்றுச்சூழல் ஆற்றலை மேம்படுத்துவதற்காக இந்தியாவை நோக்கி வருகின்றனர். இரண்டு வெவ்வேறு நாடுகள் தங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒன்று சேரும் பெரும் சாத்தியம் உள்ளது. அரசாங்கம் இதற்கு அளிக்க வேண்டும்.

குறிப்பு: அமெரிக்காவிற்கு டைட்டன் கை கடிகாரங்களை எடுத்துச்செல்ல அமேசான் தேவை என்பது சோகமான ஒன்று, ஆனால் டைட்டான் மட்டுமல்லாமல் துணிகள் அதாவது ’ஃபேப் இந்தியா’ போன்ற பிராண்டுகளும் இதன் மூலம் சுலபமாக உலக சந்தையை அடையமுடியும்.

அரசாங்கம் ஸ்டார்ட் அப்-க்கு என்று ஒரு தொடக்க திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது, ஆனால் அதன் வரையறை மாற வேண்டும். ஸ்டார்ட் அப் பற்றிய ஒரு குறுகிய பார்வை இருக்கக் கூடாது.

எளிமையான தொடக்கம்

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்கு அரசாங்கம் எளிய முறைகளை அமைக்க வேண்டும்.

இந்திய ஸ்டார்ட் அப்-க்கு வெளியில் இருந்து திறமைகளை ஈர்த்துக் கொள்ள விரும்பினால், உயர் கட்டணத்தை நீக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப்பிர்காக ஒதுக்கப்பட்ட 10000 கோடியை எந்த வித தாமதம் இன்றி உடனடியாக கொடுக்க வேண்டும். கொள்கை வகுப்பாளர்களே யார் நிதி உதவி செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கக்கூடாது. தொழில் முனைவோர் பங்கேற்பு தேவை என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த விஷயத்தில், இளம் தொழில் முனைவோர்களை கொள்கை ரீதியாக அழைப்பதற்காக மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஸ்டார்ட் அப் இந்தியா இந்தியாவிலிருந்து செயல்படும் தொழில்கள் மற்றும் துணிகர முதலீட்டாளர்களிடமிருந்து அதிக பங்கு பெற வேண்டும்.

தரவு சேமித்தல்

இந்தியா தன்னை தரவு சேமித்தலில் செழுமையான நாடு என்று சந்தைப்படுத்த வேண்டும்; அது நம் பலம், எனவே நாம் அதை பற்றி உலகளவில் அதிகம் பேச வேண்டும். முன்னாள் இன்ஃபோசிஸ் மற்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தலைவர் நந்தன் நீலக்கனி இவ்வாறு கூறுகையில்,

 "நாங்கள் தரவுகளைப் பயன்படுத்துவது பற்றி பேசுகிறோம் அது உண்மையில் இந்தியாவின் சிறு வணிகங்களுக்கு முதலீடு மற்றும் வளர்ச்சியின் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைக்கும் வழிவகுக்கும்,"

என்று அவர் பெங்களூரில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கூறினார். ஜிஎஸ்டி மூலம் டிஜிட்டல் அடிச்சுவடுகளின் கிடைக்கும் தன்மை காரணமாக நிறுவனங்கள் தரவுகள் அதிகம் உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான சிறு தொழிலுக்கு ஜிஎஸ்டி மூலம் கடன் உதவி கிடைக்கும். அவர்களுக்கு கடன் கிடைக்கும்போது, தொழில் வளரும், தொழில் வளரும்போது அதிக வேலை வாய்ப்பு அமையும்," என்று அவர் கூறினார்.

திரு.மோடி, நீங்கள் உங்கள் தொலைநோக்கு பார்வையில் ஒரு தொழில்முனைவோர். மென்மையான சக்தியின் முக்கியத்துவத்தை உங்கள் அளவு எவரும் அறியவில்லை. இந்த 70-வது சுதந்திர ஆண்டில் இந்தியாவின் புதிய கதையை நாம் எழுதினால் அதில் ஸ்டார்ட் அப் கதை முதல் பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்தா ஷர்மா, யுவர்ஸ்டோரி நிறுவனர்.